செய்திகள் :

Mutual Fund முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம் 12% அதிகமா, குறைவா? - ஒரு தெளிவான வழிகாட்டல்!

post image

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்காகத் தேடிவருகிற அனைவரும் கேட்கும் முதல் கேள்வி, இந்த முதலீட்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதுதான்.

அதிக லாபம் எந்த முதலீட்டில் கிடைக்கும் என்கிற கேள்வியோடு இன்றைக்குப் பல முதலீட்டாளர்கள் புதிய வாய்ப்புகளைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி தெரியவரும்போது இந்தக் கேள்வியைக் கேட்பது இயற்கையான விஷயம்.

இந்தக் கேள்வியைக் கேட்கும் முதலீட்டாளர்களிடம், ''7 முதல் 10 ஆண்டுகளுக்கு மேல் நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்துவைத்திருந்தால், உங்களுக்கு 12% லாபம் கிடைக்கும்'' என்று சொன்னால், அவர்களின் ரியாக்‌ஷன் இரண்டு, மூன்று விதமாக உள்ளன.

''12% லாபம் கிடைக்கும் என்கிறீர்களே, அதற்கு என்ன கணக்கு?'' என்பது ஒரு வகை ரியாக்‌ஷன். ''12% லாபத்துக்கு என்ன உத்தரவாதம்?'' என்று கேட்பது இன்னொரு ரியாக்‌ஷன். ''12% வருமானம் மிகவும் கம்மியா இருக்கே!'' என்பது மூன்றாவது வகை ரியாக்‌ஷன். இந்த மூன்று வகை ரியாக்‌ஷனுக்கான பதிலைப் பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

முதல் ரியாக்‌ஷனுக்கான பதில் முதலில்... நாம் ஏன் முதலீடு செய்கிறோம்? நம் பணத்தை வீட்டில் வைத்திருந்தால், அதனால் எந்த வருமானமும் கிடைக்காது. ஆனால், பணவீக்கம் என்று சொல்லப்படும் விலைவாசி உயர்வு ஆண்டுக்கு 6% என்கிற அளவில் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது.

இந்தப் பணவீக்கத்தினால்/விலைவாசி உயர்வினால், நம்மிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு குறையாமல் இருக்கவேண்டும் எனில், 6% - 7% வட்டி வருமானம் கிடைக்கும் வங்கி பிக்சட் டெபாசிட்டில் பணத்தை முதலீடு செய்யலாம்.

ஒரு பக்கம் பணவீக்கம் 6% எனில், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக ஒரு ஆண்டுக்கு 6% என்கிற அளவில் வளர்ந்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் 6% வளர்ச்சி அடையும்போது நமக்குக் கிடைக்கும் லாபம் 6% என்று வைத்துக்கொண்டால், இந்த இரண்டின் கூட்டுதான் மியூச்சுவல் ஃபண்டில் கிடைக்கும் 12% லாபம்.

வங்கி பிக்சட் டெபாசிட்டில் நம் பணத்தை வைத்திருக்கும்போது பணவீக்கம் அளவுக்கு நமக்கு வருமானம் கிடைக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படும் நன்மை நமக்குக் கிடைப்பதில்லை. ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் நம் பணத்தை முதலீடு செய்யும்போது பணவீக்கத்தைத் தாண்டிய வருமானமும் கிடைக்கிறது;

பொருளாதார வளர்ச்சியினால் கிடைக்கும் லாபமும் நமக்குக் கிடைக்கிறது. மியூச்சுவல் ஃபண்டில் நமக்கு 12% லாபம் கிடைக்கும் என்று சொல்லப்படுவதற்கு இதுதான் கணக்கு.

இந்த வீடியோவைப் பார்க்க விரும்புகிறவர்கள் இந்த லிங்க்கினைக் கிளிக் செய்யுங்கள்... https://www.youtube.com/watch?v=kreaCTL9uMI

அடுத்த ரியாக்‌ஷன், மியூச்சுவல் ஃபண்டில் 12% வருமானம் உத்தரவாதமாகக் கிடைக்குமா என்பது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு உத்தரவாதம் எதுவும் இல்லை. உத்தரவாதம் என்றால் என்ன அர்த்தம்? 12% வருமானம் உத்தரவாதம் எனில், 12 சதவிகிதத்துக்குக் குறைவாகவும் தரக்கூடாது. அதிகமாகவும் தரக்கூடாது என்பதுதானே உத்தரவாதம்?

ஆனால், மியூச்சுவல் 12% லாபத்தைவிட அதிகமான லாபத்தைத் தந்த ஃபண்ட் திட்டங்கள் நிறையவே உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் 15 சதவிகிதத்தைவிட அதிக லாபம் தந்த ஃபண்ட் திட்டங்களின் எண்ணிக்கை 40 - 50 ஆகும்.

கடந்த 10 ஆண்டுகளில் 20 சதவிகிதத்தைவிட அதிக லாபம் தந்த ஃபண்ட் திட்டங்களின் எண்ணிக்கை 10 - 20 ஆகும். ஆக, 12 சதவிகிதத்துக்கு மேல் பல ஃபண்ட் திட்டங்கள் லாபம் தந்துள்ளன.

ஆனால், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் 12 சதவிகிதத்துக்கு மேல் லாபம் கிடைக்கும் என்று சொல்லக் கூடாது என அறிவுறுத்தி இருப்பதால், 12% லாபம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

எனவே, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு உத்தரவாதம் எதுவும் இல்லை என்றாலும், 10 ஆண்டுகள் வரை தொடர்ந்து முதலீடு செய்திருந்தால், 12% மேல் லாபம் கிடைக்க நிறைய வாய்ப்பு உண்டு என்பதை மறுக்க முடியாது!

தங்கம்
தங்கம்

மூன்றாவதாக, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் 12% வருமானம் குறைவா என்று கேட்டால், குறைவு என்று நிச்சயம் சொல்ல முடியாது. பங்குச் சந்தையில் நேரடியாகப் பங்குகளை வாங்கினால் அதிக லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு என்றாலும், அதில் ரிஸ்க்குகள் அதிகம்.

பெரிய அளவில் நஷ்டம் வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன. கிரிப்டோ கரன்ஸியிலும் அதிக லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு என்றாலும், மிகப் பெரிய நஷ்டம் வருவதற்கான வாய்ப்பு இருப்பதையும் மறுக்க முடியாது.

ரியல் எஸ்டேட், தங்கத்தில் செய்யப்படும் முதலீட்டுக்குக்கூட ஆண்டுதோறும் 12% லாபம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்கிறபோது, மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கிடைக்கும் 12% லாபத்தைக் குறைவு என்று எப்படிச் சொல்ல முடியும்?

ஆக, இந்த உண்மைகளை எல்லாம் புரிந்துகொண்டால், மியூச்சுவல் ஃபண்டில் 12% எப்படிக் கிடைக்கும், எந்த அளவுக்கு உத்தரவாதமாகக் கிடைக்கும், அப்படிப்பட்ட லாபம் வேறு எதிலும் கிடைக்காது என்பதை நம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதில் சந்தேகமே இல்லை!

முதலீட்டு ஆலோசனை வேண்டுமா?

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள 'லாபம்' மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் முதலீட்டு ஆலோசனை தருகிறது. உங்களுக்கும் முதலீட்டு ஆலோசனை வேண்டும் எனில், பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...

NRI Calendly - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

லாபம் வாட்ஸ் அப் குரூப்பில் இணைய விருப்பமா? இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்!

https://labham.money/events/webinar-apr18-2026?utm_source=labham_whatsapp&utm_medium=whatsapp_group&utm_campaign=webinar_apr18_2026

Labham Youtube Video: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

Single Parent: Retirment பிளானிற்கு எதில் முதலீடு செய்யலாம்?| பணம் வளர்ப்போம்

வாழ்க்கை முழுவதும் ஓடி நிம்மதியாக உட்காருவது 'ரிட்டயர்மென்ட்' காலத்தில் தான். பிற பெற்றோர்களை விட, சிங்கிள் பேரன்டுகள் சற்று அதிகமாகவே ஓடியிருப்பார்கள். அதனால், அவர்களுக்கு ரிட்டயர்மென்ட் கால ஓய்வு மி... மேலும் பார்க்க

Single Parent: அவங்க குழந்தைகளின் கல்விச் செலவை எப்படி பிளான் செய்ய வேண்டும்? | பணம் வளர்ப்போம்

இன்று ஒவ்வொரு பெற்றோர்களும் ஓடியாடி உழைப்பது - அவர்களது குழந்தையின் எதிர்காலத்திற்காக தான். அந்த எதிர்காலத்தை சிங்கிள் பேரன்டுகள் எப்படி சிறப்பாக கட்டமைக்கலாம் என்பதை கூறுகிறார் குடும்ப நிதி ஆலோசகர் ல... மேலும் பார்க்க

பங்குச் சந்தை இறக்கத்தில் SIP-யை நிறுத்துவது புத்திசாலித்தனமா? இதனால் லாபம் கிடைக்குமா?

காய்கறி சந்தை: தக்காளி விலை 1 கிலோ ரூ.50... நீங்கள் ஒரு கிலோ தக்காளியை வாங்குகிறீர்கள். 30 நாள்களுக்குப் பிறகு... தக்காளி விலை 1 கிலோ ரூ.25... 'சூப்பர்' என்று நினைத்து, நீங்கள் ஒரு கிலோ தக்காளிக்குப் ... மேலும் பார்க்க

Rajesh Exports விவகாரம்: LIC-ல் செய்த முதலீடு, காப்பீட்டிற்கு பிரச்னையா?

கடந்த இரண்டு வாரங்களாகவே, பங்குச்சந்தை உலகின் பரபரப்பு டாபிக், 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்'. கடந்த 3-ம் தேதி, செபி இந்த நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தது. அதாவது, செபி இந்த நிறுவனத்தின் 2020... மேலும் பார்க்க

Single Parent: குழந்தை எதிர்காலப் பாதுகாப்பிற்கு ஆயுள் காப்பீடு எவ்வளவு வேண்டும்?|பணம் வளர்ப்போம்

ஒருவர், ஒரு சம்பாத்தியம் என்று ஒரு வண்டி மாட்டை நம்பி தான் சிங்கிள் பேரன்டுகளின் வாழ்க்கை ஓடும். அதனால், அந்த ஒருவர் மிகப் பாதுகாப்பாகவும், புத்திசாலித்தனத்துடனும் இருக்க வேண்டும். அதற்கான ரூட்டைக் கா... மேலும் பார்க்க

சவுதி வாழ் NRI-களுக்கான ரிட்டைர்மென்ட் பிளான்: 50+ வயதினர் கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்!

சவுதி அரேபியாவில் பல வருடங்களாக உழைத்து, சேமித்த பணத்துடன் தாயகம் திரும்பத் திட்டமிடும் என்.ஆர்.ஐ-களுக்கு (NRIs) ஓய்வுகாலத் திட்டமிடல் என்பது மிக முக்கியமான ஒன்று. 50 வயதைத் தாண்டியவுடன், 'கையிலிருக்க... மேலும் பார்க்க