செய்திகள் :

புயல்களின் பெயர்களுக்குப் பின்னால் உள்ள ரகசியம்! - சுவாரஸ்ய தகவல்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

வர்தா, ஒகி, மிக்ஜாம் என்ற பெயர்களை தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள். இது தமிழகத்தை தாக்கி பலரது உயிர்களையும் உடைமைகளையும் பறித்த புயல்களின் பெயர்கள்.

 ஏன் புயல்களுக்குப் பெயரிடப்படுகிறது?

நீண்டகாலமாக புயல்களுக்கு பெயரிடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. 20-ம் நூற்றாண்டின் நடுவில் பெண்களின் பெயரை புயல்களுக்கு சூட்டும் வழக்கம் இருந்தது.

1970களின் பிற்பகுதியில் ஆண்களின் பெயர்களும் சூட்டப்பட்டது. சமூக மாற்றத்திற்கேற்ப பிறர் மனதை புண்படுத்தா வண்ணம் பெயரிடும் நடைமுறை உருவாக்கப்பட்டு பொதுப்பெயர்கள், விலங்குகள், புனைவுக் கதைகளில் வரும் பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன.

இதுபோன்று பெயரிடுவதால் எளிதில் அவற்றை அடையாளப்படுத்த முடியும். மேலும் பேரிடர் மேலாண்மையின் போது நிர்வாக ரீதியிலான முன் தயாரிப்புகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் ஏதுவாக இருக்கும் என்பதனாலேயே இவ்வாறு பெயரிடப்படுகின்றன.

பெயர் வைப்பது யார்?

 அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் ஏற்படும் புயல்களுக்கு இக்கடலை சுற்றியுள்ள 13 நாடுகள் இணைந்து பெயரிடுகின்றன. சர்வதேச வானிலை அமைப்பானது இந்நாடுகளின் வானிலை மையங்களை ஒருங்கிணைத்து பெயரிடும் முறையினை உருவாக்கி அதை செயல்படுத்தி வருகிறது.

இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளும் தலா 13 பெயர்கள் வீதம் மொத்தம் 169 பெயர்களை பரிந்துரைக்க வேண்டும். இதில் அந்நாடுகளின் பெயர்களை ஆங்கில வரிசைப்படி அடுக்கி 169 பெயர்களும் ஒன்றன் பின் ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் மோந்தா என்ற பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பெயரை பரிந்துரைத்த நாடு தாய்லாந்து ஆகும்.

2004 ஆம் ஆண்டில் இருந்து 2020 ஆம் ஆண்டு வரை இக்கூட்டமைப்பில் 8 நாடுகள் இருந்தன. ஒவ்வொரு நாடும் தலா 8 பெயர்கள் வீதம் பரிந்துரைத்தன. இக்காலகட்டத்தில் மொத்தமாக 64 புயல்களுக்கு பெயரிடப்பட்டது.

 2020 க்கு பிறகு புதிதாக 5 நாடுகள் இந்த கூட்டமைப்பில் இணைந்துகொண்டன.

  •  இனி அடுத்தடுத்து வரபோகும் புயல்களின் பெயர்கள்- சென்யார் (ஐக்கிய அரபு அமீரகம்)

  • டிட்வா (யேமன்)

  • ஒர்னப் (வங்காள தேசம்)

  • முரசு (இந்தியா)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

வானத்தை அளந்த இந்திய பெண் - வானிலை அறிவியலில் புரட்சி செய்த அன்னா மணி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சம்பூர்ண ராமாயணம் பார்த்து சங்கடப்பட்ட அனுபவம்! - அந்தக் காலச் சினிமா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஒரு டிக்கெட் 4 ரூபாய்! - ரஜினி, கமல் படத்தை தவிர்த்து விட்டு லட்சுமி படம் பார்த்த கூல் அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

``எங்கள் பண்டிகைகளில் பட்டாசு இல்லை!'’ - 'சத்தமில்லா' தீபாவளி கொண்டாடும் கிராமங்களின் பின்னணி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நாலணாவுக்கு சினிமா, டூரிஸ் டாக்கீஸில் ஆடு நுழைந்த கதை!- ஜில் அனுபவம் #DiwaliCinema

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

`தளபதி’ கெட்டப்பில் சுற்றிய ரசிகர்கள்! - 1991 தீபாவளி நினைவுகள் #DiwaliCinema