செய்திகள் :

சென்னையில் களைகட்டிய `ப்ரோவோக் கலைத் திருவிழா 2025'; கலைத்துறையில் சாதித்த கலைஞர்களுக்கு விருது

post image

சென்னை கலாசார உலகை இன்னொரு நிலைக்கு உயர்த்தும் வகையில், ப்ரோவோக் லைஃப்ஸ்டைல் நடத்திய 'ப்ரோவோக் கலைத் திருவிழா, 2025' நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடந்தது.

2023-ல் தொடங்கிய இந்த விழா, இந்தியாவின் பாரம்பரிய கலை வடிவங்களை கொண்டாடும் முக்கிய நிகழ்வாக இருந்து வருகிறது.

பரதநாட்டியத்தின் உணர்ச்சி செறிவு, கர்நாடக இசையின் செழுமை, மேலும் பல்வேறு இந்திய கலை வடிவங்களின் தனித்துவத்தை இந்த விழா கௌரவித்து வருகிறது.

Provoke கலை திருவிழா விருதுகள்
Provoke கலை திருவிழா விருதுகள்
Provoke கலை திருவிழா விருதுகள்
Provoke கலை திருவிழா விருதுகள்
Provoke கலை திருவிழா விருதுகள்
Provoke கலை திருவிழா விருதுகள்
Provoke கலை திருவிழா விருதுகள்
Provoke கலை திருவிழா விருதுகள்
Provoke கலை திருவிழா விருதுகள்
Provoke கலை திருவிழா விருதுகள்
Provoke கலை திருவிழா விருதுகள்
Provoke கலை திருவிழா விருதுகள்
Provoke கலை திருவிழா விருதுகள்
Provoke கலை திருவிழா விருதுகள்
Provoke கலை திருவிழா விருதுகள்
Provoke கலை திருவிழா விருதுகள்
Provoke கலை திருவிழா விருதுகள்
Provoke கலை திருவிழா விருதுகள்

முதலாம் நாள்

இந்தாண்டு நிகழ்வின் முதல் நாளில் ருக்மிணி விஜயகுமார், சுபஶ்ரீ தணிக்காச்சலம், ஹரி சரண் மற்றும் சாய் விக்னேஷ் பங்கேற்றனர்.

விழாவின் தொடக்க நிகழ்வாக வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சினிமா துறையை சார்ந்த 'காத்தாடி' ராமமூர்த்தி, இர.பாண்டியராஜன் மற்றும் கலைமாமணி சச்சு ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

மேலும் இசை சார்ந்து தங்களின் தவிர்க்க முடியாத பங்களிப்பை கொடுத்திருக்கும் பல கலைஞர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

நாட்டுப்புறப் பாட்டிற்காக கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி தம்பதிக்கும்,

வில்லு பாட்டிற்காக பாரதி திருமகன்,

பறை இசைக்காக பத்மஶ்ரீ வேலு ஆசான்

தெருக்கூத்திற்காக பி. கே. சம்பந்தன்,

டிஜிட்டல் ஆர்ட் துறையில் ஏ. பி. ஶ்ரீதர்,

வயலின் கலைஞர் பத்மஶ்ரீ அ. கன்னியாகுமரி போன்றவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதுகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து ருக்மிணி விஜயகுமார், சுபஶ்ரீ தணிக்காச்சலம், ஹரி சரண் மற்றும் சாய் விக்னேஷ் என்று பங்கேற்ற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றது.

Provoke கலை திருவிழா விருதுகள்|இரண்டாவது நாள்

இரண்டாவதுநாள்

இரண்டாவது நாளில் கலை உலகிற்கு பல வகையில் தங்கள் பங்களிப்பை கொடுத்துவரும் மிருதங்க கலைஞர் நெல்லை கண்ணன், பி.ஆர்.சுரேஷ் சந்திரா, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், மறைந்த நடிகர் ஜெய்சங்கர், பாடகி மாலதி லக்ஷ்மணன், நடன கலைஞர் நர்த்தகி நடராஜன், நடிகர் சிவகுமார், பாடகி நித்யஶ்ரீ மகாதேவன், பாடகி எஸ்.சௌமியா, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், நள்ளி குப்புசாமி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

வனப்பேச்சியாக 'ரோகிணி'

விருது வழங்கியதைத் தொடர்ந்து வனம், வன விலங்குகளின் தேவை மற்றும் பாதுகாப்பு பற்றி பேசும் 'வனப்பேச்சி' என்ற நாடகம் சென்னை கலைக்குழுவினரால் நடத்தப்பட்டது. இதில் வனப்பேச்சியாக நடிகை ரோகிணி நடித்திருந்தார்.

நகைச்சுவையோடு கலந்து முக்கியமான கருத்தினை பேசியிருந்த நாடகத்திற்கு பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.

விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து ப்ரோவோக் ஆர்ட் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியின் முடிவாக ராஜேஷ் வைத்யா, ஸ்பூர்த்தி ராவ், ராகுல் வெல்லால் ஆகியோரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இப்படியாக ப்ரோவோக் ஆர்ட் ஃபெஸ்டிவலின் மூன்றாவது ஆண்டு கலை விழா சிறப்பாக நடந்து முடிந்தது.

`25 கேடயங்கள் இருக்கு; எல்லாம் ஓலைக்கூரையில்தான்’ - ஓர் `கலைமாமணி’ கூத்துக் கலைஞரின் வாழ்வு

பரம்பரையாக வந்த தெருக்கூத்துக் கலையின் வாரிசு!கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா, மருத்தேரி கிராமத்தில், தனது 10-வது வயதில் மகாபாரதக் கலை மீது கொண்ட காதலால், இன்றும் 44 ஆண்டுகளைக் கடந்து அந்தக்... மேலும் பார்க்க

பெயிண்ட் திருநெல்வேலி: விழிப்புணர்வு ஓவியங்கள்; மாணவர்கள் கைவண்ணத்தில் புதுப்பொலிவு பெறும் சுவர்கள்!

திருநெல்வேலி மாவட்டத் துணை ஆய்வாளர் பிரசன்ன குமார் ஐபிஎஸ் அறிமுகப்படுத்திய 'பெயிண்ட் திருநெல்வேலி' என்கிற திட்டத்தின் மூலம், வாராவாரம் கல்லூரி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி சுவர்களில் விழிப்புண... மேலும் பார்க்க

``வெள்ளை முடி அஜித் நடித்தபோது ஃபேஷன் ஆகிவிட்டது, அதனாலேயே'' - இலக்கிய மன்றம் தொடங்கிய மாணவர்கள்

சமூகத்தில் நடக்கக்கூடிய பிரச்னைகளை கலை, இலக்கியம் வழியாக மக்களுக்கு கொண்டுசேர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறது, பென்னிகுயிக் கலை இலக்கிய மன்றம். நகுல் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த பென்னிகுயிக் கலை இல... மேலும் பார்க்க