செய்திகள் :

PPF முதல் செல்வமகள் சேமிப்பு வரை: குறைந்த வருமானம் தரும் திட்டங்களை மட்டுமே நம்பி இருப்பது சரியா?

post image

நம்மில் பலரும் எதிர்காலத்துக்குத் தேவையான திட்டங்களைத் தேர்வு செய்யும்போது, முதலீடு செய்யும் பணத்துக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்றுதான் நினைக்கிறோமே தவிர, வேறு எந்த விஷயத்தையும் பார்க்க மறுக்கிறோம் என்பதே உண்மை.

செல்வமகள் சேமிப்புத் திட்டம் - சிறு சேமிப்பு

உதாரணமாக, பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட். சம்பளம் வாங்கும் அனைவரும் பிராவிடன்ட் ஃபண்ட் திட்டத்தில் குறிப்பிட்ட அளவு பணத்தைக் கட்டியே ஆகவேண்டும். அரசின் உத்தரவாதம் இதற்கு இருப்பதால், மக்களும் கண்ணை மூடிக்கொண்டு இதில் பணம் கட்டுகிறார்கள். பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் மூலம் சேர்த்த தொகைக்கு எந்த வரியையும் கட்டாமல் திரும்பப் பெறலாம் என்பதால், பலரும் இந்தத் திட்டத்தில் அதிகமான பணத்தைக் கட்டி வருகிறார்கள். ஆனால், இந்தத் திட்டம் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் என்பது வெறும் 7.1%-தான். ஒருவர் இந்தத் திட்டத்தில் சேர்ந்து 5 ஆண்டுகள் பணம் கட்டினாலும் சரி, 10 அல்லது 15, 20 ஆண்டுகள் பணம் கட்டினாலும் 7.1% வட்டி வருமானம்தான் கிடைக்கும்.

இதே போலத்தான் அஞ்சலகத் திட்டங்கள். இந்தத் திட்டங்களுக்கும் மத்திய அரசின் அங்கீகாரம் இருப்பதால், மக்கள் முழு நம்பிக்கையுடன் இந்தத் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். இந்தத் திட்டங்களில் 6.7% முதல் 7.5% வரை வட்டி வழங்கப்படுகிறது. தவிர, ஒரு திட்டத்தில் ஒருவர் எத்தனை லட்சம் வரை முதலீடு செய்ய முடியும் என்கிற நிபந்தனை இருக்கிறது. மேலும், நீண்ட கால அளவில் இவற்றில் முதலீடு செய்ய முடியும். உதாரணமாக, 7.5% வருமானம் தருகிற கிஷான் விகாஸ் திட்டமானது 9.7 ஆண்டுகள் வரை நீள்கிறது.

பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் போல, அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் போல, இன்னொரு திட்டம்தான் தமிழகப் பெண்களின் பெரும் அபிமானத்தைப் பெற்ற செல்வமகள் திட்டம். தன் மகளுக்காக இந்தத் திட்டத்தில் கொஞ்சம் பணத்தையாவது சேர்ப்பது தனது தலையாயக் கடமை என்றே பல பெண்கள் நினைக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் என்பது 8.2%-தான். லாபமாகக் கிடைத்த பணத்திற்கு வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை.

Money (Representational Image)

நீண்ட காலம் முதலீடு செய்ய வேண்டும், குறைந்த வருமானமே கிடைக்கும் என்றாலும் மக்கள் இந்தத் திட்டங்களில் அதிகளவு பணத்தை முதலீடு செயவதற்குக் காரணம், அரசு தரும் உத்தரவாதம்தான். இதில் பணம் போட்டால், எந்தக் காலத்திலும் மோசம் போகாது என்பதை மக்கள் பெரிய விஷயமாக நினைக்கிறார்கள் தவிர, மற்ற எதையும் கவனிப்பதில்லை.

இந்தத் திட்டங்களில் எந்த ரிஸ்க்கும் இல்லை என்பது மக்களின் மறுக்க முடியாத உண்மை. ஆனால், நீண்ட கால நோக்கில் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யும்போது மிகக் குறைந்த வருமானமே கிடைக்கும் என்பதே எத்தனை பெரிய ரிஸ்க் என்பதை மக்கள் யோசித்துப் பார்ப்பதில்லை. தவிர, இந்தத் திட்டங்களின் மூலம் கிடைக்கும் லாபம் என்பது பணவீக்கத்தை ஈடுகட்டவே சரியாக இருக்குமே தவிர, செல்வத்தைப் பெருக்க உதவி செய்வதாக இருக்காது!

இந்தத் திட்டங்களுக்கு பதிலாக, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எடுத்துக்கொள்வோம். செல்வமகள் எனப்படும் சுகன்யா சம்ரிதி சேமிப்புத் திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் முதலீடு செய்து அதற்கு 8.2% லாபம் கிடைக்கும் நிலையில், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் முதலீடு செய்யும்பட்சத்தில் அவருக்கு 12% மேல் லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்யும்போது ஆரம்பத்தில் சில ஆண்டுகளில் முதலீடு செய்த 10% - 20% குறைவதற்கு வாய்ப்பு இருந்தாலும், காலம் செல்லச் செல்ல நஷ்டம் என்பது இல்லாமலே போய், ஏழு ஆண்டுகளுக்கு மேல் 12% மேல் லாபம் கிடைக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

Income Tax

ஆனால், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்துக்கு 12.5% வரி கட்டியாக வேண்டும் என்பதைப் பலரும் பெரிய குறையாகப் பார்க்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் 12% லாபத்தில் 2% வரியாகக் கட்டினால்கூட, மீதம் 10% வருமானம் கிடைக்கும். ரிஸ்க்கே இல்லாத பாதுகாப்பான திட்டம் என மக்கள் நினைக்கும் எந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கிடைக்கும் லாபம் சுமார் 1.5% முதல் 2% வரை அதிகமாகவே இருக்கும்.

இப்படி எல்லாம் சொல்வதால், அரசு நடத்தும் இந்தத் திட்டங்களில் எந்தப் பணத்தையும் முதலீடு செய்யக் கூடாது என்று சொல்ல வரவில்லை. எதிர்காலத்திற்காக நாம் சேமிக்க நினைக்கும் பணத்தில் 10% - 20% பணத்தை மட்டும் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்துவிட்டு, மீதமுள்ள பணத்தை நீண்ட கால நோக்கில் பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாதந்தோறும் முதலீடு செய்துவந்தால், கணிசமான அளவில் செல்வத்தை சேர்க்க முடியும்.

மியூச்சுவல் ஃபண்ட் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்று சொல்வதால் அதில் பணம் போட பயமாக இருக்கிறது என்கிறவர்கள், முதலில் ஒரு சிறிய தொகை அதில் முதலீடு செய்யத் தொடங்கலாம். அந்த முதலீட்டைப் பற்றி ஓரளவு தெரிந்துகொண்டபின் இன்னும் அதிகமான பணத்தை முதலீடு செய்யத் தொடங்கலாம்.

பாதுகாப்பு கருதி நீண்ட காலத்தில் குறைந்த வருமானம் தரும் திட்டங்களை மட்டுமே நம்பி இருப்பது தவறு. சிறிது ரிஸ்க் இருந்தாலும் நீண்ட காலத்தில் அதிக வருமானம் தரும் திட்டங்களைத் தேர்வு செய்வதே சரி என்பதை மக்கள் இனியாவது உணர்ந்து, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும்!

Labham

நிகழ்ச்சி 1: ₹1 கோடி ரூபாய் சேர்ப்பது எப்படி? - கொங்கு மண்டலத்துக்கான சிறப்பு நிகழ்ச்சி

உங்களின் கோடீஸ்வரர் ஆகும் கனவை நனவாக்கும் ஆன்லைன் ஒர்க் ஷாப். கொங்கு பகுதியைச் சேர்ந்தோருக்கான, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அடிப்படை வகுப்பு.

நாள்: ஜூன் 03, 2026, புதன்

நேரம்: மாலை 07 மணி (இந்திய நேரம்)

பேச்சாளர்: டீம் லாபம்

உங்கள் பெயரை இங்கே பதிவு செய்யவும் - https://labham.money/events/webinar-jun03-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_jun03_2026

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்... NRI Calendly - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

Labham Youtube Video: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!

ஐரோப்பாவில் சம்பாதிக்கும் உங்கள் யூரோக்களை, இந்தியாவில் ₹10 கோடியாக மாற்றுவது எப்படி?

ஒரு தசாப்தத்திற்கு முன்பு, கையில் ஒரு சூட்கேஸுடன், புதிய வாழ்க்கையைத் தேடி ஐரோப்பா நோக்கிய அந்த விமானத்தில் நீங்கள் ஏறியபோது இருந்த உற்சாகம் இன்றும் நினைவிருக்கிறதா?கரியர் வளர்ச்சி, பாதுகாப்பான சூழல்,... மேலும் பார்க்க

₹1 கோடியை எட்டிப் பிடிப்பது எப்படி? உங்கள் உழைப்புக்கு ஓய்வு தரும் ஒரு புத்திசாலித்தனமான வழி!

கொங்கு மண்டலத்து மண்ணின் மைந்தர்களாகிய நமக்கு, 'உழைப்பு' என்பது வெறும் சொல் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை. விடியற்காலையில் எழுந்து தொழில் செய்தாலும் சரி, விவசாயம் செய்தாலும் சரி, கையில் வரும் லாபத்தை அப... மேலும் பார்க்க

'பெட்ரோல், டீசல் விலை தானே உயர்கிறது' என்று அசால்டாக இருக்காதீர்; வீட்டுச் செலவு: இப்போதே உஷார்!

மே 15-ம் தேதியில் இருந்து இன்று வரை சென்னையில் பெட்ரோல், டீசல் விலை ஐந்து முறை உயர்ந்துவிட்டது. இந்த உயர்வு பெட்ரோல், டீசல் விலையை கிட்டத்தட்ட ரூ.7 ஏற்றியுள்ளது. இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வை வெறும... மேலும் பார்க்க

வீடு, நிலம் வாங்கும்போது 'டக்'கென முடிவு எடுக்காதீங்க; என்னென்ன கட்டாயம் இருக்கணும்?|பணம் வளர்ப்போம்

பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பதுதான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும். அப்படி இந... மேலும் பார்க்க

Retirement Planning: '50+ வயசா?' - இன்னைக்கி நீங்க நினைச்சா வேலையை விட முடியுமா?

50 வயசை நெருங்கும்போதோ அல்லது தாண்டும்போதோ, நம்ம எல்லோருக்குள்ளும் ஒரு மெல்லிய பயம் வரத் தொடங்கும்.பசங்களோட படிப்பு, கல்யாணம், வீடு வாங்குன ஈஎம்ஐ (EMI) என வாழ்நாளின் பெரும் கடமைகள் ஒருவழியா முடிவுக்கு... மேலும் பார்க்க

பணம், நேரம் - எது முக்கியம் என்பதை எடுத்துச் சொல்லும் காலக் கணக்கீடு உங்களுக்குத் தெரியுமா?

''நான் பெரும் பணக்காரன் ஆகவேண்டும்'' - இப்படி ஆசைப்படாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால், இந்த ஆசை எத்தனை பேருக்கு நிறைவேறுகிறது. நூற்றில் ஒன்று, இரண்டு பேர் பெரும் பணக்காரர் ஆகிறார்கள். இன்னுமொரு 18 பே... மேலும் பார்க்க