செய்திகள் :

GT vs CSK: "சென்னை, பெங்களூரு அணிகளுக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம்; ஆனால்..." - சுப்மன் கில்

post image

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.21) ஆட்டத்தில் குஜராத் அணியும், சென்னை அணியும் மோதின.

இதில் குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருக்கிறது. தோல்வியைத் தழுவிய சென்னை அணி மூன்றாவது முறையாக ப்ளே-ஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் தொடரில் இருந்து வெளியேறுகிறது.

GT vs CSK
GT vs CSK

இந்நிலையில் வெற்றி குறித்து பேசியிருக்கும் குஜராத் கேப்டன் சுப்மன் கில், "ப்ளே-ஆஃபிற்கு முன்பு எங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. இந்த வேகத்தோடும், எழுச்சியோடும் அடுத்த கட்டத்திற்குச் செல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

நான் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது. நிச்சயமாக ஒவ்வொரு முறையும் ஆட்டமிழக்கும்போது, 'இதை விட சற்று வித்தியாசமாக விளையாடியிருக்கலாமோ' என்று தோன்றத்தான் செய்யும். ஆனால், ஒட்டுமொத்தமாக எனது பேட்டிங் வடிவம் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.

இந்த முறை பந்துகளைக் கையாண்ட விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. இதே போல் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். மைதானத்திற்கு வந்து எங்களுக்கு ஆதரவு தரும் ரசிகர்களுக்கு நன்றி.

சுப்மன் கில்
சுப்மன் கில்

ஆர்சிபி அல்லது சிஎஸ்கே போன்ற பெரும் ரசிகர் பட்டாளம் கொண்ட அணிகளுக்கு எதிராக விளையாடும்போது, எங்கு விளையாடினாலும் அவர்களுக்கு ஒரு கூடுதல் ஆதரவு இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்.

ஆனால், அதற்காக எங்கள் ஆட்ட முறையில் எந்த மாற்றமும் இருக்காது நாங்கள் சிறப்பாகத்தான் விளையாடுவோம்" என்று உத்வேகமாகப் பேசியிருக்கிறார்.

GT vs CSK: "அவர் அணியில் இல்லாதது எங்களுக்குப் பெரிய இழப்புதான்" - யாரைச் சொல்கிறார் ருதுராஜ்?

ஐபிஎல் தொடரின் தனது கடைசி போட்டியை குஜராத்திற்கு எதிராக விளையாடிய சென்னை அணி, 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி, மூன்றாவது முறையாக பிளே-ஆஃப் செல்லாமல் தொடரை முடிக்கிறது. இப்போட்டிக்குப் பின்ன... மேலும் பார்க்க

`எல்லாம் சரி, அந்த கொண்டாட்டத்துக்கு என்ன அர்த்தம்?' - வைபவ் சூரியவன்ஷி சொன்ன சிம்பிள் பதில்

தொடரின் மிக முக்கியமான கட்டத்தில், தனது மூன்றாவது ஆட்டநாயகன் விருதை வென்ற இளம் வீரர், களத்தில் காட்டும் அதே பாணியை தனது பேச்சிலும் வெளிப்படுத்தியுள்ளார். நேற்றைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பின்... மேலும் பார்க்க

CSK: `கேப்டன்சியில் தடுமாறும் ருதுராஜ்; அடுத்த சீசனில் சஞ்சு சாம்சன்.!' - முன்மொழிந்த மனோஜ் திவாரி

ஐபிஎல் தொடரில் மற்றுமொரு ஏமாற்றமளிக்கும் சீசனுக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமைப் பொறுப்பில் பெரிய மாற்றம் வரலாம் என்ற பேச்சுகள் எழத்தொடங்கியுள்ளது. இந்த சீசனில் முதல் நான்கு இடங... மேலும் பார்க்க

CSK: 'அணியின் முன்னேற்றத்திற்கு சற்று காலம் எடுக்கும்; ஆனால் ருதுராஜ் தனது வேலையை.!'- பிளெமிங்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே-18) ஆட்டத்தில் சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது சென்னை அணி. இதன் மூலம் சென்னை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்... மேலும் பார்க்க

CSK vs SRH: “அடுத்த ஆண்டு புதிய சிஎஸ்கேவாக மீண்டெழுவோம்!” - கேப்டன் ருதுராஜ் நம்பிக்கை

ஐபில் தொடரில் நேற்று (மே-18) நடைபெற்ற சென்னை vs ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி சென்னை அணிக்கு ஒரு வாழ்வா, சாவா போட்டியாக பார்க்கப்பட்ட போ... மேலும் பார்க்க

IPL: ஆர்சிபி முதலிடம்; பஞ்சாப்பிற்கு சறுக்கல்! - ப்ளே ஆஃப் மேடையை அலங்கரிக்கப்போகும் அணிகள் எவை?

2026 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிகாரபூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக கம்பீரமாக நிற்க, மீதமுள்ள 3 இடங்களுக்கான பலப்பரீட்சை... மேலும் பார்க்க