செய்திகள் :

Jananayagan: 'உடல்நிலை சரியில்லை'; ரிவைசிங் கமிட்டி ஒத்திவைப்பு - தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'?

post image

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் பொங்கல் வெளியீடாக திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தது, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.

ஆனால், படத்திற்கு சென்சார் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.

Jananayagan
Jananayagan

'ஜனநாயகன்' படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தணிக்கை வாரியம் தாமதிக்கிறது எனக் கூறி நீதிமன்றத்தை நாடியிருந்தது படக்குழு.

பிறகு படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்புவதாக முடிவு செய்து வழக்கையும் வாபஸ் வாங்கியிருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீடு 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது எனத் தகவல்கள் பேசப்பட்டன. ஆனால், ரிலீஸ் தொடர்பாக படக்குழுவினர் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

படத்தை ரிவைசிங் கமிட்டி பார்வையிட கடந்த மாதம் படத்தை படக்குழு சமர்ப்பித்திருக்கிறார்கள். இன்று மதியம் இரண்டு மணிக்கு இத்திரைப்படத்தை ரிவைசிங் கமிட்டி பார்க்கவிருக்கிறது என்ற தகவலும் வந்திருந்தது.

ஜனநாயகன்
ஜனநாயகன் - விஜய் - Jananayagan - vijay

ஆனால், ரிவைசிங் கமிட்டியில் இருக்கும் உறுப்பினர் ஒருவருக்கு இன்று உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் வேறு தேதியில் படத்தைப் பார்ப்பதற்கு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால் 'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அரசியல் காரணங்களுக்காக இப்படியான விஷயங்களைச் சொல்லி படத்தின் ரிலீஸிற்கு பா.ஜ.க, தணிக்கை வாரியம் மூலம் தடைப் போட்டு சர்வாதிகார முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது என சமூக வலைதளப் பக்கங்களில் தவெக-வினர் பதிவிட்டு வருகிறார்கள்.!

"தரம் தாழ்ந்த சொற்கள் பேசுபவரையே வெளிச்சம் போட்டுக்காட்டும்"- நடிகரின் கருத்துக்கு த்ரிஷா கண்டனம்

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் த்ரிஷா குறித்து நடிகர் ஒருவர் பேசியது சர்ச்சையாகி இருந்தது. இந்நிலையில் த்ரிஷா அதற்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும... மேலும் பார்க்க

'சின்னத்திரையில் 3000 எபிசோடுகள் இயக்கியிருக்கிறேன், ஆனால்'- அங்கீகாரம் குறித்து சமுத்திரக்கனி

'zee5' ஓடிடி தளத்தில் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான சீரிஸ் ‘தடயம்’. நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள ‘தடயம்’ சீரிஸில், சமுத்திரக்கனி எஸ்ஐ அதியமான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரு... மேலும் பார்க்க

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில் கடந்த ஆண்டு ‘பாரத் சேவா’ என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நேற்று (மார்ச்.7) சென்னையில் நடைபெற்றது... மேலும் பார்க்க

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ... மேலும் பார்க்க

முஸ்தபா முஸ்தபா விமர்சனம்: டிரெண்டில் இருக்கப் போராடும் அவுட்டேட்டட் காமெடி படம்!

கார்த்திக் (சதீஷ்) ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர். திருமணத்துக்கு இரண்டு நாட்களே இருக்கும்போது, அவரது அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் பரவத் தொடங்குகிறது. இதனால் திருமணமே நின்றுவிடக்கூடிய சூழலில் நண்பன்... மேலும் பார்க்க

Kadhal Reset Repeat Review: 'அம்னீஷியா' நாயகி, 'ஒன் சைடு லவ்' நாயகன்; எப்படி இருக்கு இந்த லவ் படம்?

இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இயங்கிக்கொண்டிருக்கும் அதிதி (ஜியா ஷங்கர்) 'ஃப்ளை ஹை' என்ற மியூசிக்கல் பேண்டில் பாடகியாக இருக்கிறார். அதில் இருக்கும் ஹரிச்சந்திரனுக்கும் (அர்ஜுன் அசோகன்) அ... மேலும் பார்க்க