செய்திகள் :

IND vs NZ: ``அதிக ஆர்ப்பரிப்பு பிடிக்கல; எனக்கும், தோனிக்கும் அப்படி தான் நடக்குது, ஆனா.!" - கோலி

post image

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (ஜன.12) வதோதராவில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 301 ரன்களை நிர்ணயித்தது.

ஆட்டநாயகன் விருதை வென்ற விராட் கோலி
ஆட்டநாயகன் விருதை வென்ற விராட் கோலி

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது.

இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் உள்ளது.

இப்போட்டியில் ரோஹித் ஷர்மா அவுட்டாகி வெளியேறிய சமயத்தில் கோலி களமிறங்கிய போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

சிறப்பாக விளையாடி விராட் கோலி 93 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

விருது வென்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய விராட் கோலி, "ஒருவர் அவுட் ஆகி வெளியே செல்லும்போது, களத்திற்குள் வரும் எனக்கு அதிக ஆர்ப்பரிப்பு எழுவது பிடிக்கவில்லை. இதே விஷயம் தோனிக்கும் அடிக்கடி நடக்கிறது.

ரசிகர்களின் உற்சாகத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில், அவுட்டாகி வெளியேறுபவர் இதை பெரிதும் விரும்ப மாட்டார் என நினைக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.!

BCB:``பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வராது!" - ஐசிசி யிடம் கோரிக்கை வைத்த பிசிபி!

2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாட ஏலம் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையி... மேலும் பார்க்க

"இந்திய கால்பந்தை FIFA காப்பாற்ற வேண்டும்" - வேதனையுடன் வீடியோ வெளியிட்ட கால்பந்து வீரர்கள்

இந்திய கால்பந்தை FIFA காப்பாற்ற வேண்டும் என்று கால்பந்து வீரர்கள் வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். கடந்தாண்டு செப்டம்பரிலேயே தொடங்க வேண்டிய ISL கால்பந்து தொடர், போதிய நிதி இல்லாததால் இன... மேலும் பார்க்க

khushi mukherjee: "சூர்யகுமார் யாதவுக்கும் எனக்கும்..!"- சர்ச்சைக்கு விளக்கம் அளித்த குஷி முகர்ஜி

பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனக்கு நிறைய மெசேஜ் அனுப்புவார் என்று சொன்ன விஷயம் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதாவது சில தினங்களுக்கு முன் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி... மேலும் பார்க்க

Sports 2025: ஆர்சிபி சாம்பியன் டு ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை - ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகள் ஓர் ரீவைண்ட்

2025 ஆம் ஆண்டு முடிவடைந்து 2026 ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது. அரசியல், சினிமா, விளையாட்டு, உலக நிகழ்வுகள் என பல முக்கியமான விஷயங்கள் அரேங்கேறி இருக்கின்றன. அந்தவகையில் 2025 உலக அளவில் நடந்த முக்கிய ஸ்ப... மேலும் பார்க்க

கோவை: 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் சர்வதேச ஹாக்கி மைதானம் | Photo Album

ஹாக்கி மைதானம்ஹாக்கி மைதானம்ஹாக்கி மைதானம்ஹாக்கி மைதானம்ஹாக்கி மைதானம்ஹாக்கி மைதானம்ஹாக்கி மைதானம்ஹாக்கி மைதானம் மேலும் பார்க்க