செய்திகள் :

ஹெலிகாப்டர் விபத்து: `6 மணி நேரம் என் மார்பில் கிடந்தார்'- திருமணமான சில மணி நேரத்தில் பலியான மணமகன்

post image

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவில், திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மணமகன் மற்றும் ஹெலிகாப்டர் பைலட் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டேவ் பிஜி (Dave Fiji) என்பவருக்கும், ஜெஸ்னி (Jesni) என்ற பெண்ணுக்கும் டாசன்வில்லில் உள்ள The Revere என்ற திருமண மண்டபத்தில் சுமார் 400 விருந்தினர்கள் முன்னிலையில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. டேவ் பிஜி Delta Air Lines நிறுவனத்தில் துணை விமானியாகவும், ஜெஸ்னி செவிலியராகவும் பணியாற்றி வந்தனர்.

டேவ் பிஜி
டேவ் பிஜி

திருமணக் கொண்டாட்டங்கள் அனைத்தும் முடிந்த பிறகு, மணமக்கள் இருவரும் தங்களது தேனிலவு கொண்டாட்டத்துக்காக அட்லாண்டா நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காக அவர்களுக்கு ஒரு சிறப்பு வழிஅனுப்புதலாக, திருமண மேடையின் அருகிலிருந்தே DeKalb-Peachtree விமான நிலையம் நோக்கிச் செல்லும் Robinson R66 ரக ஹெலிகாப்டர் ஒன்றில் இருவரும் புறப்பட்டனர்.

மணமக்கள் பயணித்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அடர்ந்த வனப்பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. ஜெஸ்னி விபத்துக்குப் பின் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, தன் மார்பின் மீது சாய்ந்திருந்த கணவர் டேவ்வின் உடல் குளிர்ந்து போயிருந்ததையும், அவர் உயிரிழந்துவிட்டதையும் உணர்ந்துள்ளார். விபத்து நடந்து சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக இடிபாடுகளுக்கு இடையே சிக்கித் தவித்த மணமகள் ஜெஸ்னி, பின்னர் மீட்கப்பட்டு அட்லாண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக ஜெஸ்னிக்கு எலும்பு முறிவுகள் ஏதுமின்றி, லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

மணமக்கள்
மணமக்கள்

விபத்து நடப்பதற்கு முன்பாக, அங்கு பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் வானிலை மோசமாக இருப்பதை கவனித்த மணமகன் டேவ், 'Zero Visibility இருக்கும்போது நாங்கள் விமானத்தை இயக்க மாட்டோம், தற்போதைய சூழல் பறப்பதற்கு உகந்தது அல்ல' என்று பைலட்டிடம் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு அந்த ஹெலிகாப்டர் பைலட், நாம் சற்று கூடுதல் உயரத்தில் பறக்கலாம் என்று கூறி ஹெலிகாப்டரை இயக்கியதாக, சிகிச்சையில் இருக்கும் ஜெஸ்னி தெரிவித்துள்ளார்.

இந்த கோர விபத்து குறித்து அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மியான்மரை அதிர வைத்த வெடிவிபத்து: கட்டடம் தரைமட்டமாகி குழந்தைகள் உட்பட 45 பேர் பரிதாப பலி!

மியான்மர் நாட்டின் எல்லையோரக் கிராமம் ஒன்றில் உள்ள ஒரு பெரிய கட்டடத்தில், திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து ஒட்டுமொத்த உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுரங்க வேலைகளுக்காக அந்தப் பெரிய கட்டடத்திற்குள்... மேலும் பார்க்க

கேரளம்: பொழுதுபோக்கு பூங்கா ராட்டின விபத்து; காயம் அடைந்தவர்கள் குப்பை எடுக்கும் வாகனத்தில் மீட்பு?

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெம்பாயம் பகுதியில் ஹேப்பிலேண்ட் கேளிக்கை பூங்கா உள்ளது. அங்கு விடுமுறையில் ராட்டினங்கள் உள்ளிட்டவற்றில் பொழுதுபோக்கவும் கேரளம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்... மேலும் பார்க்க

புனே: லிப்ட் கதவில் 1.5 மணி நேரம் சிக்கி 7 வயது சிறுவன் உயிரிழப்பு; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சின்காட் ரோடு பகுதியில் உள்ள ரித்தி சித்தி குடியிருப்பு கட்டிடத்தில் சைலேஷ்(7) என்ற சிறுவன் தனது பெற்றோடு வசித்து வந்தான். அவன் கட்டிடத்திற்குக் கீழே வந்து தனது நண்பர... மேலும் பார்க்க

மும்பை: ஒரு கி.மீ. தூரத்தைக் குறைக்க குறுக்கு வழி; லாரி மீது கண்டெய்னர் மோதி 13 பேர் பலி

மும்பை அருகில் உள்ள தகானு தனிவாரி என்ற இடத்தில் லாரி ஒன்று திருமணத்திற்காக ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் 50 பேர் இருந்தனர். மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்... மேலும் பார்க்க

ஈரோடு: குடும்பத்துடன் குளிக்கச் சென்ற இடத்தில் சோகம் - பரிதாபமாக பறிபோன 3 உயிர்கள்

நாமக்கல் மாவட்டம் அவிநாசி பட்டியைச் சேர்ந்த தறிப்பட்டைறை தொழிலாளியான பெருமாள், மனைவி, குழந்தைகளுடன் பரமத்தி வேலூர் சித்தம்பூண்டிக்குச் சென்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குடும்பமாகச... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து: பயணிகள் வெளியேற்றம்; என்ன நடந்தது?

முற்றிலும் ஏ.சி.பெட்டிகளைக் கொண்ட ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் நாட்டின் தலைநகரில் இருந்து மாநிலத் தலைநகரங்களுக்கு இயக்கப்படுகிறது. நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் நிஜாமுதினுக்கு... மேலும் பார்க்க