"காங்கிரஸ் பாரம்பர்யம் உள்ளவரால் இங்கே தொடர முடியாது..!"- பாஜகவிலிருந்து விலகினா...
Keerthy Suresh: ``அப்பா - பொண்ணு உறவுனு சொன்னது கேட்கலையா?"- விமர்சனங்களுக்கு கீர்த்தி சுரேஷ் பதில்!
பிரவீன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குநர் மிஷ்கின், கீர்த்தி சுரேஷைப் பாராட்டிப் பேசும்போது அவரைத் தொட்டுப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் கீர்த்தி சுரேஷின் முகபாவனையைக் கவனித்த இணையவாசிகளில் சிலர், அவர் அசௌகரியமாக உணர்ந்ததாகக் கூறி இயக்குநர் மிஷ்கினின் செயலை விமர்சித்தனர். அதேநேரம், இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு இருப்பதாகக் கூறி மற்றொரு தரப்பினர் மிஷ்கினுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பதிவர் ஒருவரின் பதிவுக்கு பதிலளித்திருந்தார். அதில், ``முதலாவதாக, என் முகத்தில் எங்கே அசௌகரியம் தெரிகிறது? நாங்கள் இருவரும் தந்தை - மகள் போன்ற பிணைப்பைக் கொண்டுள்ளோம் என்று அவரே கூறியதை நீங்கள் கேட்கவில்லையா? இரண்டாவதாக, ஒருவேளை நான் அசௌகரியமாக இருந்தேன் என்றே வைத்துக் கொண்டாலும், திரைப்படங்களில் எங்களைத் தொட்டு நடிக்கிறார்கள் என்பதற்காகப் பொதுவெளியிலும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்களா? சகோதரரே, நீங்கள் சில விஷயங்களைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்" எனக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷின் இந்தப் பதிலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திரைக்கதையின் தேவைக்காக நடிப்பதற்கும், நிஜ வாழ்க்கையில் ஒருவரின் தனிப்பட்ட எல்லைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதே சமயம், இருவருக்கும் இடையிலான உறவைப் புரிந்து கொள்ளாமல் அந்த வீடியோவைத் தேவையின்றிப் பெரிதுபடுத்துவதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...


















