செய்திகள் :

McDonald's: '40 ஆண்டுகளாக எங்களுடன்' - இந்திய வம்சாவளி ஊழியருக்கு ரூ. 35 லட்சம் பரிசளித்த நிர்வாகம்

post image

அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் (McDonald's) உணவகத்தில் 40 ஆண்டுகளாகப் பணியாற்றிய இந்திய வம்சாவளி ஊழியர் ஒருவருக்கு, சுமார் 35 லட்சம் ரூபாய் வெகுமதி அளித்து கௌரவிக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பர்கன் சிங் என்ற இந்திய வம்சாவளி நபர், கடந்த 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து மெக்டொனால்ட்ஸில் பணியாற்றி வருகிறார். இவருடைய இந்த நீண்ட கால சேவையைப் பாராட்டி அந்த உணவக நிர்வாகம் அவருக்கு ஒரு சிறப்பு விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

அதுமட்டுமின்றி, அவரின் 40 ஆண்டு கால உழைப்பைக் கௌரவிக்கும் வகையில் 40,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 35.5 லட்சம் ரூபாய்) வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளது.

McDonalds
McDonalds

பர்கன் சிங் தனது தந்தையுடன் இணைந்து மெக்டொனால்ட்ஸில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் மேஜைகளைச் சுத்தம் செய்வது, குப்பைகளை அகற்றுவது மற்றும் சமையலறையில் உதவிகள் செய்வது போன்ற வேலைகளைச் செய்து வந்திருக்கிறார்.

அதன்பின்னர் வேலையின் மீது அதிக கவனம் செலுத்தி, கடையின் அனைத்து செயல்பாடுகளையும் கற்றுக்கொண்டிருக்கிறார். சில மாதங்களிலேயே அவரது திறமையைப் பார்த்து நிர்வாகம் அவருக்கு 'ஸ்விங் மேனேஜர்' (Swing Manager) என்ற பதவி உயர்வை வழங்கியிருக்கிறது.

இந்த உணவகத்தின் உரிமையாளரான லின்சே வாலன் இது குறித்து கூறுகையில், "பர்கன் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிட்டார். அவர் தனது தந்தையுடன் இங்கே வேலைக்குச் சேர்ந்தார். இன்று நான் நான்கு மெக்டொனால்ட்ஸ் கிளைகளை நிர்வகித்து வருகிறேன். அதில் பர்கன் ஒரு முக்கிய தூணாக இருக்கிறார்" என்று பெருமிதமாகக் கூறியிருக்கிறார்.

Japan: "வேலையை முடிக்காமல் வீட்டுக்குப் போக முடியாது" - ஜப்பானிலுள்ள இந்த வினோத கஃபே பற்றி தெரியுமா?

நம்மில் பலருக்கும் ஒரு பழக்கம் இருக்கும். எதுவாக இருந்தாலும், "நாளை பார்த்துக்கொள்ளலாம்" என்று வேலையைத் தள்ளிப்போடுவது. இப்படி உள்ளவர்களுக்கென்றே ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒரு பிரத்யேக காபி ஷாப் திறக்... மேலும் பார்க்க

'யாரும் நினைத்து பார்க்காத ஒரு வாழ்க்கை' - 82 வயதில் ஸ்கூட்டரில் பறக்கும் மந்தாகினி

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்த 87 வயதான மந்தாகினி மூதாட்டி, தனது தங்கை உஷாவுடன் புத்துணர்வோடு ஸ்கூட்டரில் நகரை வலம்வரும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.... மேலும் பார்க்க

ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் நூடுல்ஸ், தேநீர் தயாரித்த பெண்; வீடியோ - எச்சரிக்கும் ரயில்வே

நீண்ட தூர ரயில்களில் பயணிகள் மொபைல் போன் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்து கொள்ள சார்ஜிங் பாயிண்ட் வைக்கப்பட்டுள்ளது. அதனை வேறு எந்த தேவைக்கும் பயன்படுத்தக்கூடாது. ரயிலில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கூ... மேலும் பார்க்க

"என்னை அடிக்கிறாங்க அப்பா" - மராத்தி பேசாததால் அடி; அவமானத்தில் மாணவர் தற்கொலை; தந்தை சொல்வது என்ன?

மும்பையில் வசிப்பவர்கள் கட்டாயம் மராத்தி பேச வேண்டும் என்ற கோரிக்கையை மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி முன்வைத்தது. அவ்வாறு மராத்தி பேசாத கடைக்காரர்களை அக்கட்சியினர் அடித்த சம்பவங்களும் இதற்கு முன்பு... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: சித்ரவதை செய்த மாணவர்கள்; கண்டுகொள்ளாத ஆசிரியர்; 4ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் 4வது வகுப்பு படித்து வந்த 9 வயது மாணவி அமைரா குமார் மீனா, பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.காலை 11 மணிக்கு பள்ளி வக... மேலும் பார்க்க

போலந்து: காட்டில் கண்டெடுக்கப்பட்ட தங்க, வெள்ளி நாணயங்கள் - வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்!

போலந்தில் உள்ள நிசின்ஸ்கா வனப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை தங்க மற்றும் வெள்ளி நாணயங்களைக் கண்டறிந்துள்ளனர். இந்த நாணயங்கள் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்... மேலும் பார்க்க