செய்திகள் :

Rajinikanth : 'தூரமா நின்னு கைக்கொடுப்பாருன்னு நினைச்சேன், ஆனா...' - நெகிழும் பத்மா!

post image

தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்து பாராட்டுகளைப் பெற்ற தூய்மைப் பணியாளரை பத்மா நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் அழைத்துப் பேசி பரிசு வழங்கி கௌரவித்திருக்கிறார்.

குடும்பத்தினருடன் பத்மா
குடும்பத்தினருடன் பத்மா

ரஜினிகாந்தை பார்த்த மகிழ்ச்சி விலகாமல் இருந்த பத்மாவை தொடர்புகொண்டு பேசினேன். 'எங்கிட்ட போன் கிடையாது. என் வீட்டுக்காரர் மட்டும்தான் போன் வச்சிருக்காரு. ரஜினி சார் சைடுல இருந்து நேத்து கூப்பிட்டு விஷயத்தை சொல்லியிருக்காங்க.

சாயங்காலம் வீட்டுக்கு வந்த உடனேயே 'தலைவர் உன்னைய பார்த்து பாராட்டணும்னு சொல்றாராம். நாளைக்கு போறோம்'னு சொன்னவுடனேயே பயங்கர சந்தோஷமாகிடுச்சு. நைட்டெல்லாம் தூக்கமே வரல. நாம படிக்காதவங்க, அவரை பார்த்து எப்படி கௌரவமா பேசுறதுன்னு ஒரே குழப்பம். அத்தோடதான் குடும்பமா காலையில கிளம்பி போயஸ்கார்டன் போனோம்.

பத்மா
பத்மா

சும்மா பாராட்டுவாரு, தூரமா நின்னு கைக்கொடுப்பாருன்னு நினைச்சேன். ஆனா, போன உடனேயே என்னையை அரவணைச்சு தோள்ல தட்டிக் கொடுத்து பாராட்டுனாரு. அதுலயே நெகிழ்ந்துட்டேன். 'நீங்க செஞ்சது ஒரு சேவை. எல்லாரும் உங்களை மாதிரியே நல்ல மனசோட இருக்கணும். இந்தப் புண்ணியம்லாம் உங்க பேரப் புள்ளைங்களுக்கு பெரிய சந்தோஷமா திரும்ப கிடைக்கும்'னு மனப்பூர்வமா வாழ்த்துனாரு. ரெண்டு பேத்திகளையும் கட்டிப்பிடிச்சு கொஞ்சி போட்டோ எடுத்துக்கிட்டாரு. என் வீட்டுக்காரரும் அவங்க அண்ணனும் அவரோட தீவிர ரசிகருங்க. அவங்க கிட்டயும் உட்காந்து பேசுனாரு. 'நீங்கெல்லாம் முன்னுதாரணமானவங்க'னு சொல்லி ஒரு செயினையும் பரிசா கொடுத்தாரு. அவரோட எவ்வளவோ படங்களை பார்த்து ரசிச்சிருக்கோம். அவரே கூப்பிட்டு பாராட்டுறதுலாம் நடக்கும்னு என்னைக்கும் நினைச்சதில்ல. அது நடந்ததுல ரொம்ப சந்தோஷம்' என்றார்.

2026 ASCRS Foundation: டாக்டர் அரவிந்த் ஹரிப்ரியா, R.வெங்கடேஷ்க்கு Chang-Crandall மனிதாபிமான விருது!

டாக்டர் அரவிந்த் ஹரிப்ரியா மற்றும் டாக்டர் R. வெங்கடேஷ் அவர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான Chang-Crandall மனிதாபிமான விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ASCRS Foundation வாரியம் பெருமையுடன் அறிவிப்பது என்... மேலும் பார்க்க

`சொன்ன சொல்லை மீறிவிட்டீர்கள்'- ரன்வீர்சிங், ரோஹித் ஷெட்டிக்கு மீண்டும் பிஷ்னோய் கேங்க் மிரட்டல்!

மும்பையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்த நபர் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தி இருந்தார். ரன்வீர்... மேலும் பார்க்க

love chocolate: ஊட்டியில் காதல் மழை - இதய வடிவ சாக்லேட்டுகள் வைரல்!

இதய வடிவ சாக்லேட்டுகள் வைரல்இதய வடிவ சாக்லேட்டுகள் வைரல்இதய வடிவ சாக்லேட்டுகள் வைரல்இதய வடிவ சாக்லேட்டுகள் வைரல்இதய வடிவ சாக்லேட்டுகள் வைரல்இதய வடிவ சாக்லேட்டுகள் வைரல்இதய வடிவ சாக்லேட்டுகள் வைரல்இதய ... மேலும் பார்க்க

`நடைபாதையில் சென்ற பைக்; காலால் தடுத்து நிறுத்திய மூதாட்டி' - அவ்வை சண்முகி என புகழும் நெட்டிசன்கள்!

கேரளாவில் சாலை ஒன்றில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நெரிசலாக நின்றுகொண்டிருந்த நிலையில், நடைபாதையில் சில பைக்குகள் வேகமாக சென்றுகொண்டிருந்தன. அப்போது நடைபாதையில் மூதாட்டி ஒருவர் நடந்து வந்துகொண்டிருந்தார்.... மேலும் பார்க்க

அளவுக்கு அதிகமான மருந்து கொடுத்த டாக்டர்கள்? எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்தபோது உயிரிழந்த 6 வயது சிறுவன்

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கே.பி.ஹெல்த்கேர் சென்டருக்கு 6 வயது சிறுவனை அவனது தந்தை பிரசாந்த் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க அழைத்து வந்தார். டாக்டர்கள் அச்சிறுவனுக்கு ஊசி போட்டு ஸ்கேன் ... மேலும் பார்க்க