செய்திகள் :

LED TV பழுதைச் சரிசெய்ய புதிய கருவி: "7 வினாடிகளில் பிரச்னையைக் கண்டறியும்"- அசத்திய கரூர் இளைஞர்கள்

post image

கரூர் மாவட்டம், வெள்ளியணை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. டி.வி மெக்கானிக்கான இவரது மகன்கள் சுரேஷ், பிரசாந்த் இருவரும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

ilaignarkal

இந்நிலையில்தான், இருவரும் சேர்ந்து எல்.இ.டி டி.வி பழுதைச் சரிசெய்ய புதிய தொழில்நுட்பக் கருவியை வடிவமைத்து அசத்தியுள்ளனர். இந்தக் கருவிக்கு இந்திய அரசிடம் காப்புரிமை பெற்றுள்ளதோடு, கடந்த 15-ம் தேதி கரூரில் நவீன தொழில்நுட்பக் கோளாறு கண்டறியும் கருவியினை அறிமுகப்படுத்தி சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர் .

இதுகுறித்து, நம்மிடம் பேசிய அந்த இளைஞர்கள், "எங்களது தந்தை டி.வி பழுதுபார்க்கும் தொழிலில் இருந்ததால், அதில் பிரச்னைகளைத் தெரிந்துகொண்டு அதற்காக நவீன கருவியை வடிவமைக்க நினைத்து, அதற்கான முயற்சியில் இறங்கினோம்.

வெற்றிக்கரமாக அதை உருவாக்கினோம். இந்தியா முழுவதும் உள்ள சிறந்த தொழில்நுட்ப பொறியியல் பட்டதாரிகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய Ediode Electronics Private Limited நிறுவனமானது பழுது பார்க்கும் தொழில் மிகவும் நலிவடைந்து உள்ள சூழ்நிலையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை முன்னேற்றுவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

arimugam

இந்தத் தொழில் இன்னும் முறைப்படுத்தப்படாத தொழிலாக உள்ளதால், இதில் உள்ள சிக்கல்களைக் களைவதற்குப் புதிய கண்டுபிடிப்பை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இன்று பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நவீன எல்இடிவி(LED- Smart TV), பழுதுபார்க்கும் தொழில் மேற்கொள்ளும் மெக்கானிக்கல் நீண்ட நேரம் செலவு செய்து, டி.வி-யில் ஏற்பட்டுள்ள பழுதைக் கண்டறிய வேண்டிய உள்ளது.

இதனால், நேரம் அதிகம் செலவாகிறது. அதோடு, அவ்வகையான டி.வி-க்களைப் பழுது பார்ப்பது மிகக் கடினமாகவும் உள்ளது. சில பழுது பார்க்கும் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பழுதுபார்க்கும் தொழிலில் பயன்படுத்தப்படும் வருகிறது. ஆனாலும், ஒவ்வொரு நகரத்திலும் மலை போல எலக்ட்ரானிக்ஸ் குப்பைகள் ( Electronics Waste) தேங்கி கிடைக்கும் அவல நிலை உள்ளது .

இதற்குக் காரணம், தொழில்நுட்பப் பணியாளர்களுக்கும், தொழில் நுட்பத்திற்கும் உள்ள இடைவெளி அதிகம் இருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். இதனால், நாங்கள் முதல் முறையாகக் கூட்டாக இணைந்து கண்டறிந்துள்ள இந்த 'ஸ்மார்ட்சலோனே' என்ற கருவி, ஒன் டச் செய்தால் 7 வினாடிகளில் தொழில்நுட்பப் பிரச்னை என்ன என்பதை உடனடியாகக் கண்டறிந்து, திரையில் காண்பிக்கும்.

crowd

மேலும், தொழில்நுட்பப் பிரச்னையைச் சரி செய்வதற்கான அறிவுரைகளையும் வழங்கும். இதனால், தொழில்நுட்பப் பிரச்னையை விரைவாகச் சரி செய்ய முடியும். எனவே, பழுது பார்க்கும் தொழிலில் இந்தப் புதிய தொழில்நுட்பக் கருவியால் நேர இடைவெளி குறையும். இதற்காக, இந்தியா முழுவதும் உள்ள 800 டி.வி பழுது பார்க்கும் தொழில்நுட்பக் கலைஞர்களை அழைத்து கரூரில் EDIO Smart Clone கருவியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும், பயிற்சி அளித்துள்ளோம்.

உலக அளவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் அதிநவீன தொழில்நுட்ப பழுது நீக்கும் கருவி என்ற சாதனையை உருவாக்கி, உலக சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளோம்" என்றார்கள்.

இனி டீனேஜர்களுக்குத் தனி ChatGPT! – ‘Quiet Hours’, ‘Study Mode’ என புதிய பாதுகாப்பு அம்சங்கள்!

AI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டீனேஜர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘ChatGPT for Teens’ என்ற புதிய அனுபவத்தை OpenAI அறிமுகப்படுத்தியுள்ளது.13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்க... மேலும் பார்க்க

`உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்' - காரைக்குடி அரசுப் பள்ளி மாணவர்களைப் பாராட்டிய நாசா விஞ்ஞானி!

13 அரசுப் பள்ளி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய VIGO செயற்கைக்கோள், கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி காலை 9.45 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியிலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் உயரத்தை நோக்கிப் ப... மேலும் பார்க்க

Makkal Bus: என்ன பஸ்... என்ன ரூட்? - மதுரை மக்களுக்காக கல்லூரி மாணவர் உருவாக்கிய அசத்தல் `செயலி'

மதுரை மாவட்டம், வில்லாபுரம் மீனாட்சி நகர்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராகுல்ராஜ் ஜெயராமன். மதுரை மக்களுக்காக பிரத்யேக நகர்ப்புற பேருந்து செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். இவர் மதுரையில் உள்ள அரசு உதவிபெறு... மேலும் பார்க்க

ஆகாயத் தாமரையிலிருந்து பேப்பர்... ஐ.நா சபை வரை அசத்தும் தமிழ்ப் பெண் சுஷ்மிதா கிருஷ்ணன்!

சுஷ்மிதா கிருஷ்ணன்நம் நாட்டை விட்டுப் போகும் போது, ஆங்கிலேயர், நிலத்தில் பார்த்தீனியத்தையும், நீரில் ஆகாயத் தாமரையையும் விட்டுச் சென்றதாக ஒரு சொல்வழக்கு உள்ளது. காரணம், இவை இரண்டும் மிக விரைவாகப் பரவக... மேலும் பார்க்க

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களில் மாற்றம்: ரூ.299 பிளான் ரத்து; பயனர்களுக்கு கூடுதல் செலவு!

இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களை உயர் மதிப்புள்ள திட்டங்களுக்கு மாற்றும் நோக்கில் பல பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களை அதிரடியாக நீக்கியுள்ளது. நேரடியாகக் கட்டண உயர்வ... மேலும் பார்க்க

ஸ்டைலான டிசைன்; ஸ்மார்ட்டான கேமரா... அசத்தலான AI அம்சங்கள் - அறிமுகமான vivo S2!

ஸ்டைல், கேமரா, பெர்ஃபார்மென்ஸ் என இன்றைய இளம் தலைமுறையினரின் ஸ்மார்ட்போன் எதிர்பார்ப்புகளை மனதில் வைத்து, vivo நிறுவனம் தனது S Series-ன் புதிய மாடலான vivo S2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியு... மேலும் பார்க்க