போலீஸ்காரரிடமே தங்க செயின், செல்போன் திருட்டு - வேலூர் புதிய பேருந்து நிலையத்தில...
Modi: 4400 நாள்கள் பிரதமராக மோடி; "இந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில்..." - தலைவர்கள் வாழ்த்து!
இன்றுடன் 4400 நாள்களாகத் தொடர்ந்து இந்தியப் பிரதமராக இருந்து வருகிறார் மோடி. இது முன்னாள் இந்தியப் பிரதமர் நேருவை மிஞ்சிய சாதனை ஆகும்.
1952-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4,398 நாள்களாக இந்திய பிரதமராக இருந்தார் நேரு. 1947-1952 வரை நேருதான் பிரதமர் என்றாலும், அப்போது அவர் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, நேற்றுடன் நேருவின் சாதனையை முறியடித்துள்ளார் மோடி. இதையொட்டி இந்தியத் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்தத் தொகுப்பு இதோ...

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு:
"நாட்டின் மிக நீண்ட காலம் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகப் பொறுப்பு வகிக்கும் தனிப்பெரும் பெருமையைப் பெற்றுள்ள மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், இந்திய மக்கள் உங்கள் தலைமையின் மீது கொண்டுள்ள நீங்காத நம்பிக்கையையும் உறுதியையும் வெளிப்படுத்துகிறது.
உங்களது ஆட்சிக்காலம் சிறந்த நிர்வாகம், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சமூக மாற்றம் ஆகியவற்றில் தொலைநோக்குக் கொண்ட பல முன்னேற்றங்களால் தனித்துவம் பெற்று விளங்குகிறது.
பரந்த அளவிலான பல்வேறு நலத்திட்டங்கள், வளர்ச்சியின் பயன்கள் எளிய மக்களையும் சென்றடைவதை உறுதி செய்துள்ளன.
இது 'அந்தியோதயா' (கடைக்கோடி மனிதனுக்கும் விடியல்) என்ற கொள்கையின் மீதான உங்களது உறுதியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. உங்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பல உன்னதமான திட்டங்களில், 'பிஎம்-ஜன்மன்' (PM-JANMAN) மற்றும் 'தர்தி ஆபவா பழங்குடியினர் கிராம மேம்பாட்டுத் திட்டம்' (Dharti Aaba Janjatiya Gram Utkarsh Abhiyan) ஆகியவை எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானவை.
உங்களது ஊக்கமளிக்கும் இந்தத் கலைப்பயணம், இந்தியாவின் வலுவான ஜனநாயக மரபுகள் மீது புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் தொடர்ந்து அளித்து வருகிறது.
நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றி, சுயசார்பு பாரதம் (Atmanirbhar) மற்றும் விகாசித் பாரதம் (Viksit Bharat) என்ற உன்னத இலக்கை நோக்கி நாட்டை வழிநடத்த இறைவனைப் பிரார்த்திக்கிறேன்."

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்:
"பாரதத்தின் மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நம்முடைய மாண்புமிகு பிரதமர் ஸ்ரீமான் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு விரிவாக்கம் முதல் சமூக அதிகாரமளித்தல், தொழில்நுட்ப முன்னேற்றம் வரை, உலக அரங்கில் உயர்ந்த அந்தஸ்து முதல் நமது நாகரிக விழிப்புணர்வின் மறுமலர்ச்சி வரை அனைத்துத் துறைகளிலும் அவரது தொலைநோக்கு தலைமையின் கீழ் பாரதம் வியத்தகு முன்னேற்றத்தைக் கண்டுள்ளது...".
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா:
"மக்களவை முன்னவரும், மாண்புமிகு பிரதமருமான ஸ்ரீ நரேந்திர மோடி ஜி அவர்கள், சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகப் பணியாற்றி, இன்று ஒரு புதிய வரலாற்று மைல்கல்லை நிலைநாட்டியுள்ளார்.
பிரதமராகத் தொடர்ந்து 4,399 நாட்கள் மக்கள் சேவையாற்றி எட்டியுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல், இந்திய ஜனநாயகத்தின் வலிமைக்கும், மக்கள் அவர் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் ஒரு சிறந்த அடையாளமாகும்.
இக்காலகட்டத்தில், ஆரோக்கியமான நாடாளுமன்றச் செயல்பாடுகள் மற்றும் மரபுகள் மூலம் நமது அரசியலமைப்பு மதிப்புகள், நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் ஜனநாயக அமைப்புகள் ஆகியவை மேலும் வலுப்பெற்றுள்ளன.
இந்தத் தனித்துவமான சாதனைக்காக மாண்புமிகு பிரதமர் ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தின் தொடர் வளர்ச்சி, நல்நிர்வாகம் மற்றும் வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கான உன்னத லட்சியத்தை நிறைவேற்றுவதில் அவரது தலைமை சிறக்க எனது வாழ்த்துகள்."
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்:
"இந்தியாவின் மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு.மோடி ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
நம்மைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு ஜனநாயக நாட்டில், மக்களின் தொடர்ச்சியான நம்பிக்கையைப் பெறுவது என்பது ஒரு மிகப்பெரிய சாதனையாகும்.
நமது ஒட்டுமொத்த கவனமும் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சக குடிமக்களின் நலனை நோக்கியே என்றும் நிலைத்திருக்கட்டும்."

அண்ணாமலை:
"இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக, இன்றுடன் 4,399 நாட்களை நிறைவு செய்துள்ள நம்முடைய மாண்புமிகு பிரதமர் திரு.மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
நமது நாட்டிற்கான மக்கள் சேவையை அவர் தொடர்ந்து ஆற்றுவதற்கு ஏதுவாக, எல்லாம் வல்ல இறைவன் அவருக்குப் பேராற்றலையும் நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கி அருளட்டும்."
முன்னாள் ஆளுநர், பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தர்ராஜன்:
"12 ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் எதிர்காலம் ஒரு நிச்சயமற்றதாக இருந்தது.
ஆனால், 12 ஆண்டுகளுக்குப் பின்பு, இந்தியாவின் அசாத்திய வளர்ச்சி இன்று நிஜமாகியுள்ளது.
இன்று, மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவின் வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்றிய, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக உருவெடுத்துள்ளார்.
இது தேசத்திற்கான மன உறுதியின், மாற்றத்தின் மற்றும் அயராத மக்கள் சேவையின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம்!"















