Messi: `அதை மெஸ்ஸி விரும்பவில்லை'- இந்தியா வருகைக்காக மெஸ்ஸிக்கு ரூ.89 கோடி ஊதிய...
RBI-ன் ஓரேயொரு மூவ்: வலுவான இந்திய ரூபாய்; ஓடி வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் - அது என்ன?
சில நாள்களாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது.
அது 91-ஐ தாண்டி எல்லாம் சென்றது. இந்த நிலையில் தான், நேற்று சந்தையின் முடிவில் 90.38-க்கு இறங்கி இந்திய ரூபாயின் மதிப்பு வலுவானது.
இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணத்தை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைத் தொட்டதையொட்டி, இந்திய ரிசர்வ் வங்கி நேற்று சந்தையின் ஆரம்பத்தில் இருந்தே டாலர்களை விற்று வந்தது. அப்படி 5 பில்லியன் டாலர்களை விற்றது.
இதனால், இந்திய ரூபாயின் மதிப்பு தானாக சந்தையில் வலுவானது.
ஓடி வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
இந்த ரூபாய் மதிப்பு வலுவினால், இந்திய சந்தையை நோக்கி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வந்திருக்கின்றனர்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைக்கு நேற்று வந்தது மிக முக்கிய நிகழ்வாகும்.
டிசம்பர் மாதம் தொடங்கி 17 நாள்களைக் கடந்துவிட்டோம்.
ஆனால், நேற்று தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் பெரியளவில் முதலீடு செய்துள்ளனர். அவர்கள் நேற்று கிட்டத்தட்ட ரூ.1,171 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர்.
தற்போது ஒப்பந்தம், உலக அளவிலான அறிக்கை என உலகளவில் சந்தையில் எந்த மாற்றமும் இல்லை. இருந்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைக்கு வந்த காரணம், இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுக்கும் என்பதனால் தான்".
பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள 'Vikatan Play'-ல் 'Opening Bell Show' தினமும் காலை கேளுங்கள்.




















