ICC-ஐ விட அதிக பரிசுத் தொகையை அறிவித்த BCCI; கூடுதலாக சூரத் வைர வியாபாரியின் சர்...
ICC Women’s World Cup: "நிகரில்லாத கூட்டு முயற்சி" - மோடி, ஸ்டாலின் வாழ்த்து!
இந்திய மகளிர் அணி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்தியப் பெண்கள் உலக அரங்கில் நிகழ்த்தியுள்ள சாதனை ஒவ்வொரு இந்திய பெண் கிரிக்கெட்டருக்கும், அத்தனை விளையாட்டு வீராங்கனைகளுக்கும் ஊக்கமாக அமையும். இந்த வெற்றி குறித்து பிரபலங்கள் பலரும் நெகிழ்ந்துள்ளனர்.

அந்தவகையில் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஐசிசி பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி பிரமிக்கத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
இறுதிப்போட்டியில் அவர்களது ஆட்டம் சிறந்த திறமை மற்றும் உறுதியை வெளிப்படுத்தியது. தொடர் முழுவதும் நிகரில்லாத கூட்டு முயற்சிகளையும் உறுதிப்பாட்டையும் இந்திய அணி வெளிபடுத்தியது. நம் வீரர்களுக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்றுப்பூர்வமான வெற்றி வருங்கால சாம்பியன்களும் விளையாட்டைத் தேர்ந்தெடுக்க ஊக்கப்படுத்தும். " என வாழ்த்தியுள்ளார்.
A spectacular win by the Indian team in the ICC Women’s Cricket World Cup 2025 Finals. Their performance in the final was marked by great skill and confidence. The team showed exceptional teamwork and tenacity throughout the tournament. Congratulations to our players. This…
— Narendra Modi (@narendramodi) November 2, 2025
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்திய கிரிக்கெட்டுக்கு என்ன ஒரு தருணம்!
நமது பெண்கள் ICC Women’s World Cup கோப்பையை உயர்த்தும் போது இந்தியாவும் உயருகிறது.
இந்த மாபெரும் வெற்றிக்கு, திறமை, நிதானம் மற்றும் கூட்டு உழைப்பின் அற்புதமான வெளிப்பாடுக்கு இந்திய அணிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்.
இந்த வெற்றி பல தலைமுறையினரை பெரிய கனவுகளைக் காணவும், தைரியமாக விளையாடவும் ஊக்குவிக்கும்." என வாழ்த்தியுள்ளார்.
What a moment for Indian cricket!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 2, 2025
India reigns supreme as our women in blue lift the ICC Women’s World Cup!
Heartiest congratulations to #TeamIndia on this extraordinary triumph, a magnificent display of talent, composure, and teamwork.
This victory will inspire… pic.twitter.com/0BeB5oibkb


















