செய்திகள் :

Purushan: "சைலண்ட் & வைலண்ட் 'புருஷன்', கொல்கத்தாவில் ஷூட்" - அப்டேட்ஸ் பகிரும் திரைக்கதையாசிரியர்!

post image

'ஆம்பள', 'ஆக்ஷன்', 'மதகஜராஜா' படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக விஷால் - சுந்தர்.சி காம்போ இணைந்திருக்கிறது. இது குறித்த அறிவிப்பு 'மதகஜராஜா' பட ரிலீஸ் சமயத்திலேயே வந்திருந்தது.

நேற்று இயக்குநர் சுந்தர்.சி-யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

படத்தலைப்பை அறிவித்து நேற்றைய தினம் வெளியிட்டிருந்த ப்ரோமோவும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது.

Purushan Update
Purushan Update

'அரண்மனை 4', 'மூக்குத்தி அம்மன் 2' ஆகிய படங்களைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் இப்படத்திற்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

தமன்னா மீண்டும் சுந்தர்.சி இயக்கும் இப்படத்தில் நடிக்கக் கமிட்டாகியிருக்கிறார். கூடிய விரைவில் இதன் படப்பிடிப்பும் தொடங்கவிருக்கிறது.

எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஆடியன்ஸுக்காக 'புருஷன்' படத்தின் சில அப்டேட்களைத் தெரிவிக்க படத்தின் திரைக்கதையாசிரியர் வெங்கட் ராகவனிடம் குட்டி சாட் போட்டோம். சுந்தர்.சி-யின் படைப்புகளிலும் உடனிருப்பவர் இவர்.

நம்மிடையே பேசுகையில், "மறுபடியும் விஷால் சார் - சுந்தர்.சி சார் - ஹிப் ஹாப் தமிழா காம்போ ஒன்றிணைந்திருக்காங்க. அதே மாதிரி காமெடி, ஆக்ஷன், எமோஷன்னு அத்தனை கமர்ஷியல் விஷயங்களும் படத்துல இருக்கும்.

சுந்தர்.சி சார் டைரக்ட் பண்ணினாலே, அதுல முழுமையான ஃபேமிலி பேக்கேஜ் இருக்கும்னு எல்லோருக்கும் தெரியும். அந்த விஷயம் இதிலும் மிஸ் ஆகிடாமல் இருக்கும். மறுபடியும், சுந்தர்.சி சார் படத்துல தமன்னா நடிக்கிறாங்க. கதாபாத்திரமாகவே தமன்னா மேம்தான் செட் ஆனாங்க.

Venkat Ragavan with Sundar.C
Venkat Ragavan with Sundar.C

முழு படம் வெளியாகும் போது உங்களுக்கே அது தெரியும். 'அரண்மனை 4' திரைப்படம் மிகப் பெரிய அளவில் ஹிட் ஆகியிருந்தது. அதைத் தொடர்ந்து இதிலும் அவங்க நடிப்பது ரொம்ப சந்தோஷம்.

பிறகு, இப்போ சுந்தர்.சி சாரோட அனைத்து படங்களுக்கும் ஹிப் ஹாப் ஆதிதான் மியூசிக் போடுறார்.

இப்போ இந்த அட்டகாசமான காம்போவுக்குள்ள அவரும் என்ட்ரி கொடுத்திருக்கார்." என்றவர், "இந்தப் படத்துல விஷால் ஒரு பக்கம் சைலண்டான புருஷனாகவும் இருப்பாரு, அதே சமயம் வைலண்டான பக்கமும் அவருக்கு இருக்கும். நீங்க ப்ரோமோவுல பார்த்த விஷயங்கள் மாதிரியானதுதான் படத்துல இருக்கும்.

'இன்பம் பொங்கும் வெண்ணிலா' ரீமிக்ஸ் பாடல் 'ஆம்பள' பட சமயத்திலேயே பெரிய ஹிட் ஆகியிருந்தது. இந்தப் படத்துல வர்ற சண்டைக் காட்சியில லாஜிக்கலாக ஒரு பாடல் பயன்படுத்த வேண்டியதாக இருந்தது.

ஹிட் பாடலான அதையே பயன்படுத்துவோம்னு பண்ணினோம். ப்ரோமோ வெளியானதிலிருந்து முழுமையாகவே பாசிட்டிவ் கமெண்ட்ஸ்தான் மக்கள் கொடுத்திட்டு இருக்காங்க.

எங்கும் ஒரு சின்ன நெகடிவ் கமெண்ட்கூட இல்ல. மக்களுடைய எதிர்பார்ப்பையும் 100 சதவீதம் இப்படம் பூர்த்தி செய்யும். 'ஆம்பள', 'மதகஜராஜா' வரிசையில இந்த 'புருஷன்' படமும் இருக்கும்." என்றார் உற்சாகத்துடன்.

Purushan Updates
Purushan Updates

முன்பே இந்த ஸ்கிரிப்டை நாங்க ரெடி பண்ணி வச்சிட்டோம். 'மதகஜராஜா' ரிலீஸாகி பெரிய ஹிட் ஆன பிறகுதான் இந்தக் கதையை விஷால் சார் வச்சு பண்ணலாம்னு முடிவு பண்ணினோம்.

இப்போ ரைட்டிங் வேலைகளுக்கான டிஸ்கஷன்களும் ரொம்ப பரபரப்பா, சூப்பரா போயிட்டிருக்கு. பிப்ரவரி முதல் வாரத்துல கொல்கத்தாவுல முதல் கட்டப் படப்பிடிப்புக்குக் கிளம்புறோம்.

கொல்கத்தா, கோவாவுல படப்பிடிப்பு நடத்தவிருக்கோம். பிறகு சென்னையில ஒரு பெரிய செட் போடுறதுக்கும் திட்டமிட்டு வர்றோம். கூடிய விரைவில் சந்திப்போம்!" எனப் பேசினார்.

மங்காத்தா: 'தல ரசிகர்’களுக்காக 'தல ரசிகர்’களால் 'தல’ சினிமா! - 15 ஆண்டுகளுக்குமுன் விகடன் விமர்சனம்

அஜித், அர்ஜுன், த்ரிஷா, பிரேம்ஜி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா திரைப்படம், இன்று 15 ஆண்டுகளுக்கு பின்னர் ரீரிலீஸ் ஆகியுள்ளது. அஜித் ரசிகர்கள் இதனால் உற்சா... மேலும் பார்க்க

Mankatha: "க்ளைமாக்ஸை சொல்லிடாதீங்க"- மங்காத்தா ரீ-ரிலீஸ் குறித்து வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித், த்ரிஷா, அர்ஜுன் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படம் 'மங்காத்தா'. ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் இன்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது. அஜ... மேலும் பார்க்க

Arasan: வேகமெடுக்கும் 2வது கட்ட ஷூட்டிங்; 2 ஹீரோயின்கள்; சிலம்பரசனின் புது Getup; அசத்தும் அப்டேட்ஸ்

தமிழ் சினிமாவில் இப்போதைய 'அரசன்' சிலம்பரசன்தான். கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'அரசன்' முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டி மற்றும் மதுரையில் நடந்து முடிந்திருக்... மேலும் பார்க்க

"சோகமான காட்சிக்கு 1,2,3,4; கோபமான காட்சிக்கு A, B, C, D" - வைரலாகும் மாளவிகா மோகனின் பதில்

நடிகை மாளவிகா மோகனனிடம் நேர்காணல் ஒன்றில் பிற மொழிகளில் நடிப்பவர்களுக்கு இருக்கும் சவால் பற்றி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. "எந்த மொழியில் உங்களுக்கு ஆள... மேலும் பார்க்க

பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் காலமானார் - அதிகாலையில் உயிர் பிரிந்த சோகம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் சேர்த்து 40,000 க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கும் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார்... மேலும் பார்க்க