சென்னை: 7 வயது குழந்தை கொலை; அப்பா தற்கொலை; தாய் உயிர் ஊசல் - நடந்தது என்ன?
Mamitha Baiju: 'எனக்கு 15 கோடி சம்பளமா?'- மமிதா பைஜூ விளக்கம்
'பிரேமலு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் மமிதா பைஜு. சமீபத்தில் வெளியான 'டியூட்' படத்தில் நடித்திருந்தார்.
தவிர சூர்யாவின் 'கருப்பு', விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் மமிதா பைஜு 15 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் மலையாள ஊடகமான 'மனோரமா'-விற்கு அளித்தப் பேட்டியில் இதுதொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார்.
“சமூக ஊடகங்களில் நான் 15 ரூபாய் கோடி சம்பளம் பெறுவதாக செய்திகள் பரவி வருகின்றன.
நான் சமூக ஊடகங்களில் இல்லை. ஆனால், அந்தச் செய்திகளைப் பார்த்து உண்மையில் ஆச்சரியமடைந்தேன்.
சிலர் அதன் உண்மைத் தன்மையை அறியாமல், நம்புகிறார்கள். 15 கோடி ரூபாய் சம்பளம் பெறுமளவுக்கு பெரியவராகிவிட்டாரா என்று சிலர் அதற்கு கருத்து தெரிவித்திருந்தார்கள்.

சமூக ஊடகங்களில் பார்க்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மையில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார் மமிதா பைஜு.

















