செய்திகள் :

Ravi Mohan: "என்னைப் பற்றி 3 வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால்..." - பகிரும் ரவி மோகன்

post image

2025-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் ரவிமோகன் ரெட் கார்பெட் வரவேற்பில் நம்மிடையே சுவாரஸ்யமான சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ரவி மோகன்
ரவி மோகன்

ரவி மோகன், "ஒரு மனிதன் அவன் மேல் காட்டும் அன்பும் அக்கறையும் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமானது என்று நினைப்பவன் நான்.

நாம் எப்போது நம்மை நன்றாகப் பார்த்துக்கொள்கிறோமோ, அப்போது நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் நாம் நன்றாகப் பார்த்துக்கொள்ளத் தொடங்குவோம்.

நான் மகிழ்ச்சியாக இருந்தால் என்னுடன் இருப்பவர்களையும் என்னால் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அதுவும் மக்கள் என் மேல் காட்டும் அன்பு பரிசுகளுக்கும் மேலானது. அவர்களின் அன்பால்தான் நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். நான் நடித்த அனைத்து படங்களிலும் எனக்கு மிகவும் பிடித்தமான படம் 'ஜெயம்'தான்.

இன்னும் எவ்வளவு படங்கள் நடித்தாலும், அந்தப் படத்தால்தான் நான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். என் வாழ்க்கைக் கதையைத் திரைப்படமாக எடுத்தால் என் வாழ்க்கையில் நடந்த நாடகங்களே பெரும்பாலான காட்சிகளில் இடம்பெறும்.

ரவி மோகன்
ரவி மோகன்

நிம்மதி மற்றும் வெற்றி என்பதற்கு இடையில் நான் எப்போதும் நிம்மதியையே தேர்ந்தெடுப்பேன். வெற்றி என்று நான் கருதுவது மக்கள் என் மீது கொண்டிருக்கும் அன்பைத்தான்.

கூடவே, புகழ் மற்றும் மகிழ்ச்சிக்கு இடையில் நான் சந்தேகமில்லாமல் மகிழ்ச்சியைத்தான் தேர்வு செய்வேன்.

நான் நடிகன், தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி மக்களுக்கு என்னைப் பற்றி மூன்று வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் அன்பு, பாசம், கருணை மிகுந்தவன் என்பேன்" எனப் பகிர்ந்துகொண்டார்.

ரன் ரீரிலீஸ்: "விஜய் சார் 'ரன்' படத்தில் நடிக்காததற்குக் காரணம் இதுதான்" - லிங்குசாமி ஷேரிங்

இயக்குநர் லிங்குசாமியின் 'அஞ்சான்' திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு ரீரிலீஸ் ஆகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அவருடைய 'ரன்' படத்தையும் ரீரிலீஸுக்குத் தயார் செய்திருக்கிறார்.மாதவன், மீரா ஜாஸ்மி... மேலும் பார்க்க

அருள்வான்: 'ஆரவ்வால் எனக்கு பிரச்னை வந்துவிடக் கூடாது'ன்னு நினைச்சேன், ஏன்னா..!' - அருள்நிதி

இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், விடிவி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, சரவணன், உள்ளிட்ட பலர் நடித்திரு... மேலும் பார்க்க

அருள்வான்: "அருள்நிதி ஒரு படத்தில் நடிக்க சாதாரணமாக ஒப்புக்கொள்ள மாட்டார்" - காளி வெங்கட்

இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், விடிவி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, சரவணன், உள்ளிட்ட பலர் நடித்திரு... மேலும் பார்க்க

ரமணா: `இவன் மன்னிப்பை மறுத்தவன்!' | `சினி'ஸ்கோப் 04

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது`சினி'ஸ்கோப்தொடர்!ரமணா: மன்னிப்பை மறுத்தவன்!`சினி'ஸ்கோப் 04ஓர் இக்கட்டான சூழ்நிலையில் புரொஃபசர் ர... மேலும் பார்க்க

Gatta Kusthi 2: `அரசியலா மாத்தாதீங்க!' - ரெட் ஜெயன்ட் மூவீஸ் குறித்து விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் 'கட்டா குஸ்தி 2' படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இன்று சென்னையில் ரோட்டரி கிளப், சிறப்புக... மேலும் பார்க்க

Run Rerelease: "முதல்ல வேற ஹீரோயின் வச்சுதான் 4 நாள் ஷூட் பண்ணினேன்" - பகிரும் லிங்குசாமி

இயக்குநர் லிங்குசாமியின் 'அஞ்சான்' திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு ரீ-ரிலீஸ் ஆகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அவருடைய 'ரன்' படத்தையும் ரீரிலீஸுக்குத் தயார் செய்திருக்கிறார். மாதவன், மீரா ஜாஸ்... மேலும் பார்க்க