செய்திகள் :

RCB: 'PowerPlay விக்கெட்கள், ஷெப்பர்ட்டின் Impact, நல்ல பவுன்ஸ்' - வெற்றி குறித்து கேப்டன் பட்டிதார்

post image

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதியிருந்தன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்லும்.

தோல்வியைச் சந்திக்கும் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் குவாலிஃபையர் -2 போட்டியில் விளையாடும் எனும் நிலையில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றிருந்தது.

RCB
RCB

போட்டிக்குப் பின்னர் பேசிய அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது, ''இது எங்களுக்கு ஒரு சிறந்த போட்டியாக இருந்தது. குறிப்பாக பேட்ஸ்மேன்கள் இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய விதம் மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

நாங்கள் மைதானத்தில் எங்கள் உடல் மொழியால் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். அந்த மனநிலை ஒவ்வொரு பேட்ஸ்மேனிடமும் இருந்தது.

என்னுடைய பேட்டிங் பற்றி சொன்னால், ஆரம்பத்தில் 8 முதல் 10 பந்துகள் வரை பிட்ச் எப்படி நடக்கிறது, பந்து எப்படி வருகிறது என்பதைக் கவனிப்பேன். அதன்பிறகு தெளிவான மனநிலையுடன் விளையாடுவேன். விக்கெட்டைப் பற்றி அதிகம் கவலைப்பட மாட்டேன். எப்போதும் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கவே முயற்சிப்பேன்.

RCB

பந்துவீச்சு குறித்து சொல்ல வேண்டும் என்றால், இந்த பிட்ச்சில் பெரிய சிக்சர்கள் அடிப்பது எளிதல்ல. நல்ல பவுன்ஸ் இருந்தது. எங்கள் பந்துவீச்சாளர்கள் திட்டமிட்டபடி ஸ்டம்ப் லைனில் அதிகமாகப் பந்துவீசியது உதவியாக இருந்தது. GT அணியின் முக்கிய மூன்று பேட்ஸ்மேன்களையும் பவர் ப்ளேயிலேயே அவுட் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். அது வெற்றிகரமாக அமைந்தது.

ரோமரியோ ஷெப்பர்டை இம்பாக்ட் பிளேயராக கொண்டு வந்தது, நடு ஓவர்களில் அவர் எப்படி பந்துவீசுவார் என்பதைச் சோதிப்பதற்காகவே. இறுதிப்போட்டிக்குள் செல்லும் முன் அது நல்ல முயற்சியாக இருந்தது. இப்போது இறுதிப்போட்டிக்குத் தயாராக இருக்கிறோம்” என்று பேசியிருந்தார்.

RCB: "Data குழு தரும் சிறிய தகவல்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன" - புவனேஷ்வர் குமார் புகழாரம்

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதன் மூலம், 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பந்துவீச்சாளர் புவனேஸ்வ... மேலும் பார்க்க

'சாய் சுதர்சன் மட்டும் நின்னுருந்தா சீனே வேற..!' - குஜராத் கேப்டன் சுப்மன் கில்

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் பெங்களூரு vs குஜராத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 255 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி களமிற... மேலும் பார்க்க

IPL 2026 playoff: 'லாஜிஸ்டிக் நேபாளா...' - வெகுண்டெழுந்த RCB; குஜராத் டைட்டன்ஸ் தோற்றது எப்படி?

ரெண்டே ரெண்டு பேருக்கு இடையில்தான் போட்டி. அது யார் சிறந்தவர்கள் என்பதில் ஆர்சிபி பௌலர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் இடையிலானதுதான்.Play Offsடிஃபெண்டிங் சாம்பியன் - இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை தொடர்... மேலும் பார்க்க

100 மீட்டரை 10.09 விநாடிகளில் கடந்த இந்தியப் புயல்: யார் இந்த அதிவேக மனிதர் குரிந்தர்வீர் சிங்?

"இந்தியர்களுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கான மரபணு இல்லை; ஆகவே 400 மீட்டர் ஓட்டத்திற்கு மாறுவதுதான் நல்லது," என்று சொல்லும் பலரின் ஏளனங்களுக்கு வார்த்தைகளால் பதிலளிக்காமல், தனது கால்களின் வேகத்தா... மேலும் பார்க்க

வைபவ் சூர்யவன்ஷியின் `God Mode' சம்பவம் - லக்னோவை வீழ்த்தி ப்ளே-ஆஃபை நெருங்கிய ராஜஸ்தான்!

ஐபிஎல் 2026 தொடரின் பரபரப்பான 64-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிரட்டலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. RR vs LSGடாஸ்... மேலும் பார்க்க

'ருத்துராஜின் கேப்டன் பதவி பறிக்கப்படுகிறதா?' - ப்ளெம்மிங் என்ன சொல்கிறார்?

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்தது. நேற்றைய போட்டியில் தோற்றதன் மூலம் சென்னை அணி ஏறக்குறைய ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில், ... மேலும் பார்க்க