செய்திகள் :

'HELP IS ON ITS WAY' - ஈரான் மக்களுக்கு ட்ரம்ப் மெசேஜ்; மீண்டும் ஈரானை தாக்குமா அமெரிக்கா?

post image

ஈரானில் நடக்கும் உள்நாட்டுப் பிரச்னையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகுந்து என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறார்... செய்துகொண்டிருக்கிறார்.

நேற்று முன்தினம், ஈரான் உடன் வணிகம் செய்யும் அனைத்து நாடுகளின் மீதும் அமெரிக்கா 25 சதவிகிதம் வரி விதிக்கும் என்று கூறியிருந்தார் ட்ரம்ப்.

முன்னர், ஈரான் போராட்டக்காரர்கள் மீது ஈரான் அரசு தாக்குதல் நடத்தினால், அது இதுவரை காணாத விளைவுகளைச் சந்திக்கும் என்று வேறு எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் தான், ஈரான் போராட்டத்தில், 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர் என்கிற செய்தி வெளியாகி உள்ளது.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

ட்ரம்ப் பதிவு

நேற்று ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

"ஈரான் நாட்டுப்பற்றாளர்களே, தொடர்ந்து போராடுங்கள். உங்களுடைய அமைப்பைக் கையிலெடுங்கள்.

போராட்டக்காரர்களை கொல்பவர்கள் மற்றும் அவர்களைத் துன்புறுத்துபவர்களின் பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் பெரிய விலை கொடுக்க வேண்டும்.

போராட்டக்காரர்களைக் கொல்லும் இந்த அறிவில்லாத கொலைகள் முடியும் வரை, ஈரான் அதிகாரிகளுடன் நடக்கும் அனைத்து சந்திப்புகளையும் ரத்து செய்துவிட்டேன்.

உதவி உங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது" என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் தாக்குதலா?

ஏற்கெனவே, ஈரான் மீது கடும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார் ட்ரம்ப். 'HELP IS ON ITS WAY' என்று அவர் குறிப்பிட்டிருப்பதை வைத்துப் பார்த்தால், மீண்டும் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துமா என்கிற கேள்வி எழுகிறது.

காரணம், 2025-ம் ஆண்டு ஜூன் மாதம், ஈரான் - இஸ்ரேல் இடையே போர் மூண்ட போது, தன் பங்கிற்கு, அமெரிக்காவும் ஈரானில் தாக்குதலை நடத்தியது.

கல்வியும் ஒரு தேர்தல் ஆயுதமே! - காமராஜர் வழி ‘அரசியல்’ | ‘வாவ்’ வியூகம் - 01

கூட்டணி வியூகங்கள், வசீகர வாக்குறுதிகள், பிரசார வியூகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி கட்சிகள் ஆட்சிக்கு வந்த கதைகளை, சமீபத்திய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தும் கட்டுரைகளை உள்ளடக்கிய தொடர்தான் ‘வாவ்’ வியூகம்.‘... மேலும் பார்க்க

`அண்ணாமலை காலை வெட்டுவோம்' - ஆவேசம் காட்டும் தாக்கரே ஆதரவாளர்கள் - மும்பையில் நடந்தது என்ன?

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட, மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையோடு முடிந்துவிட்டது. மும்பையில் நேற்று தொடங்கி வரும் 16ம் தேதி வர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: 'நிலம், கார், வெளிநாட்டுப் பயணம்' - வாக்குறுதிகளை வாரி வழங்கும் வேட்பாளர்கள்!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு வரும் 15-ம் தேதி தேர்தல் நடக்கிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தேர்தல் நடப்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.எப்படியும் ... மேலும் பார்க்க

Iran: பற்றி எரியும் ஈரான்; போராட்ட பூமியில் 2,000-ஐ தொட்ட உயிர் பலி! - தற்போதைய நிலவரம் என்ன?

மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட காரணங்களால் ஈரான் நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரப் போராட்டம் நடந்துவருகிறது. தெஹ்ரான் நகரின் மையப்பகுதிகளில் துப்பாக்கி ... மேலும் பார்க்க

தமிழில் பொங்கல் வாழ்த்து முதல் பழங்குடிகளுடன் நடனம் வரை... ராகுல் காந்தி கூடலூர் விசிட் க்ளிக்ஸ்!

கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவி... மேலும் பார்க்க

`பாண்டிச்சேரி மக்களின் குரலாக நமது மக்கள் முன்னேற்ற கழகம் ஒலிக்கும்' - பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா

பாண்டிச்சேரி ( pondichery ) யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று `நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின்' தலைவர் ( NMMK ) ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் நடந்த மாநில மாநாட்டில் தீர்மானம் நிற... மேலும் பார்க்க