செய்திகள் :

LSG vs DC: "அதனால்தான் எதிரணிக்கு நெருக்கடி தர முடியவில்லை" - தோல்வி குறித்து கேப்டன் ரிஷப் பண்ட்

post image

ஐபில் தொடரில் நேற்று நடைபெற்ற (ஏப்ரல் 1) லக்னோ vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இரண்டு புள்ளிகளைச் சேர்த்துள்ளது டெல்லி அணி.

இப்போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த அணியை, 70 ரன்கள் சேர்த்து மீட்டு ஆட்டநாயகன் விருதை வாங்கி இருந்தார் டெல்லி அணி வீரர் சமீர் ரிஸ்வி.

இந்தப் போட்டிக்கு பின்னர் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசுகையில்,``ரன்-அவுட் போன்ற நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை மறந்துவிட்டு முன்னேறுவதே சிறந்தது. அதையே நினைத்துக் கொண்டிருந்தால் பின்னடைவுதான் ஏற்படும்.

​இந்த ஆடுகளத்தில் 140 ரன்கள் என்பது மிகக் குறைவு. அதனால் எதிரணிக்கு பெரிய நெருக்கடி தர முடியவில்லை.

Rishabh Pant
Rishabh Pant

போதிய ரன்கள் இல்லாததால்தான், பந்துவீசத் தெரிந்த ஒரு பேட்ஸ்மேனை 'இம்பாக்ட் பிளேயர்' ஆகக் கொண்டு வந்தோம். நடு ஓவர்களில் அதிரடி காட்டவே பூரனுக்கு முன்னால் பதோனியை இறக்கினோம்.

இடது-வலது காம்பினேஷனை முயற்சித்தோம், ஆனால் நான் தவறான நேரத்தில் ஆட்டமிழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. நான் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க முடியும்.

எங்கள் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் நன்றாகச் செயல்பட்டனர். அது ஒரு நல்ல அறிகுறி. ஆனால் 20 எக்ஸ்ட்ரா ரன்கள் கொடுத்தது பாதிப்பை ஏற்படுத்தியது. விக்கெட்டுகளை எடுக்க முயன்றபோது அவர்கள் சுலபமாக ரன் சேர்த்துவிட்டார்கள். வரும் போட்டிகளிலும் நான் டாப் ஆர்டரில் விளையாடுவதை நீங்கள் நிச்சயம் பார்க்கலாம்" என்று கூறிருக்கிறார்.

SRH vs DC: "கேமராவை என் அப்பா பக்கம் திருப்பி அவர் ரியாக்ஷனைப் பாருங்க" - ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல் 21) ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.அபிஷேக் சர்மாவின் அதிரடி சதமே சன்ரைசர்ஸ் அணியின் ... மேலும் பார்க்க

SRH Vs DC: "பீல்டிங் மட்டும் கைகொடுத்திருந்தால் மேட்ச் மாறியிருக்கும்"– தோல்வி குறித்து அக்சர் படேல்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 21) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் போராடித் தோல்வியடைந்தது. அபிஷேக் சர்மா மற்றும் கிளாசனின் அதிரடி ஆட்டத்தால் ஹைதராபாத் இ... மேலும் பார்க்க

IPL: கேன்வாஸ் ஷுவில் பயிற்சி; சைக்கிளில் பயணம்; மும்பை அணியில் அசத்தும் அஸ்வனி குமார் - யார் இவர்?

'எப்போதெல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நினைப்பேன்' என உத்வேகமாக பேசிய மும்பை அணியின் இளம் வீரரான அஸ்வனி குமார் குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய (ஏப்... மேலும் பார்க்க

GT vs MI: "ஹர்திக் பாயுடன் இணைந்துதான் திட்டமிட்டேன்" - மும்பையின் கம்பேக் வெற்றி குறித்து அஸ்வனி

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்20) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின.இதில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் புள்ளி... மேலும் பார்க்க

GT vs MI: "மைதானத்தில் நான் கொடுத்த எனர்ஜி எனக்கே தலைசுற்றலை ஏற்படுத்தியது, ஆனால்.!"- ஹர்திக்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்20)நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு மு... மேலும் பார்க்க

GT vs MI: 'OG is Back டி' - கம்பேக் கொடுத்த மும்பை இந்தியன்ஸ்; வீழ்ந்த குஜராத் டைட்டன்ஸ்!

"மூழ்காத ஷிப்பே மும்பை ஷிப்பா" எனப் பாட வைக்குமளவு தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது மும்பை அணி.ரபடாவின் பீரங்கித் தாக்குதலில் தொடங்கி, திலக் வர்மாவினை கதாநாயகனாக்கிய குஜராத்தின் திக்திக்... மேலும் பார்க்க