சென்னையில் களைகட்டிய `ப்ரோவோக் கலைத் திருவிழா 2025'; கலைத்துறையில் சாதித்த கலைஞ...
World cup : "வரலாறு படைத்துள்ளனர், பல தலைமுறை பெண்களை ஊக்குவிக்கும் வெற்றி" - Virat Kohli வாழ்த்து
இந்திய மகளிர் அணி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளனர்.
மகளிர் கிரிக்கெட்டில் இதுவரையில் ஆஸ்திரேலியா அணி 7 முறை, இங்கிலாந்து 4 முறை, நியூசிலாந்து ஒருமுறை உலகக் கோப்பையை வென்று ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இந்தியா வரலாறு படைத்துள்ளது.

இந்தியப் பெண்கள் உலக அரங்கில் நிகழ்த்தியுள்ள சாதனை ஒவ்வொரு இந்திய பெண் கிரிக்கெட்டருக்கும், அத்தனை விளையாட்டு வீராங்கனைகளுக்கும் ஊக்கமாக அமையும். இந்த வெற்றியைக் குறித்து பிரபலங்கள் பலரும் நெகிழ்ந்துள்ளனர்.
Virat Kohli வாழ்த்து
அந்தவகையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, "பெண்கள் வரலாறு படைத்துவிட்டனர். இத்தனை ஆண்டுகள் கடின உழைப்பு இறுதியில் உயிர்ப்பெறுவதைப் பார்க்கும்போது ஒரு இந்தியனாக என்னால் இதைவிட பெருமையாக உணர முடியாது.
இவர்கள் அனைத்து பாராட்டுகளுக்கும் தகுதியானவர்கள், இந்த வரலாற்றுச் சாதனையை நிறைவேற்றிய ஹர்மன் மற்றும் முழு அணிக்கும் பெரிய வாழ்த்துக்கள். மேலும் முழு அணி மற்றும் நிர்வாகத்திற்கும் பின்னணியில் செய்த உழைப்புக்கு வாழ்த்துக்கள்.
சபாஷ் இந்தியா. இந்தத் தருணத்தை முழுமையாக அனுபவியுங்கள். இது நம் நாட்டில் பல தலைமுறை பெண்களை ஊக்குவித்து விளையாட்டை நோக்கி நகரச் செய்யும். ஜெய் ஹிந்த்" என வாழ்த்தியுள்ளார்.




.jpg)







