செய்திகள் :

Kayadu lohar: ``இதை என்னால் இன்னமும் நம்பவே முடியவில்லை" - நடிகை கயாடு லோஹர் பதிவு வைரல்!

post image

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. தற்போது திரைப்படம் திரைக்குவரத் தயாராகி வருகிறது. அதைத் தொடர்ந்து, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 திரைப்படத்திற்கு தர்மன் எனப் பெயரிட்டுள்ளனர். ஆக்‌ஷன் கலந்த கதையாக உருவாகிவரும் இப்படத்தில் ரஜினி மருத்துவராக நடிக்கிறார். இது, படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு கலவையாக இருக்கும் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.

அதேப் போல கன்னட திரையுலகம் மூலம் நடிகையாக அறிமுகமான கயாடு லோஹர், தற்போது, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் நடிகை கயாடு லோஹரும் விமானத்தில் சந்தித்துக்கொண்டனர். இது தொடர்பாக நடிகை கயாடு லோஹர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, ``நான் இன்னும் கனவுதான் கண்டு கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அவருடைய மிகப் பெரிய ரசிகராக இருந்து, எதிர்பாராத விதமாக ஒரு விமானத்தில் ரஜினிகாந்த் சாருக்கு தொட்டுச் சூடும் தூரத்தில், பக்கத்து சீட்டிலேயே அமரும் வாய்ப்பு கிடைத்தது...

இதை என்னால் இன்னமும் நம்பவே முடியவில்லை. அவரைப் பார்த்த அந்த நொடியில், என் மனதிற்குள் 'சுந்தரி' பாட்டு ஓட ஆரம்பித்துவிட்டது; அப்படியே மாய உலகத்திற்குள் சென்றுவிட்டேன். எவ்வளவு ஒரு நம்பமுடியாத, எதிர்பாராதத் தருணம்... என் நாளே இனிமையாகிவிட்டது. என்றாவது ஒரு நாள் அவருடன் சேர்ந்து திரையைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். அவருக்கு அருகில் நான் உருளைக்கிழங்குப் போல் இருக்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Sherif: "இன்னொருத்தருடைய உழைப்புல அவங்க பெயரை போட்டுக்கிறாங்க!" - நடன இயக்குநர் ஷெரிஃப்

'கனிமா', 'பவள மல்லி' உள்ளிட்ட பல பாடல்களுக்கு நடன இயக்கம் செய்தவர் நடன இயக்குநர் ஷெரிஃப். அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவர் சமீபத்தில் பதிவிட்ட காணொளி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தக் காணொள... மேலும் பார்க்க

Mandaadi: "தமிழரின் கதையை உலகம் பேசுமாறு செய்வதே பெருவெற்றி!" - 'மண்டாடி'க்கு சீமான் பாராட்டு!

சூரியின் 'மண்டாடி' படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மகிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் ஆக... மேலும் பார்க்க

Venkat Prabhu: "இதுனாலதான் நான் லண்டனுக்கு போகல!"- 'லெனின் பாண்டியன்' பட நிகழ்வில் வெங்கட் பிரபு

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ ரி... மேலும் பார்க்க

Ilaiyaraaja: "இவன் என்கிட்டயே நடிப்பான்" - 'கங்கை அமரன்' பற்றி இளையராஜா கலகல

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. தர்ஷன் கணேசன், மறைந்த ந... மேலும் பார்க்க

Dorothy: 'தும்சக்கு தும்சக்கு தும்சக்கு!' - டொராண்டோ திரைப்பட விழாவில் ‘டோரதி' படக்குழு| Photo Album

சாலமன் பாப்பையா: "அனாதை பிள்ளைகளாக நாங்கள் நிற்கிறோம்"- மனமுடைந்து அழுத பாரதி பாஸ்கர் மேலும் பார்க்க

DC Exclusive: "லோகேஷை நடிக்க வச்சதுக்கு காரணம் இதுதான்!" - அருண் மாதேஸ்வரன் பேட்டி

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான 'டிசி' படத்திற்கு வசூலாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திற்கு படம் வந்திருக்கிறத... மேலும் பார்க்க