செய்திகள் :

ஹீரோவாக இரண்டாவது படம் - கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' அபிஷன் ஜீவிந்த்!

post image

'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் மூலம் பட்டிதொட்டி எங்கும் சென்று சேர்ந்தவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். அப்படத்தில் சிறியதொரு கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றவர், அடுத்ததாக நாயகனாகவே நடிக்கக் கமிட் ஆனார்.

'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தில் அவருடைய உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கிய 'வித் லவ்' திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் அபிஷன் ஜீவிந்த்.

Abishan Jeevinth - Shiva Rajkumar Movie
Abishan Jeevinth - Shiva Rajkumar Movie

இவருடன் இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அப்படத்திற்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. அபிஷன் ஜீவிந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பைப் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இப்படத்தை இயக்குகிறார். அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அத்தோடு 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'ஹார்ட் பீட்' போன்ற திரைப்படம் மற்றும் சீரிஸ்களில் நடித்துப் பலருக்கும் பரிச்சயமான யோகலக்ஷ்மி, பிக் பாஸ் கானா வினோத் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

Abishan Jeevinth - Shiva Rajkumar Movie
Abishan Jeevinth - Shiva Rajkumar Movie

இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நடிகராக நடிக்கும் இரண்டாவது படத்திலேயே கன்னட சினிமாவின் உச்ச நடிகரான சிவராஜ்குமாருடன் அபிஷன் ஜீவிந்த் நடிப்பதற்குத் திரைத்துறையினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

"LIK படத்தின் வசூலை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" - விக்னேஷ் சிவன் கவலை

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், படத்திற்கு இணையத்தில் பரவிய விமர்சனங்கள் படத்திற்க... மேலும் பார்க்க

"தனுஷ் அரசியலுக்கு வருவாரா?" - தந்தை கஸ்தூரி ராஜா அளித்த பதில் என்ன?

தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா சென்னையில் நடந்த தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "இன்றைய பிள்ளைகளுக்கு படிப்... மேலும் பார்க்க

Mari Selvaraj: 'அந்த தருணம்'; இளையாராஜா - மாரி செல்வராஜ் கூட்டணி - வெளியான 'மஞ்சணத்தி' பட அறிவிப்பு!

மாரி செல்வராஜ் தன்னுடைய 6-வது படத்திற்கான பணிகளைத் தொடங்கிவிட்டார். துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோரை வைத்து மாரி செல்வராஜ் இயக்கியிருந்த 'பைசன் காளமாடன்' திரைப்படம், கடந்தாண்டு தீபாவளி வெள... மேலும் பார்க்க

Karuppu: சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் விஷ்ணுவுக்கு கார் பரிசளித்த சூர்யா; என்ன கார் தெரியுமா?

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான 'கருப்பு' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.இத்திரைப்படம் கிட்டதட்ட 300 கோடி வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.ஜி.கே விஷ்ணு'க... மேலும் பார்க்க

`LCU-வில் இணைந்த ரவி மோகன்' - லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய LCU-வில் அடுத்ததாக இணையவிருக்கும் திரைப்படம் 'பென்ஸ்'. இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவ... மேலும் பார்க்க

திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர் - பெண் தயாரிப்பாளர் புகாரின் பேரில் நடவடிக்கை

பெண் தயாரிப்பாளரை பலர் முன் மன்னிப்பு கேட்க வைத்து அவமானப்படுத்திய விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர்களான கதிரேசன், ராதாகிருஷ்ணன் இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு... மேலும் பார்க்க