Nepal Flash Flood | நதி தன் பாதையை மாற்றுமா? கோசி என்னும் "துயர ஆறு" | Decode
Nepal Flood: 500-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை - தமிழர்களை மீட்க டெல்லியில் முகாமிட்ட தவெக அமைச்சர்கள்
திபெத்தின் பனிப்பாறைகள் உடைந்ததால், நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தின் போடே கோஷி ஆற்றில், கடந்த புதன்கிழமை (ஆக. 26) திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவரக்ளின் எண்ணிக்கை தற்போது 500-ஐ தாண்டி இருக்கிறது.
1500க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கின்றனர். இந்தப் பேரிடரில் இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சிக்கி இருக்கின்றனர்.
கடுமையான வெள்ளப்பெருக்கால், நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள சுமார் 100 பேரை மீட்கும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. வெள்ளப்பெருக்கை அடுத்து மீட்புப் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
7,250 போலீஸார், 4,200 ராணுவத்தினர், 1,845 ஆயுதப்படை போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்காக தமிழக அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டிருக்கின்றனர். டெல்லி தமிழ்நாடு இல்லத்திலுள்ள உதவி மையத்தில் ஆதவ், ராஜ்மோகன், வினோத், தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தக்கட்டமாக அவர்கள் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்து, நேபாளத்தில் சிக்கி இருக்கும் தமிழர்களை அழைத்து வருவது தொடர்பாக பேசுவார்கள் எனத் தெரிகிறது.
















