புதுச்சேரி: `மூன்று கொலைகளையும் செய்தது பாஜக எம்.எல்.ஏ-தான்!’ - பகீர் கிளப்பும் ...
Mask: "காலேஜ் வேலைகளை முடிச்சிட்டு படம் பார்க்க வாங்க!" - கல்விக்கு முக்கியத்துவம் அளித்த கவின்
கவின், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருக்கும் 'மாஸ்க்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கவின் டூர் சென்று வந்தார்.
மதுரை பாத்திமா கல்லூரியில் அவர் கல்விக்கு முக்கியத்துவம் அளித்துப் பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரையில் கவின் பேசுகையில், “நாளைக்கு 'மாஸ்க்' திரைப்படம் ரிலீஸ் ஆகுது. வெள்ளிக்கிழமை எல்லோருக்கும் காலேஜ் இருக்கும்.
சமத்தாக, நாளைக்கு காலேஜுக்கு வந்து உங்களுடைய கடமைகளை முடிச்சிட்டு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை படத்தை வந்து பாருங்க.
எந்த பிரச்னையும் கிடையாது. அது வெறும் என்டர்டெயின்மென்ட்! தேவைப்படும்போது அதுல என்டர் ஆகுங்க. தேவை முடிஞ்சதும் அந்த என்டர்டெயின்மென்ட்ல இருந்து எக்சிட் ஆகி வந்துடுங்க.
இந்தப் படத்தின் கதை இயக்குநரோட வாழ்க்கையில நிகழ்ந்த உண்மைச் சம்பவம். அந்த உண்மைச் சம்பவத்தை என்டர்டெயின்மென்ட் விஷயங்கள் கலந்து சொல்லியிருக்கோம்.
இந்தப் படத்தைப் பார்க்கும்போது அனைத்து மிடில் க்ளாஸ் குடும்பத்துக்கும் கனெக்ட் ஆகும். ஏன்னா, அப்படியான விஷயம் இந்தப் படத்துக்குள்ள இருக்கு.” எனப் பேசியிருக்கிறார்.













