'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்!' - கம்மின்ஸ் ஸ்டைலில் தென்னாப்பிரிக்க கேப்...
Shreyas Iyer: மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ஸ்ரேயஸ் ஐயர்; எப்போது இந்தியா திரும்புகிறார்?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் போது, இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், அலெக்ஸ் கேரி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது விலா எலும்பில் பலத்த காயம் அடைந்தார்.
இந்த காயத்தால், ஸ்ரேயஸ் உடனடியாக சிட்னி நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்ததைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டார்.
இதனிடையில், ஸ்ரேயஸ் ஐயர் தனது உடல்நிலை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
அதாவது, “தற்போது நான் குணமடைந்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் எனது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது. நீங்கள் எனக்குக் கொடுத்த அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. என்னை நினைவில் வைத்திருந்த அனைவருக்கும் நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்ரேயஸ் ஐயர் தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஓரிரு நாட்கள் கழித்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முழுமையாக குணமடைந்த பிறகே ஸ்ரேயஸ் இந்தியாவிற்கு திரும்புவார் என கூறப்படுகிறது.

.jpg)
















