செய்திகள் :

Holi: "வண்ணங்களால் வசந்தத்தை வரவேற்கிறோம்!" - வெலிங்டன் ராணுவ குடியிருப்பில் களைகட்டிய ஹோலி பண்டிகை

post image

வட மாநிலங்களில் பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருக்கிறது ஹோலி பண்டிகை. கடந்த இரண்டு நாள்களாக நாடு முழுவதும் ஹோலி பண்டிகை களைகட்டியிருக்கிறது. வடமாநில மக்கள் அதிகம் வாழும் நீலகிரி மாவட்டத்திலும் ஹோலி பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.

ஹோலி பண்டிகை

மலை காய்கறி தோட்டங்களில் தினக்கூலியாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் முதல் மத்திய அரசு நிறுவனங்கள் வரை வண்ணமயமாகக் காணப்படுகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய குடியிருப்புப் பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக உற்சாகம் குறையாமல் ஹோலி கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

ஹோலி கொண்டாட்டம் குறித்துப் பகிர்ந்த ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், "வெலிங்டன் பகுதியில் ராணுவ வீரர்களுக்கான பயிற்சி மையம் மற்றும் முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன. நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இங்கு ராணுவ வீரர்களாகவும், முப்படை அதிகாரிகளாகவும் இருக்கிறார்கள். அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் அண்டை அயலாருடன் சகோதரத்துவத்துடன் இருக்கிறோம்.

ஹோலி பண்டிகை

இந்தப் பகுதியில் ஹோலி பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறோம். உறைபனிக் காலம் முடிவடைந்து வசந்தத்தை வரவேற்கும் குறியீடான ஹோலியை வண்ணங்களைத் தூவி வரவேற்கிறோம். பெரியவர், சிறியவர் என்று பாராமல் ஒருவருக்கு ஒருவர் வண்ணங்களைப் பூசியும் இனிப்புகளைப் பகிர்ந்தும் கொண்டாடி வருகிறோம் " என்றனர்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

போகர் சித்தர் நிகழ்த்திய அமானுஷ்யங்கள் : இறையுதிர் காடு | Vikatan Play

சித்தர்கள் வாழ்வும் அவர்களின் செயல்பாடுகளும் அமானுஷ்யம் நிறைந்தவையாக இருக்கும். இன்றும் பொதிகை, பழநிமலை போன்ற இடங்களில் அவர்கள் அரூபமாக உலா வருவதாக தகவல்கள் உண்டு.அப்படிப்பட்ட சித்தர்களில் போகர் தனித்... மேலும் பார்க்க

காரமடை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் : பந்த சேவை எடுத்து வந்து வழிபாடு செய்த பக்தர்கள்!

கோவை காரமடை ஸ்ரீ அரங்கநாதர் கோவில் பந்த சேவைகோவை காரமடை ஸ்ரீ அரங்கநாதர் கோவில் கோவை காரமடை ஸ்ரீ அரங்கநாதர் கோவில் பந்த சேவைகோவை காரமடை ஸ்ரீ அரங்கநாதர் கோவில் பந்த சேவைகோவை காரமடை ஸ்ரீ அரங்கநாதர் கோவில... மேலும் பார்க்க

புதுச்சேரி: கடற்கரையில் எழுந்தருளிய உற்சவர்கள்... வைத்திக்குப்பத்தில் களைகட்டிய மாசிமக திருவிழா!

புதுச்சேரி வைத்திக்குப்பத்தில் மாசிமக திருவிழாபுதுச்சேரி வைத்திக்குப்பத்தில் மாசிமக திருவிழாபுதுச்சேரி வைத்திக்குப்பத்தில் மாசிமக திருவிழாபுதுச்சேரி வைத்திக்குப்பத்தில் மாசிமக திருவிழாபுதுச்சேரி வைத்த... மேலும் பார்க்க

லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் வழிபாடு! | Album

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில்ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில்ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் மேலும் பார்க்க

ஆற்றுகால் பகவதி கோயில் பொங்காலை விழா; லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு!

பாண்டிய நாட்டு ராணியின் சிலம்பை திருடியதாக பொய்யாக திருட்டுப் பட்டம் சூட்டி கோவலன் கொலைசெய்யப்பட்டார். அநீதி இழைத்து தன் கணவனை கொலைசெய்த பாண்டிய மன்னனிடம் நீதிகேட்டு சிலம்பெடுத்துச் சென்றார் கண்ணகி தே... மேலும் பார்க்க