செய்திகள் :

MI VS PBKS: பறந்து கேட்ச் பிடித்த ஷ்ரேயஸ்; வாயடைத்துப் போன ரோஹித், சூர்யகுமார்; ஷாக் ஆன MI! | வீடியோ

post image

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2026 போட்டியின்போது, பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷ்ரேயஸ் ஐயர் பிடித்த ஒரு கேட்ச், ஒட்டுமொத்த மைதானத்தையும், மும்பை இந்தியன்ஸ் வீரர்களையும் சிலிர்க்க வைத்துள்ளது.

குறிப்பாக, டக்-அவுட்டில் அமர்ந்திருந்த மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மாவும், சூர்யகுமார் யாதவும் அந்தக் கேட்சைப் பார்த்து வாயடைத்து நின்ற தருணம், சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஆட்டத்தின் மிக முக்கியமான கட்டத்தில் இந்தப் பிரமிக்க வைக்கும் ஃபீல்டிங் நிகழ்ந்தது. மார்கோ ஜான்சன் வீசிய 18வது ஓவரில், மும்பை அணியின் அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா முந்தைய பந்தில் சிக்ஸர் அடித்து மிரட்டிக்கொண்டிருந்தார்.

ஓவரின் மூன்றாவது பந்தையும் அவர் சிக்ஸருக்கு விரட்ட, அது நிச்சயம் எல்லைக்கோட்டைத் தாண்டும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், லாங்-ஆன் திசையில் இருந்து புயலென ஓடிவந்த ஷ்ரேயஸ் ஐயர், காற்றில் பறந்து பந்தை ரிவர்ஸ்-கப் முறையில் பிடித்தார்.

தரையில் விழுந்து, எல்லைக்கோட்டைத் தொடுவதற்குள், சமநிலையை இழக்கும் முன், அருகே இருந்த சக வீரர் சேவியர் பார்ட்லெட்டிடம் பந்தைத் தூக்கி எறிந்து கேட்ச்சை முழுமையடைய செய்தார்.

ஷ்ரேயஸின் இந்த அசாத்திய முயற்சியைப் பார்த்த மும்பை இந்தியன்ஸ் டக்-அவுட் ஒரு கணம் ஸ்தம்பித்துப்போனது. ரோஹித் ஷர்மா தனது வாயில் கைவைத்து ஆச்சரியத்தில் உறைந்து நின்றார்.

சூர்யகுமார் யாதவ்வின் முகத்திலும் அதே அதிர்ச்சியும் பிரமிப்பும் வெளிப்பட்டது. ஸ்கோர்கார்டில் ஹர்திக் பாண்டியா 'கேட்ச் பார்ட்லெட்' என்று குறிப்பிடப்பட்டாலும், இந்த விக்கெட்டின் முழு பெருமையும் ஷ்ரேயஸ் ஐயரையே சாரும்.

கேட்ச் பிடித்த பிறகு, மும்பை ரசிகர்களைப் பார்த்து கைதட்டுமாறு ஷ்ரேயஸ் சைகை செய்தது, அந்தத் தருணத்தின் உணர்ச்சிப்பூர்வமான உச்சமாக அமைந்தது. 'சீசனின் சிறந்த கேட்ச்' என ரசிகர்கள் இப்போதே கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

இந்த அபாரமான கேட்ச் ஒருபுறம் இருந்தாலும், போட்டி மும்பை இந்தியன்ஸுக்குச் சாதகமாக அமையவில்லை. முன்னதாக, பேட்டிங் செய்த மும்பை அணி, தடுமாற்றமான தொடக்கத்தைக் கண்டது. வெறும் 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தபோது, ரோஹித் ஷர்மாவுக்குப் பதிலாக களமிறங்கிய குவின்டன் டி காக், தனி ஒருவராக அணியைத் தாங்கினார்.

60 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 112 ரன்கள் விளாசி, தனது மூன்றாவது ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்தார். அவருடன் நமன் திர் அரைசதம் கடக்க, மும்பை அணி 20 ஓவர்களில் 195/6 என்ற சவாலான ஸ்கோரை எட்டியது. பஞ்சாப் தரப்பில், அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பஞ்சாப் அணி
பஞ்சாப் அணி

196 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 17 ஓவர்களுக்குள்ளாகவே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

IPL: கேன்வாஸ் ஷுவில் பயிற்சி; சைக்கிளில் பயணம்; மும்பை அணியில் அசத்தும் அஸ்வனி குமார் - யார் இவர்?

'எப்போதெல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நினைப்பேன்' என உத்வேகமாக பேசிய மும்பை அணியின் இளம் வீரரான அஸ்வனி குமார் குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய (ஏப்... மேலும் பார்க்க

GT vs MI: "ஹர்திக் பாயுடன் இணைந்துதான் திட்டமிட்டேன்" - மும்பையின் கம்பேக் வெற்றி குறித்து அஸ்வனி

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்20) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின.இதில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் புள்ளி... மேலும் பார்க்க

GT vs MI: "மைதானத்தில் நான் கொடுத்த எனர்ஜி எனக்கே தலைசுற்றலை ஏற்படுத்தியது, ஆனால்.!"- ஹர்திக்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்20)நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு மு... மேலும் பார்க்க

GT vs MI: 'OG is Back டி' - கம்பேக் கொடுத்த மும்பை இந்தியன்ஸ்; வீழ்ந்த குஜராத் டைட்டன்ஸ்!

"மூழ்காத ஷிப்பே மும்பை ஷிப்பா" எனப் பாட வைக்குமளவு தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது மும்பை அணி.ரபடாவின் பீரங்கித் தாக்குதலில் தொடங்கி, திலக் வர்மாவினை கதாநாயகனாக்கிய குஜராத்தின் திக்திக்... மேலும் பார்க்க

CSK: சென்னை அணிக்குப் பின்னடைவு? - ஆயுஷ் மாத்ரேவுக்கு பதில் யாரை களமிறக்கப் போகிறது சிஎஸ்கே?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ரசிகர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை. சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பி வருகிறது. இதுவரை ஆறு போட்டிகளி... மேலும் பார்க்க

Dhoni: தோனி எப்போது களமிறங்குவார்? - சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி விளக்கம்

காயத்தில் இருந்து குணமடைந்து பயிற்சியை தொடங்கியுள்ள தோனி எப்போது கம்பேக் கொடுப்பார்? என்று சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பய... மேலும் பார்க்க