செய்திகள் :

Lokesh Kanagaraj: "அப்போதான் LCU முடிவுக்கு வரும்" - லோகேஷ் கனகராஜின் லைன் அப் இதான்!

post image

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் இன்று! கோலிவுட்டின் தற்போதைய `மோஸ்ட் வான்டென்ட்' டைரக்டர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். இவருக்கு அதிகப்படியான ரசிகர்களும் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் நடிப்பில், இவரது இயக்கத்தில் `கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் | Director Logesh Kanagaraj

அதற்குள்ளாகவே இவரின் அடுத்தடுத்த படங்களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தன்னுடைய லைன் அப் குறித்தும் சமீபத்திய பேட்டிகளில் அவர் பகிர்ந்திருந்தார். அவருடைய அடுத்தடுத்த திட்டம் பற்றி இதில் பார்ப்போமா...

ரஜினி நடிப்பில் `கூலி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரஜினியுடன், நாகர்ஜுனா, செளபின் சாஹிர், ஷ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். லோகேஷ் இப்படத்தை முடித்த பிறகு `கைதி -2' படத்திற்குச் செல்லவிருக்கிறார். கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான `கைதி' திரைப்படத்திற்கு அப்போதே இரண்டாம் பாகம் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பை உருவானது. மேலும், `விக்ரம்' படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா கேமியோ செய்திருப்பார். `விக்ரம்' படத்தின் ரிலீஸுக்குப் பிறகு லோகேஷ் கொடுத்த நேர்காணல்களில் `ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து ஒரு தனி திரைப்படம் எடுப்பேன்' எனக் கூறி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தார்.

லோகேஷ் கனகராஜ்

சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்டருக்குக் கொடுத்த நேர்காணலில் ` `கைதி -2 ' படத்திற்குப் பிறகு ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து ஒரு முழு திரைப்படம் எடுப்பேன். அப்போதுதான் `விக்ரம் -2' திரைப்படத்தில் இந்த யூனிவர்ஸ் முடிவு பெறும்' எனக் கூறியிருந்தார். இப்படியான லைன் அப் திட்டங்களை வைத்திருக்கும் லோகேஷ் கனராஜுக்கு நடிகர்களின் தேதி கிடைக்கவில்லை எனில், 'கூலி போன்ற ஸ்டாண்ட் அலோன் திரைப்படங்களைத் தொடர்ந்து எடுப்பேன்' எனவும் கூறியிருந்தார்.

இதையெல்லாம் தாண்டி அவர் `எல்.சி.யூ' உருவான விதம் குறித்து ஒரு குறும்படத்தையும் எடுத்திருக்கிறார். அந்தக் குறும்படமும் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தற்போது பரபரப்பாக இயங்கி வருகிறார் லோகேஷ். அவர் தயாரித்திருக்கும் `பென்ஸ்' , `மிஸ்டர் பார்த்' திரைப்படங்கள் குறித்த அப்டேட்களும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Asal Kolaar: `கஞ்சா வச்சிருக்கியானு கேக்குறாங்க' - குடியுரிமை அதிகாரிகள்மீது அசல் கோலார் புகார்!

`ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே... தொர்ட்டா தூக்கினு தொரத்தாத’ பாடல் மூலம் பிரபலமானவர் ராப் பாடகர் வசந்தகுமார் என்னும் அசல் கோலார்.லியோ படத்தில் 'நா ரெடி தான்...' பாடலில் ராப் பாடி திரைத்துறையில் பிரபலமாகி '... மேலும் பார்க்க

Veera Dheera Sooran: ``சேதுபதி ரகளையும் சித்தா எமோஷனலும் கலந்த வித்தியாசமான படம்" - விக்ரம்

சீயான் விக்ரம் நடிப்பு மற்றும் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா படங்களின் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கம் காம்போவில் உருவாகியிருக்கும் `வீர தீர சூரன் - பாகம் 2' திரைப்படம் மா... மேலும் பார்க்க

Veera Dheera Sooran: "போலீஸ் கிட்ட அடிவாங்கி அன்னைக்கு `தூள்' பார்த்தேன்; இன்னைக்கு.." - அருண்குமார்

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா படங்களின் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் - சீயான் விக்ரம் காம்போவில் உருவாகியிருக்கும் `வீர தீர சூரன் - பாகம் 2' திரைப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியா... மேலும் பார்க்க

Empuraan: 'மிகவும் அற்புதமான படைப்பு' - எம்பூரான் படக்குழுவைப் பாராட்டிய ரஜினிகாந்த்

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எல் 2: எம்பூரான்' வருகிற 27-ம் தேதி திரையரங்குகளில் வெளிய... மேலும் பார்க்க

``பாஸ் (எ) பாஸ்கரன் இளைஞர்களுக்கும் கனெட் ஆக காரணம்... ஆர்யா கொடுத்த சப்ரைஸ்..!" - இயக்குநர் ராஜேஷ்

ரீ ரீலிஸ் டிரெண்ட்டில் அடுத்ததாக இந்த வாரம் ̀பாஸ் (எ) பாஸ்கரன்' திரைப்படம் வெளியாகிறது. இப்படியான ரீ ரிலீஸ் பழைய திரைப்படங்களின் அதே நாஸ்டால்ஜிய நினைவுகளையும் மீண்டும் நம் கண் முன்னே நிறுத்தும். ̀பாஸ்... மேலும் பார்க்க