தென்கிழக்கு ஆசியாவில் பேரழிவு: வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 442 ஆ...
Samantha: இயக்குநர் ராஜ் நிதிமொருவை கரம் பிடித்த சமந்தா! - கோவையில் நடைபெற்ற திருமணம்
நடிகை சமந்தாவுக்கும், ‘ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் நிதிமொருவுக்கும் இன்று கோவையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல்கள் பேசப்பட்டன.

இவர்கள் இணைந்திருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகப் பரவியது.
ஆனால், அது குறித்து சமந்தாவோ, ராஜ் நிதிமொருவோ எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.
தற்போது இவர்களுக்கு இன்று அதிகாலை கோவை ஈஷா யோக மையத்திலுள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
இன்று காலை முதல் தகவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில் நடிகை சமந்தா அதை உறுதிப்படுத்தி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.
திருமணம் எளிமையான முறையிலேயே இன்று நடைபெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள். சமந்தாவுக்கு நெருக்கமான 30 பேர் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார்களாம்.
வாழ்த்துகள் சமந்தா - ராஜ் நிதிமொரு












.jpg)

