செய்திகள் :

Kavin: 'என் தங்க மகனே & மகளே'- இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரான கவின் - மோனிஷா தம்பதி

post image

'லிஃப்ட்', 'டாடா' போன்ற படங்களின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டார் கவின்.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தவர் இப்போது சினிமாவில் பரபரப்பான லைன் அப்களுடன் வலம் வருகிறார்.

கவின்
கவின்

கவின் நடிப்பில் கடைசியாக, கடந்த ஆண்டு 'மாஸ்க்' படம் திரைக்கு வந்திருந்தது. ஆகஸ்ட் 14-ம் தேதி, நயன்தாராவுடன் அவர் நடித்திருக்கும் 'Hi' படம் வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து, 'பேர் சொல்லும் பிள்ளை' படம், அறிமுக இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் நடிக்கும் படம் என பிஸியாக இருக்கிறார்.

கவினுக்கும் அவருடைய காதலி, மோனிஷாவுக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருந்தது. குடும்பத்தினர், நெருங்கிய திரைத்துறை வட்டாரம் என இவர்களின் திருமணம் எளிமையாகவே நடந்திருந்தது.

தற்போது இந்தத் தம்பதிக்கு இன்று இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். ஓர் ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறார்கள்.

இந்தத் தகவலை அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் நடிகர் கவின். அவருடைய எக்ஸ் பக்கத்தில், " எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

Vishwanath & Sons: "ஒரு படத்தின் வெற்றி என்பது, டிக்கெட் மற்றும் வசூல் கணக்கில் இல்லை!" - சூர்யா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்... மேலும் பார்க்க

Magudam Review: இரட்டை வேட ஆக்ஷன் ட்ராமா... இயக்குநராக விஷால் சாதிக்கிறாரா, சோதிக்கிறாரா?

மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்துக்கொண்டு, மனைவி ஜமுனா (துஷாரா விஜயன்) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் எளிய நடுத்தர வாழ்க்கை வாழ்கிறார் கிருபாகரன் (விஷால்). இன்னொரு புறம், கப்பல்களையே விலைக்கு வாங்கும் அளவ... மேலும் பார்க்க

"நான்தான் உண்மையான கருப்பு; கஷ்டப்பட்டு 'கருப்பு' படத்தில் ஆடினேன்; ஆனா..."- மன்சூர் அலிகான் ஆதங்கம்

மைதீன் இயக்கத்தில் துஷி, ஜனனி குணசீலன், ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஆல் பாஸ்’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

"'உன் வேலையை நேசி, கற்​றுக்​கொண்டே இரு' என்று ரஜினி சார் சொன்னார்" - ஸ்ரேயா சரண் ஷேரிங்

‘சி​வாஜி’ திரைப்​படத்​தில் ரஜினி​காந்​துடன் பணி​யாற்​றிய அனுபவம் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் 'Pinkvilla' ஊடகத்திற்குப் பேட்​டி​ அளித்​திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர், "ரஜினி சாரை நே... மேலும் பார்க்க

மொழி : மௌனத்தின் இசை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 15

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 15மொழி : மௌனத்தின் இசை!ஷீலாவின் திருமணத்துக்கு வரப்போவதில்லை என்... மேலும் பார்க்க

Vishwanath & Sons Review: காதலில் வயது வித்தியாச சிக்கல் - முதிர்ச்சியான உரையாடலாகிறதா படம்?

பெரும் தொழிலதிபரும், துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றவருமான சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா), தன் அம்மா நிர்மலாவுடன் (ராதிகா) வாழ்கிறார். 40 வயதைத் தாண்டிய சஞ்சய்யைத் திருமணம் செய்துகொள்ள... மேலும் பார்க்க