செய்திகள் :

Rajini: ``பெரும் மகிழ்ச்சியும், பெருமிதமும்'' - விருது பெற்ற ரஜினிகாந்தை வாழ்த்திய சீமான்

post image

கோவாவில் 56-வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) நவம்பர் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடந்தது. இந்த விழாவில், உலகம் முழுவதும் 81 நாடுகளிலிருந்து 240-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

இந்த நிலையில் சர்வதேச திரைப்பட விழா நாளான நவம்பர் 28 அன்று, சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால், திரைத்துறையைச் சேர்ந்தவர்களால் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்ததை கவுரவிக்கும் விதமாக ரஜினிகாந்த்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

ரஜினி
ரஜினி

இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் எக்ஸ் பக்கத்தில், ``'வாழ்நாள் சாதனையாளர்' விருதுபெற்ற தமிழ்த்திரை உலகின் உச்ச நட்சத்திரம் ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

கோவாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு திரைப்பட விழாவில் தமிழ்த்திரையுலகில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக திகழும் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட செய்தியறிந்து பெரும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன்.

மக்களை கவர்ந்திழுக்கும் தனித்துவமிக்க தம் கலை ஆற்றலால் திரைத்துறையில் இது வரை யாரும் சாதித்திடாத வகையில் தொடர் வெற்றி நாயகனாக 50 ஆண்டுகளாக திகழும் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் கலைப்பணி மிகுந்த போற்றுதற்குரியதாகும்.

திரைக்கலையில் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் அயராத உழைப்பும், ஒப்படைப்பும் திரைத்துறை மட்டுமின்றி எத்துறையிலும் சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறை பிள்ளைகள் பின்பற்ற வேண்டிய ஆகச்சிறந்த வாழ்வியல் பாடமாகும்.

'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெற்றுள்ள ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நெகிழ்ந்த அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Samantha: இயக்குநர் ராஜ் நிதிமொருவை கரம் பிடித்த சமந்தா! - கோவையில் நடைபெற்ற திருமணம்

நடிகை சமந்தாவுக்கும், ‘ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் நிதிமொருவுக்கும் இன்று கோவையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல்கள் ப... மேலும் பார்க்க

Kamal Haasan: "இன்னும் நான் அந்த நல்ல படத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்" - ஓய்வு குறித்து கமல் ஹாசன்

ஸ்டன்ட் இயக்குநர் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்காகத் தயாராகி வருகிறார் கமல் ஹாசன். இப்படத்திற்காக மலையாள சினிமாவிலிருந்து தொழில்நுட்பக் குழுவினரை அழைத்து வந்திருக்கிறார்கள். கூடிய விர... மேலும் பார்க்க

Thalaivar 173 அப்டேட் சொல்லுங்க! - பார்க்கிங் இயக்குநர் பதிவும்; ரசிகர்களின் கமென்ட்டும்

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பார்க்கிங்’. மக்களிடையே நல்ல வரவேற... மேலும் பார்க்க

"மாரி செல்வராஜ் தம்பி இல்லைன்னா நான் எப்படி இருந்திருப்பேன்னு தெரில - இது புளியங்குளம் கண்ணனின் கதை

மாரி செல்வராஜின் படங்களில் பிரதான கதாபாத்திரங்களைத் தாண்டி மற்ற அத்தனை துணைக் கதாபாத்திரங்களிலும் நடிப்பின் அறிமுகம் துளியும் இல்லாத ஊர் மக்களே இருப்பார்கள். ஆர்ப்பாட்டமில்லாத அவர்களின் யதார்த்த நடிப்... மேலும் பார்க்க

Suriya: "அவரின் மகன் என்பதே எனக்கான அடையாளம்" - தந்தை சிவகுமார் குறித்து சூர்யா நெகிழ்ச்சி

தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிவகுமாருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த நவ.28ஆம் தேதி வழங்கியிருக்கிறார்.ஓவியர், நாடக நடிகர், திரைப்பட நடிகர் இன்று ... மேலும் பார்க்க

December Releases: 'LIK, அகண்டா 2, தர்மேந்திராவின் கடைசிப் படம்' - டிசம்பர் ரிலீஸ் படங்கள் என்னென்ன?

ஆண்டின் இறுதி மாதம் வந்துவிட்டது! இந்தாண்டுக்கான லைனப்பில் வைக்கப்பட்ட பல திரைப்படங்களும் டிசம்பர் மாத ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன.அத்துடன் சில கிறிஸ்துமஸ் வெளியீட்டுத் திரைப்படங்களும் டிசம்பர் மாத... மேலும் பார்க்க