சென்னை: 7 வயது குழந்தை கொலை; அப்பா தற்கொலை; தாய் உயிர் ஊசல் - நடந்தது என்ன?
பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கு தடை! – புதுச்சேரி தொழிலாளர் துறை உத்தரவு
புதுச்சேரி தொழிலாளர் துறையின் செயலர் ஸ்மித்தா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `தொழிற்சாலைகள் சட்டம் 1948 பிரிவு 66, துணைப் பிரிவுகள் (1) (b) விதிமுறையின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள தொழிற்சாலைகளில் பெண்களின் வேலை நேர வரம்புகளை துணைநிலை ஆளுநர் வரையறுக்கிறார். அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பெண்களை பணிகளில் ஈடுபடுத்தப்படுவது தடை விதிக்கப்படுகிறது. அதனால் அந்த நேரங்களில் பெண்களை வேலை செய்ய கட்டாயப்படுத்தவோ அல்லது அனுமதிக்கப்படவோ கூடாது.

இரவு 10 மணி வரை தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு, அவர்களின் வீடுகளுக்குச் செல்ல இலவச பேருந்து வசதிகள் செய்து தரப்பட வேண்டும். வரையறுக்கப்பட்ட வேலை நேரம் குறித்த அறிவிப்புகள், தொழிற்சாலையில் அனைவருக்கும் தெரியும்படி எழுதப்பட்டிருக்க வேண்டும். அதேபோல தினசரி வேலை தொடர்பான விதிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.















