செய்திகள் :

I’m Game: `அழகு சில நேரங்களில் அவரது திறமைக்கு ஒரு சிறிய தடை' - கயாடு லோஹர் குறித்து துல்கர் சல்மான்

post image

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த்திவ் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்

நடிகை சம்யுக்தா பற்றி...

அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் துல்கர் சல்மான், ``நடிகை சம்யுக்தா மேடைகளில் மற்றும் படப்பிடிப்புத் தளங்களில் அவர்களது நேர்மறையான ஆற்றலும் உள்ளிருக்கும் நல்லெண்ணமும் இயல்பாகவே வெளியே தெரியும். திறமையும் பேரழகும் கொண்ட அவர், மிகுந்த அறிவுக்கூர்மையுடையவராகவும் திகழ்கிறார். எப்போதும் புன்னகையுடனும் நேர்மறை எண்ணங்களுடனும் மட்டுமே காணப்படும் அவர், இந்தப் படத்தில் தனது பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மிஷ்கின் பற்றி...

இயக்குநர் மிஷ்கின் களத்தில் இறங்கிவிட்டாலே அங்கிருக்கும் சூழலே மாறிவிடும். அவர் அங்குதான் இருக்கிறார் என்பதை அனைவராலும் உணர முடியும். அந்த அளவிற்குத் தன்னுடன் ஒரு தனி ஆற்றலைக் கொண்டுவரக்கூடியவர். இந்தப் படத்தில் அவருக்கு மிகச் சுவாரசியமான ஒரு கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. தனது உடல்மொழியையும், முகபாவனைகளையும் மிக சிறப்பாகப் பயன்படுத்தி, இந்த சவாலான கதாபாத்திரத்தை மிகவும் ரசித்துச் செய்துள்ளார். திரையில் அவரது இந்த நடிப்புப் பங்களிப்பைக் காண மிகவும் ஆவலாக இருக்கிறது.

மிஷ்கின்
மிஷ்கின்

காயடு லோஹர் பற்றி..

நடிகை காயடு லோஹர் குறித்து இயக்குநர் மிஷ்கின் சார் குறிப்பிடும்போது, "அவர் மிகவும் அழகாக இருப்பதால் அவரைப் என் படத்தில் ஒப்பந்தம் செய்யவில்லை" என்று கூறியிருந்தார். ஆனால், அந்த அழகு சில நேரங்களில் அவரது திறமைக்கு ஒரு சிறிய தடையாகத் தெரிந்தாலும், அவர் அடிப்படையில் ஒரு மிகச்சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர்.

இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு தமிழ்ப் பெண்ணாகவோ, தெலுங்கு அல்லது மலையாளப் பெண்ணாகவோ மிக இயல்பாகப் பொருந்திவிடக்கூடிய அபார ஆற்றல் அவருக்கு இருக்கிறது. அந்த உள்ளூர்த் தன்மையே அவரது மிகப்பெரிய பலம். இந்தப் படத்திற்கு அவர் அளித்திருக்கும் பங்களிப்பு படத்திற்கு மேலும் வலிமை சேர்த்துள்ளது." என்றார்.

`கழுத்தில் மாட்டிய டிராக்டர் டயர்' - அசௌகரியத்துடன் திரியும் காட்டு யானை; வனத்துறை நடவடிக்கை என்ன?

அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர், பொகியல் பகுதியில் தேயிலைத் தோட்டம் இருக்கிறது. இந்தப் பகுதியில், கழுத்தில் டிராக்டர் டயர் மாட்டிக்கொண்ட நிலையில் காட்டு யானை ஒன்று உலா வந்த காட்சி அ... மேலும் பார்க்க

ஈபிள் கோபுரம் சென்ற சாமியார்கள்: `சமத்துவத்தை விட்டுத்தர முடியாது' - பெண் ஊழியர்கள் போராட்டம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே 'BAPS' (போச்சசான்வாசி அக்சர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) அமைப்பின் புதிய கோயில் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி, அந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேர... மேலும் பார்க்க

``எங்களுடன் வந்து பணியாற்றுங்கள்" - இந்திய இளைஞருக்கு நெதர்லாந்து நிறுவனம் அழைப்பு; பின்னணி என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திர சிங் சவுத்ரி (21). இணைய உலகில் ‘பிட்டு தபாஹி’ என்று பிரபலமாக அறியப்படும் இவர், தனது பகுதியில் கடுமையாக மாசுபடுத்... மேலும் பார்க்க

Viral: சொறிந்துவிடும் வேலை; மாதம் 14 லட்சம் வருமானம்; சீன இளைஞரின் வித்தியாசமான தொழில்!

சீனாவின் ஹூபய் (Hubei) மாகாணத்தைச் சேர்ந்தவர் சாங் சியாவோகியோ (Zhang Xiaoqiao - 32). இவர் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு ஏழு வெவ்வேறு வேலைகளைச் செய்தார். ஒரு கட்டத்தில் சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்க... மேலும் பார்க்க

மகள்களின் கல்விக் கனவு: `ரூ.3000 பரிசுக்காக ஒரு தாயின் செருப்பில்லா மாரத்தான்' - நெகிழ்ச்சி வீடியோ

குழந்தைகளின் கல்விக்காக ஓடிய தாயின் தீவிரம் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் (Beed) மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகாயைச் சேர்ந்தவர் ராமபாய் ரன்வீர் (47). கணவன்... மேலும் பார்க்க

``ஒரு நடிகராக சக நடிகருக்குச் சொல்கிறேன்.! " - நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட வீடியோ

கர்நாடக மாநிலம் தார்வாடில் உள்ள ‘கர்நாடகா வித்யாவர்தகா சங்க’ வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) ‘மனுஷ்யத்வதெடகே சமுதாயா’ சார்பில் சமூக மற்றும் தேசிய அளவிலான பிரச்னைகள் குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சி... மேலும் பார்க்க