செய்திகள் :

கிரிக்கெட் பந்து பட்டு 17 வயது ஆஸ்திரேலிய வீரர் பென் ஆஸ்டின் மறைவு; சோகத்தில் கிரிக்கெட் உலகம்!

post image

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின், பயிற்சியின்போது தலையில் பந்து பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சம்பவ நேரத்தில் பென் ஆஸ்டின் ஹெல்மெட் அணிந்து இருந்தாலும், பந்து அவரது தலைக்கும் கழுத்துக்கும் இடையில் பட்டத்தில் உடனே மயங்கி விழுந்திருக்கிறார். மருத்துவக் குழு ஓடி வந்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது. ஆனால் அங்கு சிகிச்சையின்போது பென் ஆஸ்டினின் உயிர் பிரிந்தது.

தலையில் கிரிக்கெட் பந்து பட்டு உயிரிழந்த பென் ஆஸ்டின் (17)
பென் ஆஸ்டின் (17)

17 வயதேயாகும் பென் ஆஸ்டின் கிரிக்கெட் மட்டுமல்ல, கால்பந்து மற்றும் பிற விளையாட்டுகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. எந்த விளையாட்டானாலும் துறுதுறுவென திறமையோடு விளையாடுபவர் என அவரது கிரிக்கெட் கிளப்பினர் கூறுகின்றனர்.

பெர்ண்ட்ரீ கழி, மல்க்ராவ், ஈல்டன் பார்க் ஆகிய கிளப்புகளுடன் பல 18 வயதிற்குட்பட்ட மேட்ச்சை ஆடி கவனம் ஈர்த்திருக்கிறார். திறமைமிக்க விளையாட்டு வீரரை இழந்துவிட்ட அவரது கிரிக்கெட் கிளப்பினர், நண்பர்கள், குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

2014-ம் ஆண்டில் 25 வயதான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஷெஃபெல்டு ஷீல்டு போட்டியின் போது, தலைக்கு வந்த நீளமான வீச்சு பந்தை புள் ஷாட் ஆட முயன்று, தவறியதில் பந்து தலையில் பலமாகப் பட்டு மைதானத்திலேயே அப்படியே சாய்ந்தது நினைவிருக்கலாம். ஹெட்மெட் அணிந்திருந்தும் தலைக்கும் கழுத்திற்கும் இடையில் பந்து பட்டதில் பிலிப் ஹியூஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிலிப் ஹியூஸ் (25), பென் ஆஸ்டின் (17)

இந்த துயரான சம்பவம் கிரிக்கெட் உலகத்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளித்தது. இப்போது அதே அஸ்திரேலியாவில் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின், பயிற்சியின்போது தலையில் பந்து பட்டு உயிரிழந்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐசிசி இதை துக்கமாக அனுசரித்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். மேலும், பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் கிளப்களும் பென் ஆஸ்டினுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது.

அப்பாவின் கனவை நிறைவேற்றப் பிறந்த தேவதை; பிரதிகா எனும் போராட்டக்காரி சாதித்த கதை

ஒரு இந்தியப் பெண் கிரிக்கெட்டைத் தன் கனவாகத் தேர்ந்தெடுக்கும்போது, அவள் எதிர்கொள்வது வெறும் பந்துகளை மட்டுமல்ல சமூகத்தின் பார்வைகள், குடும்பத்தின் எதிர்பார்ப்புகள், பொருளாதாரச் சுமைகள், மற்றும் தன்னம்... மேலும் பார்க்க

சாதம் ரூ.318; சீஸ்கேக் ரூ.748 - விராட் கோலி உணவகத்தின் விலைப் பட்டியல்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கிரிக்கெட் மட்டுமின்றி பிசினஸிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் ‘One8 Commune’ என்ற உணவகத்தையும் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தை கோ... மேலும் பார்க்க

`கிரிக்கெட்ல இந்த சம்பவம் நடந்து 20 வருஷம் ஆச்சு’ குறைந்த இன்னிங்ஸில் நம்பர் 1 இடத்தை பிடித்த இளைஞன்

பிசிசிஐ-யின் சமீபகால செயல்பாடுகள் காரணமாக 2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி ஆகிய இருவரும் இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ச்சியாக எழுப்பிய வண்ணம் வருகின்றனர்.தேர்வுக்கு கு... மேலும் பார்க்க

Shreyas Iyer: ``நான் குணமாகி வருகிறேன்'' - உடல்நிலை குறித்து ஸ்ரேயஸ் ஐயர்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு, அலெக்ஸ் கேரி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது விலா எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தக்... மேலும் பார்க்க

"ஆஸி பவுலர்களின் பாணி தெரியும்; இதைச் செய்தால் வெற்றி நிச்சயம்" - அரையிறுதிக்கு முன் ஷபாலி உறுதி

நடப்பு மகளிர் உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.இன்று இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலி... மேலும் பார்க்க

ICC Women's World Cup: 169 ரன்கள் குவித்த லாரா வோல்வார்ட்; இறுதிப்போட்டிக்குள் தென்னாப்பிரிக்கா!

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி குவாஹாத்தியில் உள்ள பார்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்... மேலும் பார்க்க