செய்திகள் :

"LIK படத்தின் வசூலை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" - விக்னேஷ் சிவன் கவலை

post image

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், படத்திற்கு இணையத்தில் பரவிய விமர்சனங்கள் படத்திற்குக் கிடைக்க வேண்டிய வரவேற்பைத் தடுத்திருக்கிறது எனக் குறிப்பிட்டு, இயக்குநர் விக்னேஷ் சிவன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார்.

LIK Movie
LIK Movie

பார்வையாளர் ஒருவர், ''படத்தைப் பற்றி வந்த எதிர்மறை விமர்சனங்கள் படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற என் ஆர்வத்தைக் குறைத்தன.

ஆனால், இப்போது படத்தின் ஓடிடியில் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது'' எனக் குறிப்பிட்டு விக்னேஷ் சிவனுக்கு மெசேஜ் செய்திருக்கிறார். இந்த மெசேஜுக்குப் பிறகு இப்பதிவை அவர் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் விக்னேஷ் சிவன், "இணையத்தில் பரவிய கடுமையான எதிர்மறை விமர்சனங்கள் காரணமாக, தியேட்டர்களில் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க முடியாமல் போய்விட்டது என்று பலர் எனக்கு மெசேஜ் செய்திருந்தனர்.

சில திரைப்படங்கள் எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டு தப்பிப் பிழைத்து விடுகின்றன. சில படங்கள் அப்படித் தப்பிப்பதில்லை. தங்களுடைய புத்திசாலித்தனத்தை காட்டுவதற்காக எழுதப்படும் விமர்சனங்கள், ஒரு படத்தை விவாதிப்பதையும் தாண்டி, பார்வையாளர்கள் அந்தப் படத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதையே தடுத்து விடுகின்றன.

Vignesh Shivan - Instagram Story
Vignesh Shivan - Instagram Story

அத்தோடு, லட்சியத்தோடு இருக்கும் இயக்குநர்களின் கனவுகளையும் சிதைத்து விடுகின்றன. 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தின் வசூல் முடிவை என்னால் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வித்தியாசமாகவும், முழுமையாகவும், அசலாகவும் இருக்க முயன்ற ஒரு நேர்மையான தமிழ்த் திரைப்படம் அது. பார்வையாளர்களிடமிருந்து இன்னும் கொஞ்சம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கத் தகுதியானது என்று நான் உணர்கிறேன்.

இதுபோன்ற ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்குப் பின்னால் இருக்கும் போராட்டங்களைப் பலர் பார்ப்பதில்லை. இதை எடுப்பது கடினமாக இருந்தது. அதை ரிலீஸ் செய்வது இன்னும் கடினமாக இருந்தது.

அத்தனை சவால்களையும் தாண்டி வந்த பிறகு, இது இப்படி முடிவடைவதைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது. உலக சினிமா வரலாற்றில் முதலில் வெளியானபோது ஏற்றுக்கொள்ளப்படாமல், பின்னாளில் கொண்டாடப்பட்ட எத்தனையோ சிறந்த திரைப்படங்கள் இருக்கின்றன என்ற எண்ணம் மட்டுமே இப்போது எனக்குச் சற்று ஆறுதல் அளிக்கிறது.

Vignesh Shivan - LIK
Vignesh Shivan - LIK

நேற்று, ஒரு இயக்குநர் என்னிடம் ஒரு விஷயத்தைக் கூறினார். அது என் மனதில் அப்படியே பதிந்துவிட்டது. அவர், "ஒரு படத்தின் வெற்றி, அதற்குள் இருப்பதைவிட, வெளியேதான் அதிகமாக இருக்கிறது" என்றார்.

அதாவது, ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது பெரும்பாலும் அதற்குள் என்ன இருக்கிறது என்பதை விட, அதைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஹீரோவாக இரண்டாவது படம் - கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' அபிஷன் ஜீவிந்த்!

'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் மூலம் பட்டிதொட்டி எங்கும் சென்று சேர்ந்தவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். அப்படத்தில் சிறியதொரு கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றவர், அடுத்ததாக நாயகனாகவே நடிக்கக் ... மேலும் பார்க்க

"தனுஷ் அரசியலுக்கு வருவாரா?" - தந்தை கஸ்தூரி ராஜா அளித்த பதில் என்ன?

தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா சென்னையில் நடந்த தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "இன்றைய பிள்ளைகளுக்கு படிப்... மேலும் பார்க்க

Mari Selvaraj: 'அந்த தருணம்'; இளையாராஜா - மாரி செல்வராஜ் கூட்டணி - வெளியான 'மஞ்சணத்தி' பட அறிவிப்பு!

மாரி செல்வராஜ் தன்னுடைய 6-வது படத்திற்கான பணிகளைத் தொடங்கிவிட்டார். துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோரை வைத்து மாரி செல்வராஜ் இயக்கியிருந்த 'பைசன் காளமாடன்' திரைப்படம், கடந்தாண்டு தீபாவளி வெள... மேலும் பார்க்க

Karuppu: சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் விஷ்ணுவுக்கு கார் பரிசளித்த சூர்யா; என்ன கார் தெரியுமா?

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான 'கருப்பு' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.இத்திரைப்படம் கிட்டதட்ட 300 கோடி வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.ஜி.கே விஷ்ணு'க... மேலும் பார்க்க

`LCU-வில் இணைந்த ரவி மோகன்' - லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய LCU-வில் அடுத்ததாக இணையவிருக்கும் திரைப்படம் 'பென்ஸ்'. இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவ... மேலும் பார்க்க

திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர் - பெண் தயாரிப்பாளர் புகாரின் பேரில் நடவடிக்கை

பெண் தயாரிப்பாளரை பலர் முன் மன்னிப்பு கேட்க வைத்து அவமானப்படுத்திய விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர்களான கதிரேசன், ராதாகிருஷ்ணன் இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு... மேலும் பார்க்க