செய்திகள் :

Google Pay-ல் 'Pocket Money' ஆப்ஷன்: க்ளிக் செய்தால் மொத்த பணமும் காலியா? |Explainer & Fact Check

post image

லேட்டஸ்ட் அப்டேட் 'கூகுள் பே'-யில் இப்போது 'People' பிரிவில், முதல் வரிசையில் முதல் ஐகானே, 'Pocket Money' என்ற ஒன்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த ஐகான் குறித்து தற்போது ஆடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒருவர் இந்த ஐகானைத் தொட்டால், வங்கிக் கணக்கில் இருக்கும் மொத்த பணமும் காலியாகி விடும் என்று பேசுகிறார். இது ஒரு மோசடி வலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அது உண்மையா... என்பதை நாம் 'Fact Check' செய்து பார்த்தோம்.
கூகுள் பே

'பாக்கெட் மணி' என்ற கூகுள் பேயின் புதிய அறிமுகம், பெயருக்கு ஏற்றாற்போல, அது வழக்கமான பாக்கெட் மணி கான்செப்ட் தான்.

இதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்.

ஸ்கூல், காலேஜிற்கு செல்லும் போது, அம்மா, அப்பா கையில் கொஞ்சம் செலவுக்குக் காசு கொடுத்துவிடுவார்கள். அது அந்தக் காலம்.

இப்போது இந்த டிஜிட்டல் காலத்தில், கூகுள் பேயில் காட்டும் 'பாக்கெட் மணி'யில் யாருக்கு ஒரு மாதத்திற்கு எவ்வளவு காசு தரலாம்... தர வேண்டும் என்று இணைத்துவிட்டால், அவர்கள் அந்த அளவிற்கு செலவு செய்துகொள்ளலாம்.

உங்கள் மகளுக்கோ, மகனுக்கோ ரூ.5,000-த்தை பாக்கெட் மணியாக செட் செய்துவிட்டால், அவர்கள் இந்த ஆப்ஷனில் செலவு செய்யும் ரூ.5,000 உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து செல்லும்.

பாக்கெட் மணி 'இவ்வளவு' என்று செட் செய்ய முடியாது என்பவர்கள், 'Approve Every Payment' என்கிற ஆப்ஷனைப் பயன்படுத்தலாம்.

அதாவது இந்த ஆப்ஷனில் அவர்கள் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து செலவு செய்யும் ஒவ்வொரு பேமென்டுகளுக்கும் உங்களது ஒப்புதல் தேவை.

பாக்கெட் மணி
பாக்கெட் மணி

பாக்கெட் மணி அளவை செட் செய்கிறீர்களோ, அப்ரூவ் எவ்ரி பேமென்ட் கொடுக்கிறீர்களோ - எதுவாக இருந்தாலும் முதலில் உங்களிடம் இருந்து நீங்கள் யாருக்கு பாக்கெட் மணி செட் செய்கிறீர்களோ, அவர்களுக்கு 'இன்வைட்' செல்லும்.

அவர்கள் அதற்கு 'accept' கொடுத்ததும் தான், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் செல்ல ஆரம்பிக்கும்.

இந்த ஆப்ஷனுக்கு ஒப்புதல் கொடுப்பவர்கள், அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து பணம் செலுத்த முடியாதா என்று கேட்டால், 'முடியும் தான்'.

உங்கள் மகள் அல்லது மகன் ஒவ்வொரு பேமென்ட் செய்யும் போதும், 'Choose account to pay with' என்கிற ஆப்ஷன் காட்டும்.

அதில் அவர்கள் செலெக்ட் செய்துக்கொள்ளலாம்.

இந்தப் பாக்கெட் மணி ஆப்ஷனில் சில நடைமுறைகளும், கட்டுப்பாடுகளும் உள்ளது. அவை...

> ஒருவர் அதிகபட்சம் ஐந்து பேருக்கு பாக்கெட் மணி செட் செய்ய முடியும்.

> பாக்கெட் மணி யாருக்கு செட் செய்கிறோமோ, அவர்களின் போன் நம்பர் உங்கள் போனில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

> அவர்கள் கூகுள் பே ஆப்பில் பதிவு செய்திருக்க வேண்டும்.

> தொகை செட் செய்யப்பட்டதும், அதன் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பேமென்ட்டுகளையும் செட் செய்தவர்கள் டிராக் செய்ய முடியும்.

பாக்கெட் மணி
பாக்கெட் மணி

> பாக்கெட் மணியில் செலவு செய்யப்படும் ஒவ்வொரு பேமென்ட்டுகளும், உங்களது கணக்கில் இருந்து தான் கழிக்கப்படும்.

> மாதா மாதம் தொகையின் அளவை மாற்றிக்கொள்ளலாம்.

இதைத் தவிர, மோசடியான ஒரு விஷயத்தை கூகுள் பே என்கிற அப்-டு-டேட் தொழில்நுட்பம், அவர்களது ஆப்பில் அதுவும் முதல் வரிசையில் வைத்திருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள் மக்களே.

AI மீது 'மாயக் காதல்': அமெரிக்கத் தொழிலதிபர் தற்கொலை - கூகுள் மீது வழக்கு

இன்று உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்டதாக நம்பும்படி ஏஐ உலகம் உருவாகியிருக்கிறது. குறிப்பாக ஜெமினி, சாட் ஜிபிடி போன்ற நேரடி உரையாடல் அனுபவம் பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அவை இன்னொரு ஆபத்... மேலும் பார்க்க

வாகனத்தின் டயர் தேய்ந்துவிட்டதா... கண்டுபிடிப்பது எப்படி? - இது தெரியாமப் போச்சே?! - 18

புதிதாக டயர் வாங்கும்போது அல்லது காரைச் சுத்தம் செய்யும்போது, டயரின் இடுக்குகளில் சிறிய ரப்பர் கோடுகள் அல்லது மேடுகளை நீங்கள் கவனித்திருக்கலாம். இவை வெறும் அலங்காரத்திற்காக உருவாக்கப்பட்டவை அல்ல.டயரின... மேலும் பார்க்க

1972 Vs 2026: தொழில்நுட்பம் மாறினாலும் மாறாத பூமியின் வசீகரம் - நாசாவின் வரலாற்றுப் பதிவு!

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, 'அப்போலோ' விண்கலத்தில் சென்ற வீரர்கள் நிலவில் கால் தடம் பதித்தபோது, ஒட்டுமொத்த உலகமே வியப்பில் உறைந்து போனது. அந்த வரலாற்றுத் தருணத்திற்குப் பிறகு, மீண்டும் மனிதர்களை நி... மேலும் பார்க்க

QR Code: ஸ்கேன் செய்யும் கறுப்பு வெள்ளைப் படத்தின் ரகசியம் என்ன? - இது தெரியாமப் போச்சே?! - 13

நாம் தினமும் QR Code ஸ்கேன் செய்கிறோம். கறுப்பு , வெள்ளை கலந்த அந்தப் படம் எப்படி வேலை செய்கிறது என்று தெரியுமா? ஸ்கேனர் எப்போதும் கறுப்பு வரிகளைப் படிக்காது, அவற்றுக்கு இடையே உள்ள வெள்ளை இடைவெளியைத்த... மேலும் பார்க்க

'உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை' - இந்த மெசேஜ் வந்தால் உடனே அலர்ட் ஆகுங்க!

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தம் முடிந்து 'இறுதி வாக்காளர் பட்டியலும்' வெளியாகிவிட்டது. இன்னும் 20 நாள்களில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலே நடைபெற உள்ளது. இந்த நேரத்தில், பலருக்கு 'தற்போது வெளியா... மேலும் பார்க்க

Honda: ஆற்று மணலுக்கு முற்றுப்புள்ளி; பாலைவன மணலில் புரட்சி செய்யும் ஹோண்டா!

வெறும் கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் தயாரிப்பதோடு நின்றுவிடாமல், உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்குத் தீர்வு காணக் களம் இறங்கியுள்ளது ஹோண்டா (Honda). அதன் ஒரு பகுதியாக, ஒரு புதிய ஸ்டார்ட்-அப... மேலும் பார்க்க