செய்திகள் :

Karuppu: "கண்ணுகளா... செல்லங்களா... என் சாமிகளா... உங்க அன்புக்கு!" - நன்றி தெரிவித்த சூர்யா

post image

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'கருப்பு'.

ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர்.

ரிலீஸில் ஏற்பட்ட சில சிக்கல்களால் மே 14 ஆம் தேதி வெளியாக வேண்டிய படம் மே 15 ஆம் தேதி தான் வெளியானது.

கருப்பு திரைப்படம்
கருப்பு திரைப்படம்

இன்னல்களுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், " கண்ணுகளா... செல்லங்களா.. சாமிகளா, என் சாமிகளா... முதலில் இந்த அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

திட்டமிட்டபடி 14ஆம் தேதி படம் வெளியாக முடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் இக்கட்டான மனநிலையில் இருந்தோம்.

ஆனால் ரசிகர்கள், அனைத்து திசைகளிலிருந்தும் அனுப்பிய ட்வீட்கள், வாய்ஸ் மெசேஜ்கள், தொலைபேசி அழைப்புகள் ஆகியவை மிகப்பெரிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்தன.

அன்றைக்கே எல்லாத்தையும் புறட்டுப் போட்டுவிடலாம் என்று தோன்றியது. நீங்கள்தான் எல்லாத்தையும் மாற்றிவிட்டீர்கள். அதனைத் தொடர்ந்து 15ஆம் தேதி 'கருப்பு' திரைப்படம் வெளியான பிறகு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பைப் பார்த்து வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.

ரசிகர்கள் அளித்த மரியாதை மற்றும் வரவேற்பு, படக்குழுவிற்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. மேலும் படத்தின் தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி.

எடிட்டர், ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு, இசையமைப்பாளர் சாய் அபயங்கர், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, நடிகை த்ரிஷா மற்றும் முழு படக்குழுவினரின் சார்பாகவும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக இந்தப் படத்தை நம்பிக்கையுடன் தயாரித்து வெளியிட்ட Dream Warrior Pictures நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான பிரகாஷ் மற்றும் பிரபுவிற்கும் நன்றி.

இறுதியாக இந்த அன்பு எனக்கு மிகவும் முக்கியமானது. கருப்பு படத்தை இவ்வளவு ஸ்பெஷலாக மாற்றிய அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

"17 நாள்களாக தனி மனிதனாகப் போராடிக் கொண்டிருக்கிறேன்"- நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு என்னாச்சு?

நகைச்சுவை, ஸ்டண்ட் நடிகரான முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47) சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியின் உயிரைக் காப்பாற்ற வேண்டி தமிழக ம... மேலும் பார்க்க

Ravi Mohan: "எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்கப் போவதில்லை" - கண் கலங்கிய ரவி மோகன்

கடந்த 2023-ம் ஆண்டு நடிகர் ரவி மோகன், ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து பிரிவதாக அறிவித்திருந்தார். அப்போது இத்தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாடகி ஒருவருடன், ரவி மோகன் ஒன்றாக இணைந்... மேலும் பார்க்க

TVK: "விஜய்க்கு இன்னும் நிறைய சவால்கள் வரப்போகின்றன" - செளந்தர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சௌந்தர்யா மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் உள்ளிட்டோர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால்கள் மற்றும் உபகரணங்கள், ஆட்டோ உள்ளிட்ட... மேலும் பார்க்க

What To Watch: 'கருப்பு, துரந்தர் 2, அதிரடி' - இந்த வாரம் தியேட்டர் & OTT-யில் வந்திருக்கும் படங்கள்

இந்த வாரம் தியேட்டர், ஓடிடி-யில் வெளிவந்திருக்கும் படங்கள் & சீரிஸ் இவைதான்.கருப்பு - தமிழ்ஆர் ஜே. பாலாஜி இயக்கி சூர்யா, திரிஷா, ஆர்.ஜே பாலாஜி, நட்டி நடராஜ், மன்சூர் அலிகான், ஸ்வாசிகா, ஷிவாதா, இந்திரன... மேலும் பார்க்க

'இந்த மக்கள் பணி அரசியலாக மாற வாய்ப்பிருக்கிருக்கிறதா?' - சௌந்தர்யா ரஜினிகாந்த் 'பளீச்' பதில்

நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் கலந்துகொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கைக் கால்களையும், பெண்களுக்கு வ... மேலும் பார்க்க

பொருளாதார நெருக்கடி: 'திரையுலகினர் ஒன்றிணைந்து ஆலோசிக்க வேண்டிய சரியான நேரம் இது.!'- கமல்ஹாசன்

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்... மேலும் பார்க்க