Jemimah: ’ஒவ்வொரு இரவும் அழுதிருக்கிறேன்; கடவுள்தான் இதை நிகழ்த்தினார்!'- ஆனந்த ...
"என்னோட மகள் சினிமாவுக்கு வருவதை எதிர்பார்க்கல" - மோகன் லால்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா ‘துடக்கம்’ எனும் படத்தில் அறிமுகவாகவிருக்கிறார்.
'Sara's', 'Oru Muthassi Gadha', 'Ohm Shanthi Oshaana' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் இப்படத்தை இயக்குகிறார். இன்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு தனது மகள் குறித்துப் பேசியிருக்கும் நடிகர் மோகன் லால், "நான் எனது வாழ்க்கையில் சினிமாவுக்கு வருவேன் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை. 48 ஆண்டுகளாக ரசிகர்களின் ஆதரவால் நான் இன்று இங்கே இருக்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விஷயமும் ஒரு அதிசயம் என்றே நான் நினைக்கிறேன்
என் குழந்தைகளுக்கு தனிப்பட்ட ஆசைகள், கனவுகள் இருப்பதை மதித்து அவர்களுக்கு சுதந்திரமும், ஆதரவும் கொடுத்து வளர்த்தோம் நானும் என் மனைவியும்.
என் மகன் அபூ (பிரணவ்) படம் நடிப்பதில் ஆர்வம் காட்டினான். பள்ளியில் நடந்த நாடகங்களில் கலந்துகொண்டு சிறந்த நடிகராகவும் பாராட்டுகளை வாங்கியிருக்கிறான். அதேபோல் விஸ்மயா பள்ளி நாடகங்களில் பல முறை சிறந்த நடிகையாக பலரால் பாராட்டப்பட்டிருக்கிறார். என் குழந்தைகள் இருவருமே சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.

என் மகள் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது எந்தத் தடையும் போடவில்லை. என் மகளுக்காக சிறந்த கதையுடன் பட வாய்ப்பு வந்தபோது, நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்.
நல்ல கதையும், நல்ல வாய்ப்பும் வந்துள்ளதால் இப்போது திரைப்படத்தில் நடிக்கிறார். அதிர்ஷ்டம், திறமை, நல்ல படக்குழு என அனைத்தும் அவருக்கு கிடைக்க நல்லது நடக்க நான் பிரார்த்திக்கிறேன்.
நான் என் மகளுக்குப் பெயர் ‘விஸ்மயா’ என வைத்தது, என் வாழ்வில் நடந்த அதிர்ஷ்டங்களை நினைத்து. என் பங்கு அவர்களை ஊக்குவிப்பது மட்டுமே.
என் மகனுக்கும் அவரது புதிய படம் வெளியாகிறது. இவையெல்லாம் என் வாழ்வின் அற்புதத் தருணங்களாக இருக்கின்றன." என்று பேசியிருக்கிறார்.


















