செய்திகள் :

KGF Yash: "நான் உனக்குத் துணையாக இருக்கிறேன்" - புற்றுநோய் பாதிக்கப்பட்ட ரசிகருடன் பேசிய நடிகர் யஷ்!

post image

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், `கே.ஜி.எஃப்' (KGF) படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவருமான நடிகர் யஷ், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தனது தீவிர ரசிகர் ஒருவருடன் வீடியோ காலில் பேசி, அவருக்குத் தைரியம் அளித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ காலில் பேசிய ரசிகரின் பெயர் சுனில். இவர் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர், யஷ்ஷின் ரசிகர் மன்றத்தின் மாவட்டத் தலைவராக நீண்ட காலமாகச் செயல்பட்டு வருபவர். குடல் புற்றுநோயால் (Rectal Cancer) பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

யஷ் YASH
யஷ் YASH

தனது தீவிர ரசிகர் ஒருவர் இவ்வளவு கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்த நடிகர் யஷ், தனது படப்பிடிப்பு வேலைகளுக்கு (டாக்சிக், ராமாயணம்) இடையில் நேரத்தை ஒதுக்கி, வீடியோ கால் செய்தார்.

சுனிலின் உடல்நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்ததுடன், அவரது குடும்பத்தினருடனும் பேசி, அவர்களுக்கு மன உறுதி அளித்துள்ளார். சுனிலின் நீண்டகால அர்ப்பணிப்பையும், ரசிகர் மன்றப் பணிகளில் அவர் காட்டிய ஈடுபாட்டையும் அன்புடன் நினைவு கூர்ந்தார். "நான் உனக்குத் துணையாக இருக்கிறேன்" என்று உறுதியளித்து ஊக்கப்படுத்தினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. யஷ்ஷின் இந்த செயலைப் பாராட்டி, ரசிகர்கள் அவரை "ரியல் ஹீரோ" என்றும், "இதற்காகத்தான் அவரை அனைவரும் விரும்புகிறார்கள்" என்றும் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.

பெரும் நட்சத்திரங்கள் பிஸியான ஷூட்டிங் கால அட்டவணையில் இருக்கும்போது, இத்தகைய செயல்களில் ஈடுபடுவது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரிய உத்வேகத்தை அளிக்கும். யஷ் தனது ரசிகர்களை வெறும் ரசிகர்களாகப் பார்க்காமல், தனது இத்தனை ஆண்டுக்காலப் பயணத்தில் உடனிருப்பவர்களாகவும் கருதுகிறார்.

யஷ் YASH
யஷ் YASH

திரைப்படங்கள் ஒரு நடிகரை நட்சத்திரமாக்கலாம், ஆனால் இது போன்ற செயல்களே ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ரசிகர்களின் இதயங்களில் ஒரு நிரந்தரமான இடத்தில் அமர வைக்கும்.

நீ என் ஸ்பெஷல் சைல்டு! - உலகத்தின் பார்வைகளை உடைத்த பாரதிராஜா | ஒரு மகளின் கண்ணீர் மடல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

என் இனிய...!

அரசியல் கடந்த அக்மார்க் எண்டர்டெய்னர்! 'நாளைய தீர்ப்பு' டூ 'தளபதி'

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

விசில் சத்தத்தில் அடைத்த காதுகள்! - தீபாவளி FDFS திருவிழாவும், அர்ஜுனரு வில்லு ஆட்டமும்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

`பூவே உனக்காக' தந்த திருப்புமுனை டூ 500 கோடி பாக்ஸ் ஆபீஸ்! - விஜய்யின் அசாத்திய சரித்திரப் பயணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அன்று புரியாத வயது... இன்று புரிகிறது அது படம் அல்ல, காவியம்| பாரதிராஜாவின் காலத்தால் அழியாத படைப்பு