செய்திகள் :

Ramayana: "ராமாயணா முதல் பாகத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.4000 கோடி கிடையாது!" - கணக்கு சொல்லும் யஷ்

post image

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படம், இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட் முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படமாகப் பேசப்பட்டு வருகிறது.

Ramayana Movie
Ramayana Movie

இப்படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ. 4,000 கோடி எனத் தெரிவித்திருந்தார்.

"இந்தப் படம் எப்படி இவ்வளவு பெரிய வசூலைச் செய்து லாபம் ஈட்டும்?" என்ற கேள்விக்குச் சமீபத்திய பேட்டியில் நடிகர் யாஷ் விளக்கமளித்திருக்கிறார்.

அவர், "ரூ. 4,000 கோடி என்பது 'ராமாயணம் பாகம் 1' படத்திற்கான பட்ஜெட் மட்டும் கிடையாது. இது பலருக்கும் இருக்கும் ஒரு தவறான புரிதல். இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து.

இந்த ரூ. 4,000 கோடி என்பது இரண்டு பாகங்களுக்குமான தயாரிப்புச் செலவு மற்றும் விளம்பரத்திற்கான செலவுகளை உள்ளடக்கியது. ஹாலிவுட்டில் ஒரு படத்தின் தயாரிப்புச் செலவிற்கு நிகராகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ உலகளவில் விளம்பரம் செய்யச் செலவழிப்பார்கள்.

நடிகர் யஷ்
நடிகர் யஷ்

ஏனென்றால், அது உலக சந்தையைக் குறிவைக்கிறது. அதேபோலத்தான் இதிலும் செலவிடப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கப்போகும் வருவாயும் உலகளாவிய அளவில்தான் இருக்கும்.

நாம் முயற்சி செய்யாவிட்டால் வேறு யாராவது இதைச் செய்துவிடுவார்கள். 'ராமாயணம்' மற்றும் எனது அடுத்த படமான 'டாக்ஸிக்' என இரண்டு படங்களுமே இந்திய சினிமாவை சர்வதேச தளத்திற்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் தான்," என்று பகிர்ந்துகொண்டார்.

குளிர்பானத்தில் மயக்க மருந்து; 33 வயது நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த 73 வயது இயக்குநர்

பாலிவுட் படங்களான 'படே தில் வாலா' (Bade Dil Wala) மற்றும் 'ஜோரு கா குலாம்' (Joru Ka Ghulam) உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஷகீல் நூரானி (73). திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான ஷகீல் நூரானி மீது ... மேலும் பார்க்க

Spotify: முதல் முயற்சி; ஸ்பாட்டிஃபையில் வெளியாகும் முதல் குறும்படம்! - பிஜாய் நம்பியார் மனைவி பேட்டி

ஆடியோ வடிவத்திற்கு என பிரத்யேகமாக இயங்கி வந்த 'ஸ்பாட்டிஃபை' தளத்தில், இப்போது குறும்படங்களும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. 'டுயட்' என்ற குறும்படத்தை ஸ்பாட்டிஃபை தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த... மேலும் பார்க்க

Pradeep Rawat: ரத்தப் புற்றுநோயால் 'கஜினி' பட வில்லன் காலமானார்

'லகான்', 'கஜினி', 'வீரம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் பிரதீப் ராவத் நேற்று காலமானார். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். இவருக்கு வயது 74. ... மேலும் பார்க்க

Ramayana: "அந்தச் சம்பவத்துக்காக மட்டுமே சூர்ப்பணகை நினைவுகூரப்படுகிறார்; ஆனா..."- ரகுல் ப்ரீத் சிங்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகத்தின் டிரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. இப்படத்தில் சூர்ப்பணகை கதாபாத்திரத்தில் நடிகை ரகுல் ப... மேலும் பார்க்க

Gen Z: "இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லாதீர்கள்" - விமர்சனங்களுக்கு கங்கனா ரனாவத் பதில்

நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், சமீபத்தில் Gen z இளைஞர்களின் போராட்ட முறைகள் மற்றும் வாழ்க்கை முறையை விமர்சித்து பேசிய சில கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையையும் ... மேலும் பார்க்க

Ramayana: "முழுமையான நேர்மையோடு அணுகுவதே எனது பொறுப்பாக இருந்தது" - ராமாயணா இயக்குநர்

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் நடித்திருக்கும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை ரிலீஸாக வருகிறது. திட்டமிடல்களுடன் உலகமெங்கும் இப்படத்தை ரிலீஸ் செய்திடவும் படக்குழு... மேலும் பார்க்க