செய்திகள் :

GCT செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் 2026; 50,000 டாலர் பரிசு வென்ற பிரக்ஞானந்தா

post image

இந்திய சதுரங்க ஆட்டக்காரர் ஆர்.பிரக்ஞானந்தா GCT செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் (Blitz) 2026 சதுரங்கப் போட்டியில் 35 - 23 என்ற புள்ளிகளை பெற்று இறுதிக்கு முந்தைய சுற்றில் ஜவோகிர் சிந்தரோவை வீழ்த்தி இப்போட்டியை வென்றார்.

இவர் இப்போட்டியில் மற்ற போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி தனது தொய்வற்ற ஆட்டத்தினால் 1.5 புள்ளிகளில் முன்னிலை பெற்றார்.

பிரக்ஞானந்தா ஒரு ரேபிட்(Rapid) மற்றும் பிளிட்ஸ்(Blitz) போட்டியை வெல்வது இதுவே முதன் முறையாகும். 18 க்கு 12 என்ற புள்ளிகளை பெற்று தனது இறுதிச்சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொண்டார். தனது ஒன்பதாவது சுற்றில் டச்சு கிராண்ட் மாஸ்டர் ஜோர்டன் வான் ஃபாரஸ்டிடம் தோல்வியை சந்தித்தபோதிலும், இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

பிரக்ஞானந்தா
பிரக்ஞானந்தா

இதைத் தொடர்ந்து பிரக்ஞானந்தா கூறியதாவது :

``நான் இன்றைய ஆட்டத்தில் முட்டள்தனமான எந்த மூவ்-களையும் செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால் என்னுடைய இரண்டாவது ஆட்டத்தில் அதைத்தான் சரியாக செய்தேன். என்னுடைய ஃபைனல் ரிசல்ட்ஸ் பார்க்கும்போது ஒன்றரை சுற்றுகள் மீதம் இருந்தாலும் அந்த வெற்றி எளிதாக கிடைத்தது போல தோன்றலாம். ஆனால் அந்த நேரம் எனக்கு மிகவும் பரபரப்பாக இருந்தது‌. அதைத் தாண்டி வெற்றி அடைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் வெற்றி பெறும் நிலையில் இருந்தாலும், ஆட்டத்தை சமன் செய்வதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் ஆடிய இரண்டாவது ஆட்டத்தின் இறுதியில், ஜவோகிருக்கு எதிராக தோல்வியைச் சந்தித்தேன்.

அவர் கடைசிவரை விடாமுயற்சியுடன் போராடினார். அவருக்கு என் பாராட்டுகள். நான் முட்டாள்தனமான மூவ்களை தவிர்க்க விரும்பினேன். ஆனால், எனது ஆட்டத்தின் தரம் நன்றாக இருந்ததாகவே உணர்ந்தேன். அதனால் ஆட்டத்தின் மீதான கட்டுப்பாட்டை முழுமையாக தக்கவைத்துக்கொண்டு, தேவையற்ற மூவ்களை தவிர்த்துவிட்டு நிதானமாக ஆடவே முயற்சி செய்தேன்.

மேலும், ரேபிட் (Rapid) மற்றும் பிளிட்ஸ் (Blitz) பிரிவுகளில் தனித்தனியாக வெற்றி பெற நான் ஆசைப்பட்டேன். அதை என்னால் சாதிக்கவும் முடிந்தது, இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த ஆண்டு, ரேபிட் மற்றும் பிளிட்ஸ் போட்டிகளில் கிடைத்த முடிவுகள், 'சின்குஃபீல்ட் கோப்பை' (Sinquefield Cup) தொடரில் சிறப்பாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்துக்கு என்னை தள்ளியது.

பிரக்ஞானந்தா

ஆனால் இம்முறை, அதே முடிவுகள் சின்குஃபீல்ட் தொடருக்கு முன்பாகவே என்னை மிகவும் சாதகமான நிலையில் இருக்க உதவியுள்ளன. அதில் நான் முன்னேற்றம் கண்டிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ரேபிட் மற்றும் பிளிட்ஸ் ஆட்டத்தில் என்னுடைய எனர்ஜி சிறப்பாக இருந்தது" என்றார்.

முதல் இடத்தைப் பிடித்த ஆர்.பிரக்ஞானந்தா பட்டத்துடன் 50,000 டாலர் பரிசுத்தொகையையும், இரண்டாம் இடத்தைப் பிடித்த ஜவோகிர் சிந்தரோவ் 40,000 டாலர் பரிசுத்தொகையையும், மூன்றாம் இடத்தைப் பிடித்த வெஸ்லி சோ 30,000 டாலர் பரிசுத்தொகையைப் பெற்றுள்ளார்கள். பிளிட்ஸ் (Blitz) பிரிவின் இறுதி ஒன்பது சுற்றுகளில் பிரக்ஞானந்தா மூன்றில் வெற்றி, ஐந்தில் டிரா (draws) பதிவு செய்து, ஓர் ஆட்டத்தில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் கவனம் பெறும் பிக்கிள்பால்... கோலாகலமாகத் தொடங்கியது TNPPL சீசன் 2!

தமிழ்நாட்டில் பிக்கிள்பால் (Pickleball) விளையாட்டைத் தொழில்முறை அளவில் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கில், 'Cavin's Tamil Nadu Pickleball Premier League (TNPPL) – Season 2'-ன் தொடக்க விழா... மேலும் பார்க்க

காமன்வெல்த் போட்டி முடிந்ததும் மாயமான பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர்; கிளாஸ்கோவில் என்ன நடந்தது?

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி (Commonwealth Games 2026) நிறைவடைந்த நிலையில், பாகிஸ்தான் குத்துச்சண்டை அணியைச் சேர்ந்த வீரர் குத்ரத்துல்லா (Qudratullah) திடீரென மாயமான சம்பவம் சர்வதேச விளையாட்டு வட்ட... மேலும் பார்க்க

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற திருவாரூர் வீரர் - கொண்டாட்டத்தில் சொந்த கிராம மக்கள்!

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த பிரவீன் சித்திரவேல்,ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த்விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல்போட்டியில் வெ... மேலும் பார்க்க

CWG: வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழ்நாட்டு வீரர்கள்; டிரிபிள் ஜம்ப் போட்டியில் இரண்டு பதக்கங்கள்!

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் டிரிப்பிள் ஜம்ப் இறுதிப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கமும், செல்வ பிரபு திரு... மேலும் பார்க்க

CWG: "என் கவலைகளை ChatGPT- உடன் பகிர்ந்தேன்" - டெகாத்லான் போட்டியில் வெண்கலம் வென்ற தேஜஸ்வின் சங்கர்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் டெகாத்லான் (Decathlon) பிரிவில் 7,976 புள்ளிகள் குவித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர். இந்தப் பிரிவில் இந்தியா சார்பில் பதக்கம் வெல்வ... மேலும் பார்க்க

CWG: காமன்வெல்த் போட்டியில் அடுத்தடுத்து தங்கம்; சாதனை படைத்த ப்ரீத்தி பவார், ஜாஸ்மின்!

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் பங்கேற்றிருக்கின்றனர். இதில், குத்துச... மேலும் பார்க்க