செய்திகள் :

'பெட்ரோல், டீசல் விலை தானே உயர்கிறது' என்று அசால்டாக இருக்காதீர்; வீட்டுச் செலவு: இப்போதே உஷார்!

post image

மே 15-ம் தேதியில் இருந்து இன்று வரை சென்னையில் பெட்ரோல், டீசல் விலை ஐந்து முறை உயர்ந்துவிட்டது. இந்த உயர்வு பெட்ரோல், டீசல் விலையை கிட்டத்தட்ட ரூ.7 ஏற்றியுள்ளது.

இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வை வெறும் பிரேக்கிங் நியூஸாகவோ, ஹாட் நியூஸாகவோ மட்டும் கடந்துவிடக் கூடாது. இது நம் அனைவரின் வாழ்விலும் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.

பெட்ரோல், டீசல் போக்குவரத்தின் உயிர்நாடி. நம்முடைய பைக், காருக்கு மட்டும் பெட்ரோல், டீசல் தேவைப்படுவதில்லை.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

மளிகைக் கடையில் நாம் வாங்கும் பல சரக்குகளைக் கொண்டு வரும் லாரிக்கு பெட்ரோல், டீசல் தேவை... அடுத்தடுத்து வரப் போகும் பண்டிகைகளுக்கு நாம் வாங்கப் போகும் துணிகளைக் கடைகளுக்குச் சுமந்து வரும் வாகனத்திற்கும் பெட்ரோல், டீசல் தேவை... அவசர சிகிச்சைக்காக மனிதர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸிற்கும் பெட்ரோல், டீசல் தேவை.

இப்படி வரிசையாகப் பட்டியலிட்டால், லிஸ்ட் நீண்டுகொண்டே போகும். அந்தளவிற்கு பெட்ரோல், டீசல் அத்தியாவசியமான இடத்தைப் பிடித்திருக்கிறது.

அதனால், பெட்ரோல், டீசல் விலை உயரும் போது, தானாக நம்முடைய பயன்பாட்டில் இருக்கும் அத்தனை பொருள்களின் விலையும் ஏறும். இதற்கு காய்கறி முதல் டிராவல் வரை எதுவும் விதிவிலக்கு அல்ல.

தற்போது காஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது. இன்று வணிகப் பயன்பாட்டு காஸ் சிலிண்டர் விலை ரூ.49 உயர்ந்துள்ளது. ஏற்கெனவே சிலிண்டர் விலை உயர்வால், உணவகங்கள் தங்களுடைய உணவுகளின் விலையை உயர்த்தின.

சிலிண்டர் விலை உயர்வு ப்ளஸ் பெட்ரோல், டீசல் விலை உயர்வு - இப்போது இரண்டையும் சமாளிக்க உணவுகளின் விலை இன்னும் ஏற்றப்படும்.

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, இதனால், மூலப்பொருள்களின் விலையும் உயர்ந்தால், Packaged பொருள்களின் விலை உயரும் அபாயம் உண்டு.

அனைத்தும் விலை ஏறிக்கொண்டு போனால், வழக்கமாக நாம் போடும் பட்ஜெட்டில் துண்டு விழும்.

 விலை உயர்வு
விலை உயர்வு

ஒரு வீட்டிலேயே இத்தனை பிரச்னை என்றால், ஒரு நாட்டிற்கு எத்தனை பொருளாதார நெருக்கடி எழும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

வரும் ஜூலை மாதத்திற்கு மேலும், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாவிற்கு 90 டாலர்கள் என வர்த்தகமானால், இந்தியா ரூ.1.25 டிரில்லியன் - 1.50 டிரில்லியன் அளவிற்கு நிதிச்சுமையை சந்திக்கும் என்று ஜெஃப்ரிஸ் நிறுவனம் கணித்துள்ளது.

எந்தப் பக்கம் பார்த்தாலுமே தற்போதைய சூழலால் வீட்டுப் பொருளாதாரத்திற்கும் சரி, நாட்டுப் பொருளாதாரத்திற்கும் சரி 'நல்ல அடி' விழ உள்ளது.

இதைச் சமாளிக்க தன்னிச்சையாக நாம் சில முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்...

> தனி வாகனங்களைப் பயன்படுத்துவதற்குப் பதில், பொது போக்குவரத்தைப் பயன்படுத்தலாம்.

> சிறிய தூரங்களுக்குச் செல்லும் போது, முடிந்தால், நடந்து செல்லலாம்.

> உணவகங்களில் வாங்கிச் சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும்.

> பட்ஜெட்டில் துண்டு விழும் என்பது நிச்சயம். பட்ஜெட்டைச் சமாளிக்கும் அளவுக்கு, நமக்கு வருமானம் உயருமா என்பது பெரும் சந்தேகம். அதனால், தேவையில்லாத செலவுகளை பட்ஜெட்டில் தவிருங்கள்.

வீட்டு பட்ஜெட்
வீட்டு பட்ஜெட்

> எக்ஸ்ட்ரா வருமானத்திற்கு வாய்ப்பிருந்தால், அதை பயன்படுத்துங்கள்.

> கொஞ்ச நாள்களுக்கு வெளிநாட்டு பயணங்கள், டிரிப்புகளைத் தவிருங்கள்.

> மளிகைச் சாமான்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்காமல், பல்க்காக வாங்குங்கள். இதில் பெட்ரோல், டீசல் பயன்பாடும் குறையும். பட்ஜெட்டில் சின்ன தொகையை சேமிக்கலாம்.

'சிறுதுளி பெருவெள்ளம்' - நாம் முன்னெடுக்கும் குட்டி குட்டி முயற்சிகள், நிச்சயம் ஒரு தொகையை நமக்கு சேர்த்துக்கொடுக்கும்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வீடு, நிலம் வாங்கும்போது 'டக்'கென முடிவு எடுக்காதீங்க; என்னென்ன கட்டாயம் இருக்கணும்?|பணம் வளர்ப்போம்

பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பதுதான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும். அப்படி இந... மேலும் பார்க்க

Retirement Planning: '50+ வயசா?' - இன்னைக்கி நீங்க நினைச்சா வேலையை விட முடியுமா?

50 வயசை நெருங்கும்போதோ அல்லது தாண்டும்போதோ, நம்ம எல்லோருக்குள்ளும் ஒரு மெல்லிய பயம் வரத் தொடங்கும்.பசங்களோட படிப்பு, கல்யாணம், வீடு வாங்குன ஈஎம்ஐ (EMI) என வாழ்நாளின் பெரும் கடமைகள் ஒருவழியா முடிவுக்கு... மேலும் பார்க்க

பணம், நேரம் - எது முக்கியம் என்பதை எடுத்துச் சொல்லும் காலக் கணக்கீடு உங்களுக்குத் தெரியுமா?

''நான் பெரும் பணக்காரன் ஆகவேண்டும்'' - இப்படி ஆசைப்படாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால், இந்த ஆசை எத்தனை பேருக்கு நிறைவேறுகிறது. நூற்றில் ஒன்று, இரண்டு பேர் பெரும் பணக்காரர் ஆகிறார்கள். இன்னுமொரு 18 பே... மேலும் பார்க்க

UAE NRI வருமானத்தை நிரந்தர மாத வருமானமாக மாற்றுவது எப்படி? NRI Special

சமீபத்தில் துபாயில் வேலை பார்க்கும் ஒரு வாடிக்கையாளர் முதலீட்டு ஆலோசனை கேட்டு என்னைத் தொடர்புகொண்டார். "சார், 15 வருஷமா இங்க வேலை பார்க்கிறேன். வருமானம், வருடாந்திர போனஸ், கிராஜுவிட்டினு கொஞ்சம் சிறுக... மேலும் பார்க்க

பங்குச் சந்தை: 'அதிக லாபத்தைப் பெற எதில் முதலீடு செய்ய வேண்டும்?'- வழியைக் காட்டும் 'லாபம்' நிறுவனம்

பொதுவாக, நல்ல லாபம் பார்க்கும் வழிகள் என்ன, எந்த முதலீட்டில் என்ன ரிஸ்க் இருக்கிறது, அந்த ரிஸ்க்கைத் தாண்டி என்ன லாபம் கிடைக்கும், எதில் எந்த அளவுக்கு முதலீடு செய்யலாம் போன்ற சில அடிப்படைக் கேள்விகளின... மேலும் பார்க்க

Mutual Fund முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம் 12% அதிகமா, குறைவா? - ஒரு தெளிவான வழிகாட்டல்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்காகத் தேடிவருகிற அனைவரும் கேட்கும் முதல் கேள்வி, இந்த முதலீட்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதுதான்.அதிக லாபம் எந்த முதலீட்டில் கிடைக்கும் என்கிற கேள்வியோடு இன்றைக்குப்... மேலும் பார்க்க