செய்திகள் :

GOAT-ன் ஆட்டம் தொடரும்... வரலாற்றில் புதிய மைல்கல்; உலகக் கோப்பையில் களமிறங்குகிறார் மெஸ்ஸி!

post image

கால்பந்து உலகின் சகாப்தம் முடிந்துவிடவில்லை. லயோனல் மெஸ்ஸியின் கால்கள் இன்னும் ஓயவில்லை. கத்தாரில் உலகக் கோப்பையை வென்ற பிறகு, அதுவே ஆவரின் கடைசி உலகக் கோப்பை எனப் பலரும் கருதிய நிலையில், அந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் மெஸ்ஸி. ஆம், 2026-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கோப்பையிலும் அர்ஜென்டினா அணிக்காகக் களமிறங்கவிருக்கிறார் கால்பந்தாட்ட உலகின் GOAT!

வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்!

இந்த அறிவிப்பின் மூலம், கால்பந்து வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தை எழுத இருக்கிறார் லயோனல் மெஸ்ஸி. இதுவரை, கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் எந்த வீரரும் ஆறு தொடர்களில் பங்கேற்றதில்லை. லோதர் மத்தேயூஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஆண்ட்ரேஸ் குவார்டடோ போன்ற ஜாம்பவான்கள் ஐந்து உலகக் கோப்பைகளில் விளையாடியதே சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை முறியடித்து, ஆறு உலகக் கோப்பைகளில் பங்கேற்கும் முதல் வீரர் என்ற சரித்திரப் பெருமையை மெஸ்ஸி தனதாக்க உள்ளார்.

லியோனல் மெஸ்ஸி

20 வருடப் பயணம்!

2006-ம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த உலகக் கோப்பையில், ஒரு இளம் வீரராகத் தனது பயணத்தைத் தொடங்கியவர் மெஸ்ஸி. அன்று முதல் இன்று வரை, அர்ஜென்டினா அணியின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார்.

2014-ல் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையைத் தவறவிட்டது, அதன்பிறகு 2022-ல் கத்தாரில் கோப்பையை வென்று தனது வாழ்நாள் கனவை நனவாக்கியது என அவரது உலகக் கோப்பைப் பயணம் உணர்ச்சிகரமான பல தருணங்களைக் கொண்டது. அந்தப் பயணம், இப்போது ஆறாவது அத்தியாயத்தை நோக்கி நகர்கிறது.

உலக சாம்பியனாக ஒரு ஆட்டம்!

கத்தார் உலகக் கோப்பைக்குப் பிறகு, மெஸ்ஸி சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவார் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உலக சாம்பியன் என்ற பெருமையுடன் அர்ஜென்டினா ஜெர்சியில் விளையாடுவதில் அவருக்கு இருந்த ஆர்வம், அவரைத் தொடர்ந்து விளையாடத் தூண்டியுள்ளது. அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் தொடரில் இன்டர் மயாமி அணிக்காகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதும், அவரது உடற்தகுதி இன்னும் உச்சத்தில் இருப்பதும் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

2026-ல் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையில், நடப்பு சாம்பியனாக அர்ஜென்டினா களமிறங்கும்போது, அந்த அணிக்கு மெஸ்ஸியே தலைமை தாங்குவார் என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது.

GOAT-ன் ஆட்டம் இன்னும் முடியவில்லை.!

FIFA: 'காவல்காரன் Vozinhaவும்; சம்பவக்கார டிஃபெண்டர்களும்'- ஸ்பெயினுக்கு எதிராக நிரூபித்த Cabo Verde

கால்பந்து உலகின் அசுர பலம் கொண்ட ஸ்பெயினுக்கு எதிராக, முதல் முறையாக உலகக்கோப்பை மேடையில் களம் கண்ட காபோ வெர்டே அணி, 0-0 என்று போட்டியை டிரா செய்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.சில போட்டிக... மேலும் பார்க்க

FIFA 2026: ஆஸ்திரேலிய அணியில் களம் இறங்கி சாதனை படைத்த இந்திய வம்சாவளி நாயகன்; யார் இந்த நிஷான்?

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் தொடக்க ஆட்டத்திலேயே ஒட்டுமொத்த உலகையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு மாபெரும்ஆச்சரியம்நிகழ்ந்துள்ளது. சர்வதேச கால்பந்து அரங்கில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக... மேலும் பார்க்க

இந்திய அணி இல்லை என்றால் என்ன? FIFA கோப்பை தொடரில் தடம் பதிக்கும் இந்திய வம்சாவளி வீரர்கள்!

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி விளையாட வேண்டும் என்பது கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நீண்ட நாள் கனவாகும். 2026 ஆண்டு உலகக் கோப்பையிலும் இந்திய அணி தகுதி பெறவில்லை என்றாலும், இந்... மேலும் பார்க்க

FIFA: 36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் வெற்றி; ஹைட்டியை ஸ்காட்லாந்து வீழ்த்தியது எப்படி?

2026 ஆம் ஆண்டு ஃபிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 'குரூப் சி' பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், ஸ்காட்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஹைட்டி அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை பட... மேலும் பார்க்க

`எண்களுக்குள் 2026 உலகக்கோப்பை' - 1248 வீரர்கள், புதிய அணிகள்! தலைசுற்ற வைக்கும் புள்ளிவிவரங்கள்!

கால்பந்து ரசிகர்களின் மிகப்பெரிய திருவிழாவான ஃபிஃபா உலகக்கோப்பை, இந்த முறை வரலாறு காணாத பிரமாண்டத்துடன் அரங்கேற உள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 உலகக்... மேலும் பார்க்க