செய்திகள் :

Keralam: ஸ்வேதா மேனன் வழங்கும் 'ஓண கிட்' வாங்க மறுக்கும் நடிகைகள்; 'அம்மா' அமைப்பில் தொடரும் விவாதம்

post image

படப்பிடிப்பு தளங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள சினிமா துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான அம்மா அமைப்பின் அப்போதைய தலைவரான நடிகர் மோகன்லால் உட்பட அனைத்து நிர்வாகிகளும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர்.

அதன்பின்னர் நடந்த தேர்தலில் ஸ்வேதா மேனன் தலைமையிலான நடிகைகள் அணி வெற்றிபெற்றது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்ற ஸ்வேதா மேனன் தலைமையிலான நிர்வாகத்தில் சில பிரச்னைகள் எழுந்தன.

இதையடுத்து கடந்த ஜூன் மாதம் பொதுக்குழுவில் நடந்த விவாதத்தைத் தொடர்ந்து ஸ்வேதா மேனன் தலைமையிலான நிர்வாகிகள் ராஜிநாமா செய்தனர். ரமேஷ் பிஷாரடி தலைமையில் தற்காலிக நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது.

இதற்கிடையே, ராஜிநாமாவை வாபஸ் பெறுவதாகவும், மீண்டும் தலைவராகத் தொடருவதாகவும் ஸ்வேதா மேனன் கூறினார். அதற்கு ரமேஷ் பிஷாரடி எதிர்ப்பு தெரிவித்தார். பொதுக்குழுவில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் தான் நிரபராதி என நிரூபித்த பிறகே வெளியேறுவேன் என்று கூறிய ஸ்வேதா மேனன், ரமேஷ் பிஷாரடியின் தற்காலிகக் குழு விதிகளுக்குப் புறம்பானது எனக் கூறி நீதிமன்றத்தை அணுகினார்.

பழைய நிர்வாகக் குழு தங்களின் ராஜினாமாவை அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பிக்காததால் சட்டச் சிக்கல் எழுந்தது. ​சங்க விதிகளைப் பரிசீலித்த நீதிமன்றம், அடுத்த தேர்தல் நடக்கும் வரை ஸ்வேதா மேனன் மற்றும் குக்கு பரமேஸ்வரன் அடங்கிய பழைய குழுவே தொடரலாம் என இடைக்கால உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக ரமேஷ் பிஷாரடி தற்காலிகக் குழுவிலிருந்து விலகினார்.

மலையாள சினிமா நடிகர்கள் சங்க நிர்வாகிகள்
மலையாள சினிமா நடிகர்கள் சங்க நிர்வாகிகள்

இந்த நிலையில் கேரளத்தின் முக்கிய விழாவான ஓணம் பண்டிகை நெருங்குவதை ஒட்டி ​அம்மா அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஸ்வேதா மேனன் தலைமையிலான நிர்வாகக் குழு 'ஓண கிட்' என்ற பெயரில் பரிசுகள் விநியோகம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேசமயம், சினிமா நட்சத்திரங்கள் பலர் அந்த ஓணக் கிட்டுகளைப் பெற மறுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரமேஷ் பிஷாரடியின் தற்காலிகக் குழு தொடர்ந்து செயல்படக் கூடாது என்று மட்டுமே நீதிமன்றம் கூறியுள்ளதே தவிர, ஸ்வேதா மேனன் குழு நிர்வாகத்தைத் தொடரலாம் என்று சான்றளிக்கவில்லை எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனராம்.

நடிகை ஸ்வேதா மேனன்
நடிகை ஸ்வேதா மேனன்

மலையாள நடிகைகளின் வாட்ஸ்அப் குழுவான 'பெண்மக்கள்' குரூப்பில் உள்ள சில உறுப்பினர்கள் ஸ்வேதா மேனனின் செயல்பாடுகளுக்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாகவும், மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களே ஓண கிட்டுகளைப் பெறச் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ரமேஷ் பிஷாரடியின் தற்காலிகக் குழுவைத் தடை செய்த நீதிமன்றத் தீர்ப்பு, ஸ்வேதா மேனன் குழுவுக்கு முழு அதிகாரம் அளித்துவிட்டதாக அர்த்தமாகாது என்பதே எதிர்ப்பாளர்களின் முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது. ​

அம்மா சங்கத்தின் நிர்வாக அதிகாரம் யாருக்குச் சேரும் என்பது தொடர்பான வழக்கு ஆகஸ்ட் 11-ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையில், அமைப்பில் நிலவும் தொடர் குழப்பத்தைத் தீர்க்க ரெஜிஸ்டாரின் நேரடி நிர்வாகத்தைக் கொண்டுவர வேண்டும் என்று ஒரு தரப்பினர் சில நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளனர். இதனால் அம்மா அமைப்பில் விவாதம் நீடித்துவருகிறது.

"நீங்க மம்மூட்டி சாரா? என்னை ஃபாலோ செய்ங்க!" - நள்ளிரவில் 10 கி.மீ பைக்கில் வழிகாட்டிய தமிழக ரசிகர்!

தமிழ்நாட்டின் காரைக்குடியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் கேரளா திரும்பிக் கொண்டிருந்த மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி வழியறியாமல் தவித்த போது தமிழகத்தைச் சேர்ந்த பாண... மேலும் பார்க்க

"இதை அவர் 12 வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னார்!" - நிவின் பாலி வீடியோவை பகிர்ந்த அனுபமா

நடிகை அனுபமா பரமேஸ்வரன் கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இறுதியில் உங்கள் அமைதியைக் கண்டறிய, பயனற்ற முடிவுகளை நீங்கள் விட்டுவிட வேண்டும்' எனப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு அவரின் காதல் மு... மேலும் பார்க்க

Mohanlal: "ஒரு தகப்பனின் மனதுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?" - மகளின் சினிமா அறிமுகம் பற்றி மோகன்லால்

நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால், இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள 'துடக்கம்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வ... மேலும் பார்க்க

" 'ஜெய் பீம்' படம் நிச்சயமாக எனக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது, ஆனால்.!"- லிஜோமோல் ஷேரிங்

தமிழில் 'ஜெய் பீம்' திரைப்படத்தில் 'செங்கேணி' கதாபாத்திரம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்த லிஜோ மோல் நடிப்பில் 'உன்மதம்' என்ற மலையாள படம் வெளியாகி இருக்கிறது.இந்தப் படம் தொடர்பாக 'Cinema Expres... மேலும் பார்க்க

Pearle Maaney: 'மன்னிப்பு கேட்கிறேன்' ; சர்ச்சையினால் குறைந்த 3 லட்சம் ஃபாலோயர்ஸ் - பின்னணி என்ன?

தொகுப்பாளினி பேர்லே மானி, திரை நட்சத்திரங்களுடன் அவர் செய்யும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நேர்காணல்களுக்குப் பெயர் போனவர். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளப் பக்கங்களில் அவர் விமர்சனத்திற்கு உள்ளாக... மேலும் பார்க்க

CJP: ``மாணவர்கள் செய்த தவறு என்ன? அமைதியான போராட்டத்தைக் கையாளும் முறை இதுவன்று" - டொவினோ கண்டனம்

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க