செய்திகள் :

India Pakistan : `பாகிஸ்தான் ராணுவத்தின் மூன்று விமானத் தளங்களில் இந்தியா தாக்குதல்?’ - பிபிசி தகவல்

post image

இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் நேற்று முன்தினம் முதல் இரு நாடுகளும் தொடர்ந்து மாறி மாறி தாக்குதல் மற்றும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இது தொடர்பாக, பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியின்படி,

பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் இந்தியா மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். "இந்தியா மூன்று பாகிஸ்தான் ராணுவ விமானத் தளங்களில் ஏவுகணைகளை ஏவியது.” எனக் கூறியுள்ளார். ஆனால், இது குறித்து இந்தியா இதுவரையில் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

இந்தியா, பாகிஸ்தான்
இந்தியா, பாகிஸ்தான்

பாகிஸ்தான் தொலைக்காட்சி நேரலை ஒன்றில், பாகிஸ்தான் நாட்டின் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் சவுத்ரி, "பெரும்பாலான இந்திய ஏவுகணைகளை பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்து நிறுத்திய போதிலும், சில ஏவுகணைகள் பாகிஸ்தான் எல்லைக்குள் வந்துவிட்டன.

நாட்டின் படைகள் தயாராகவே உள்ளன. இது ஒரு கோழைத்தனமான தாக்குதல். எங்களது பதிலடிக்காக காத்திருங்கள்" என்று பேசியுள்ளார்.

இந்தியா மீது பதிலடி தாக்குதல் நடத்த பாகிஸ்தான், 'ஆபரேஷன் பனியன் மார்சஸ் (Operation Bunyan Marsus)' என்று பெயரிட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

India - Pakistan:``தேசத்தைக் காக்க எப்போதும் தயாராக இருக்கிறோம்"- Ceasefire குறித்து இந்திய ராணுவம்!

இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்த மோதல் போக்கை கைவிடுமாறு அமெரிக்கா இரண்டு நாட்டிடமும் கோரிக்கை வைத்துவந்தது. இது தொடர்பாக இரு நாட்டின் தலைவர்களிடமும் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த நிலையில்,... மேலும் பார்க்க

India - Pakistan: `அனைத்து தாக்குதல்களும் நிறுத்தம்' - அறிவித்த இந்தியா... முடிவுக்கு வரும் மோதல்?

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இரண்டு நாடுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சூழலை கட்டுக்குள் கொண்டுவர முயல்வதாக அமெரிக்கா தொடர்ந்து... மேலும் பார்க்க

இந்திய படைகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய முதல்வர் ஸ்டாலின்; நன்றி தெரிவித்த ஆளுநர் ரவி

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. பாகிஸ... மேலும் பார்க்க

`இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவு

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா முன்னெடுத்த ஆபரேஷன் சிந்தூரைத் தொடந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் பதற்ற நிலை உருவானது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரிதாக வெளியில் பேசவில்லை என்றா... மேலும் பார்க்க

"ராணுவத் தாக்குதலுக்கான பெயரைப் பாகிஸ்தான் இதிலிருந்துதான் எடுத்திருக்கிறது" - ஓவைசி சொல்வது என்ன?

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாகப் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீத இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு இந்தியா 'ஆப்ரேஷன் சிந்தூர்' எனப் பெயர் வைத்தது. இதற்கு எதிர்வி... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான்: அணு ஆயுதங்கள் குறித்த கேள்வி; பாகிஸ்தான் அமைச்சரின் பதில் என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்ற நிலையில், 'அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமா?' என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர், "நான் உலகிற்குச் சொல்லிக... மேலும் பார்க்க