செய்திகள் :

Karthi 30: 'பர்த்டே சர்ப்ரைஸ்!' - நேரடி தெலுங்கில் கால் பதிக்கும் கார்த்தி; இயக்குநர் யார் தெரியுமா?

post image

நடிகர் கார்த்தியின் பிறந்த நாள் இன்று. பர்த் டே ஸ்பெஷலாக அவரது 30வது படத்தின் பூஜை ஹைதராபாத்தில் கோலாகலமாக நடந்துள்ளது.

சூர்யாவைத் தொடர்ந்து கார்த்தியும் நேரடி தெலுங்கில் கால் பதிக்கிறார். சூர்யா - வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகி வரும் 'விஸ்வநாத் & சன்ஸ்' தயாரிப்பு நிறுவனமான சித்தாரா, கார்த்தியின் படத்தைத் தயாரிக்கிறது.

படப்பூஜையில்
படப்பூஜையில்

கார்த்தி இப்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 'சர்தார் 2'வில் நடித்து முடித்துவிட்டார். கிராபிக்ஸ் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்தது வருகின்றன. இதனை அடுத்து 'டாணாக்காரன்' படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் 'மார்ஷல்' படத்தில் நடித்து வருகிறார்.

கல்யாணி பிரியதர்ஷன் ஜோடி. இந்தப் படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு ராமேஸ்வரம் பகுதிகளில் தொடங்கவிருக்கிறது. இதற்கிடையே தனது நேரடி தெலுங்கு படத்தை இன்று தொடங்கியிருக்கிறார்.

மீனாட்சி சௌத்ரி
மீனாட்சி சௌத்ரி

சூர்யாவின் 'விஸ்வநாதன் &சன்ஸ்' போல இதுவும் தெலுங்கு - தமிழில் உருவாகிறது. படத்தை டோலிவுட் கல்யாண் சங்கர் இயக்குகிறார். இவர் தெலுங்கில் இதற்கு முன் 'மேட்', 'மேட் ஸ்கொயர்', 'டில்லு ஸ்கொயர்' படங்களை இயக்கியவர்.

ஹைதாபாத்தில் இன்று நடந்த படப் பூஜையில் 'வாரிசு' தயாரிப்பாளர் தில்ராஜூ, மீனாட்சி சௌத்ரி, சுனில் மற்றும் தயாரிப்பாளர் எனப் பலரும் பங்கேற்றனர். விரைவில் படத்தின் பர்ஃஸ்ட் லுக் வெளியாக விருக்கிறது.

ஆனந்தம் 25: 'கோபப்பட்ட சௌத்ரி சார்; என் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த நாள்!' - நெகிழும் லிங்குசாமி

இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி, இயக்குநராக அறிமுகமான 'ஆனந்தம்' படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2001ம் ஆண்டின் மே மாதம் 25ம் தேதி அன்று 'ஆனந்தம்' வெளியானது. சூப்பர் குட் ஆர்.பி.சௌத்ர... மேலும் பார்க்க

'கருப்பு' படத்தின் வெற்றி; பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு 18 அடி அரிவாள் சாத்திய ஆர்.ஜே. பாலாஜி!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படத்திற்குத் திரையரங்குகளில் ஏகோபித்த வரவேற்புக் கிடைத்திருக்கிறது. 200 கோடியைத் தாண்டித் திரைப்படம் வசூல் செய்துகொண்டிருப்பதாகப் படக்... மேலும் பார்க்க

Karuppu: "என்னை மிரட்டி என் நகையை திருடிய கதையைதான் 'கருப்பு' படத்தில்..." - ஆர்.ஜே. பாலாஜி

சூர்யாவின் 'கருப்பு' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், அனகா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திர... மேலும் பார்க்க

Karuppu: "இப்படி ஒரு ரியாக்ஷனை சமீபத்தில நான் தியேட்டர்ல பார்க்கல" - சூர்யா எமோஷனல்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 'கருப்பு'. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.மே 15 ஆம் தேதி தான் வெ... மேலும் பார்க்க

"அடுத்த சூர்யா சார் படங்களுக்கும் இதையே யூஸ் பண்றதாக சொல்றாங்க!" - டிரெண்டிங் டிசைனர் அம்பானி பேட்டி

நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர்கள் எப்போதுமே அவர்களுக்கெனப் பிரத்தியேகமாக டைட்டில் கார்டை உருவாக்குவார்கள். இது அந்த நடிகரின் ரசிகர்களுக்குப் பெரும் கொண்டாட்டத்தை அளிக்கக்கூடியதாகவும் மாறும். ஒவ்வொரு ... மேலும் பார்க்க

கருப்பு: "நான் விமர்சனம் பண்றவங்களுக்கு படம் பண்ணல!" - ஆர்.ஜே. பாலாஜி

சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், அனகா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களி... மேலும் பார்க்க