செய்திகள் :

'Praise the Lord, அஸ்ஸலாமு அலைக்கும்'னு சொன்ன நீங்க ஏன்..?'- ராஜ்மோகனை சாடிய நயினார் நாகேந்திரன்

post image

'அனைவருக்குமான ஆட்சி' என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் இப்படி வெளிப்படையாக ஒவ்வாமையை காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனை சாடியிருக்கிறார்.

விஜய் - ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " நேற்று கரூரில் நடந்த விழாவில் “Praise the Lord, அஸ்ஸலாமு அலைக்கும்” என்று பிற மதத்தினரின் கடவுள்களை வணங்கிவிட்டு, இந்துக் கடவுள்களை வேண்டுமென்ற ஒதுக்கிய, உங்களைப் போன்ற இந்துமத வெறுப்பாளர்கள் உள்ளவரை, “மதநல்லிணக்கம்” என்பது சமூகத்தில் மருந்திற்கும் படராது. “அனைவருக்குமான ஆட்சி” என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் இப்படி வெளிப்படையாக ஒவ்வாமையை காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த ஆண்டு உங்கள் தலைவரைப் பார்க்க கரூரில் கூடிய கூட்டத்தில் சிக்கி, சின்னஞ்சிறு குழந்தைகள் உட்பட 41 பேர் அநியாயமாக உயிரிழந்தனர். அப்பொழுது நேரில் வந்து ஆறுதல் சொல்லத் திராணியின்றி ஓடி, ஒளிந்த நீங்களும் உங்கள் தலைவரும் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, நேற்றைக்கு தான் வழி கண்டுபிடித்து கரூருக்கு வந்தீர்கள்.

அப்படியிருக்கையில் வந்த வேலையை விட்டு விட்டு, ஆறுதல் கூறும் நிகழ்விலும் கூட, இந்துக்களின் மீது இப்படியொரு வன்ம அரசியலைத் தொடுக்கும் உங்களைப் போன்ற அழுகிய சிந்தனை கொண்டவர்களை தமிழகம் என்றுமே மன்னிக்காது.

காரணம், தமிழகம் அடிப்படையில் ஓர் ஆன்மீக பூமி. நாம் காலங்காலமாக போற்றிப் பாதுகாத்து வரும் நமது தமிழ் இலக்கியங்களும், புராணங்களும் சிவன், திருமால், முருகன் உள்ளிட்ட இந்துக் கடவுள்களையே ஆராதிக்கின்றன.

ஆனால், இவையனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, “வாக்கு வங்கி”யை மட்டுமே மனதில் வைத்து, உங்கள் தவெக அரசை இந்துக்களுக்கு எதிரான அரசாக நிலைநிறுத்தியுள்ள நீங்களும், அதை மௌனமாக ஆதரிக்கும் உங்கள் தலைமையும் கூடிய விரைவில் இதற்கான விளைவுகளை எதிர்கொள்வீர்கள்" என்று சாடியிருக்கிறார்.

"1987 வன்னியர் போராட்டத்தில் உயிரிழந்த 25 பேரின் வாரிசுகளுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்”- அன்புமணி

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணையை நேற்று(ஜுலை.10) முதல்வர் விஜய் வழங்கியிருந்தார். இந்நிலையில் “வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் பார்க்க

'அமித் ஷா, அஷ்வினி வைஷ்ணவ்வும் எனக்கு வாழ்த்து சொன்னங்க; தனிப்பட்ட முறையில் பாஜக மீது.!'- திருமா

காஞ்சிபுரத்தில் விசிக மண்டல செயற்குழு கூட்டம் நேற்று (ஜூலை. 10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திருமாவளவன் பாஜக குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. செயற்குழு கூட்டத்தில் பேசிய திருமாவளவன், " ... மேலும் பார்க்க

பள்ளியில் தவெக நிகழ்ச்சி: `அதிலென்ன இருக்கு... இது ஒன்னும் புதுசு இல்லை' - அமைச்சர் விஸ்வநாதன்

கரூரில் முதல்வர் விஜய் கலந்துகொண்ட த.வெ.க நிகழ்ச்சி, அரசு பள்ளியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதமானது. பல்வேறு கல்வி ஆர்வலார்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்கள... மேலும் பார்க்க

``ஒரிஜினல் களவாணி முதல்வர் விஜய்தான்: திமுக - அதிமுக கூட்டனி?" - டிடிவி தினகரன் `பளிச்' பதில்கள்!

தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தங்களது ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்திலேயே இயங்கி வருவதாக அ ம.மு.க தலைவர் டிடிவி தினகரன் விமர்சித்திருக்கிறார். மதுரையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற ... மேலும் பார்க்க

'ஜெயித்தவர்கள்,தோற்றவர்கள் சந்தித்துக் கொண்டதை யாரும் விவாதிக்கவில்லை, ஆனால்.!'- திருமா கூறியதென்ன?

காஞ்சிபுரத்தில் விசிக மண்டல செயற்குழு கூட்டம் நேற்று (ஜூலை. 10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திருமாவளவன் 'பாஜக எதிர்ப்பில் திமுக, தவெக இணைவதில் என்ன தவறு இருக்கிறது' என்று பேசியிருக்கிறார். விசிக தலை... மேலும் பார்க்க

"அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும்" - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என உத்தரவிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி, அரசு நிகழ்ச்சிகள் தொடங்கும் போது அந்தந்த மா... மேலும் பார்க்க