செய்திகள் :

`NEET வினாத்தாள் பிற சோசியல் மீடியாவிலும் கசியும் தான்; ஆனால், டெலிகிராம் Dangerous!'

post image

நாளை மறுநாள் (ஜூன் 21) நீட் மறுதேர்வு.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்த கையோடு, அந்தத் தேர்விற்குப் படித்ததை விட, இன்னும் தீவிரமாக படித்து கடந்த மே 3-ம் தேதி நீட் தேர்வு எழுதி முடித்து 'அப்பாடா' என்று பெருமூச்சு விட்டு அமர்ந்தார்கள் மாணவர்கள்.

ஆனால், அந்தப் பெருமூச்சு நீடிக்கவில்லை. டெலிகிராமில் 'நீட் தேர்வு வினாத் தாள்' கசிந்துவிட்டது. அதனால், 'மறுதேர்வு' என்று அறிவித்தது மத்திய அரசு.

நீட் தேர்வு
நீட் தேர்வு

தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த மாணவர்கள் இப்போது மீண்டும் தேர்விற்குத் தயாராகி வருகிறார்கள்.

'டெலிகிராமில் தான் வினாத்தாள் கசிந்தது' என்று இந்திய அரசு, இந்தச் செயலிக்கு வருகிற ஜூன் 22-ம் தேதி வரை இந்தியாவில் தடை விதித்திருக்கிறது.

இந்தத் தடையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இன்று இந்த வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறார் நீதிபதி தேஜஸ் காரியா.

'சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா?' என்கிற கேள்வியை டெலிகிராம் தடை பலருக்கு எழுப்பியுள்ளது.

பலரும் சமூக வலைதளங்களில் டெலிகிராமை தடை செய்துவிட்டால், பிற செயலிகள் மூலம் வினாத்தாள் கசியதா என்று கேட்கின்றனர். கசியும் தான். ஆனால், டெலிகிராமில் பிற செயலிகளை விட, பெரும் பிரச்னைகள் பல உள்ளன.

வாட்ஸ்ஆப் குரூப்களில் கிட்டத்தட்ட 1,000 பேர் தான் இணைய முடியும். ஆனால், டெலிகிராமில் 2 லட்சம் பேர் இணையலாம்.

இதனால், ஒரே குரூப்பில் லட்சம் பேருக்கு எளிதாக ஒரு தகவலை சென்று சேர்க்கலாம்.

வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களில் குறைந்த சைஸ் கொண்ட பி.டி.எஃப், ஃபைல்களை மட்டுமே ஷேர் செய்ய முடியும். ஆனால், டெலிகிராமிற்கு அப்படி எந்த லிமிட்டும் இல்லை.

டெலிகிராம், வாட்ஸ்அப்
டெலிகிராம், வாட்ஸ்அப்

இதனால், வினாத்தாள் கசிவு மட்டுமல்ல... எந்தவிதமான மோசடி, ஏமாற்று வேலைகள், தவறான வேலைகளையும் டெலிகிராமில் செய்வது எளிது.

வாட்ஸ்ஆப்பில் போன் நம்பரை வைத்து தான் லாக்இன் செய்ய முடியும். ஆனால், டெலிகிராமிற்கு அப்படி ஒன்றும் இல்லை. போலி பெயரை வைத்து கணக்கு தொடங்கி, எளிதாக மோசடி செய்ய டெலிகிராமைப் பயன்படுத்தலாம்.

போன் நம்பரை வைத்து மோசடி பேர்வழிகளைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு ஒப்பீட்டளவில் அதிகம்.

இந்த நீட் வினாத்தாள் கசிவில் மிக முக்கியப் பிரச்னை - 'எடிட்டட் மெசேஜ்'.

டெலிகிராமைப் பொறுத்தவரை, நாம் அனுப்பிய மெசேஜை 48 மணிநேரங்கள் வரை எடிட் செய்யலாம். ஆனால், நேரம் மாறாது. இதை வைத்து தான் மோசடி பேர்வழிகள் வலை விரித்துள்ளனர்.

நீட் வினாத்தாள் தருவதாக கூறி, பணம் வசூலித்து டெலிகிராம் குரூப்பில் இணைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு போலி வினாத்தாளை அனுப்பியிருக்கிறார்கள்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

மாணவர்களும் 'அது தான் வினாத்தாள்' என்று நம்பி, அதை மட்டும் படித்துவிட்டு தேர்விற்கு சென்றிருக்கிறார்கள். தேர்வு அறைக்குள் சென்று வினாத்தாளைப் பார்த்ததும் தான் அவர்களுக்கு அதிர்ச்சி.

தேர்வு முடித்துவிட்டு, டெலிகிராம் குரூப்பை மீண்டும் செக் செய்யும் போது, அன்றைய நீட் தேர்வு வினாத்தாள் எடிட் மூலம் புதிதாக அப்லோட் செய்யப்பட்டிருக்கிறது.

டெலிகிராம் செயலியின் தொடர்ச்சியாக, வருகிற 30-ம் தேதி வரை, டெலிகிராம் ஆப்பில் எடிட் செய்வதற்கான ஆப்ஷனுக்கும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப்பில் டெக்ஸ்ட் மெசேஜ்களை மட்டுமே எடிட் செய்ய முடியுமே தவிர, வீடியோ, ஆடியோ, ஃபைல்ஸ், பி.டி.எஃப், புகைப்படங்களை அல்ல.

அதே போன்று, டெலிகிராமில் அட்மின்களை கண்டுபிடிப்பது மிக கடினம். வேண்டுமானால், அவர்கள் தங்களுடைய புரோஃபைலை மறைத்துக் கூட வைத்துக்கொள்ளலாம்.

வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் மோசடிகள் நடந்தாலே, அதை கண்டுபிடிப்பது மிக சிரமம். அதுவும் டெலிகிராமில் என்றால் மிக மிக சிரமம். இதற்கு முக்கிய காரணம் டெலிகிராமின் வடிவமைப்பு.

இதனால், மற்ற சமூக வலைதளங்களை விட, டெலிகிராம் கொஞ்சம் அதிகம் ஆபத்தானது தான்.!

கிருஷ்ணகிரியில் அதி நவீன ரேடார் தொழிற்சாலை; விரைவில் உற்பத்தியை தொடங்கும் இஸ்ரேல் நிறுவனம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேடார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க உள்ளதன் மூலம், இந்தியாவுக்கு மட்டுமன்றி உலக நாடுகளின் பாதுகாப்புக்கான ரேடார்களை இஸ்ரேல் நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது. இந்தியா - இஸ்ரேல் உ... மேலும் பார்க்க

இனி இலவசம் இல்லையா? மாசம் ₹99! வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமுக்கு வரும் 'Plus' சந்தா - META திட்டமென்ன?

மார்க் சக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம் (வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றின் தாய் நிறுவனம்) சமீபத்தில் தனது முக்கிய செயலிகளுக்கு உலகளவில் சந்தா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வண... மேலும் பார்க்க

Telegram Ban: இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை! - பின்னணி என்ன?

ஜூன் 21-ம் தேதி நடைபெறவிருக்கும் நீட் மறுதேர்வை முன்னிட்டு, இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு சில தற்காலிகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. டெலிகிராம் செயலி மீதான தற்காலிக முடக்கத்தோடு சேர்த... மேலும் பார்க்க

ரூ.250 ஊதியம்: AI ரோபோக்களுக்காக உழைப்பை விற்கும் இந்தியர்கள்! - எதிர்கால தேவையா அல்லது ஆபத்தா?

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், இன்று மென்பொருள்களைத் தாண்டி, மனிதர்களைப் போல உடல்ரீதியாகச் செயல்படும் ரோபோக்களாக (Humanoid Robots) உருவெடுத்து வருகிறது. இந்த ரோபோக்களுக்கு மனிதர்கள் எப்படி வேலை... மேலும் பார்க்க

டிரைவர் பிரேக் பிடிக்காவிட்டாலும் கார் தானாக நிற்கும்; அனுமதி வழங்கிய அரசு... விபத்துகள் குறையுமா?!

இந்தியாவில் தானாக இயங்கும் 'டிரைவர் இல்லா கார்' மற்றும் வாகனப் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுக்கான ஒழுங்குமுறை விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. கார்களில் பயன்படுத்தப்படும் ரேடார் சென்சார்கள் மற... மேலும் பார்க்க

முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் - இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மெட்டா சேவைகள் பாதிப்பு!

மெட்டா நிறுவனத்தின் செயலிகளான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை, உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று முடங்கியுள்ளன. இன்று மதியம் முதல் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் திடீரெனத் தொ... மேலும் பார்க்க